அஜய் முகர்ஜி
அஜய் குமார் முகர்ஜி (Ajoy Kumar Mukherjee) (15 ஏப்ரல் 1901-27 மே 1986)ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும் மற்றும் மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் தம்லக்கைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக மூன்று முறை குறுகிய காலத்திற்கு பணியாற்றினார்.
அஜய் முகர்ஜி | |
---|---|
2002இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் முத்திரையில் அஜய் முகர்ஜி | |
மேற்கு வங்காளத்தின் 3வது முதலமைச்சர் | |
பதவியில் 1 மார்ச் 1967 – 21 நவம்பர் 1967 | |
ஆளுநர் | பத்மசா நாயுடு தர்ம வீரா |
முன்னையவர் | பிரபுல்ல சந்திர சென் |
பின்னவர் | பிரபுல்ல சந்திர கோசு |
பதவியில் 25 பெப்ரவரி 1969 – 30 ஜூலை 1970 | |
ஆளுநர் | தர்ம வீரா தீப் நாராயண் சின்கா (acting) சாந்தி சுவரூப் தவான் |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி (முதலமைச்சராக பிரபுல்ல சந்திர கோசு) |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி (தானே முதலமைச்சராக இருந்தார்) |
பதவியில் 2 ஏப்ரல் 1971 – 28 ஜூன் 1971 | |
ஆளுநர் | சாந்தி சுவரூப் தவான் |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி (தானே முதலமைச்சராக இருந்தார்) |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி (முதலமைச்சராக சித்தார்த்த சங்கர் ராய்) |
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1951–1967 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | அஜய் மலாகர் |
தொகுதி | தம்லக் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1967–1968 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பிரபுல்ல சந்திர சென் |
தொகுதி | அராம்பாக் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1969–1977 | |
முன்னையவர் | அஜய் மாலாகர் |
பின்னவர் | விசுவநாத் முகர்ஜி |
தொகுதி | தம்லக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தம்லக், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தம்லக், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா) | 15 ஏப்ரல் 1901
இறப்பு | 27 மே 1986 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 85)
அரசியல் கட்சி | இந்திரா காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | பங்களா காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசு |
விருதுகள் | பத்ம விபூசண் (1977) |
சுயசரிதை
தொகுஇந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள தமுலக்கில் 1901 ஆம் ஆண்டில் பிறந்த அஜய் குமார் முகர்ஜி, 1942 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட சட்ட மறுப்பு நிகழ்ச்சியான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 1942 டிசம்பர் 17 அன்று நடைமுறைக்கு வந்த தாம்ரலிப்தா ஜாதியா அரசு (தாம்ரலிப்தா தேசிய அரசு) தலைவர்களில் ஒருவராக இருந்தார். விவேகானந்தரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். முன்னதாக இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த இவர், பின்னர் பங்களா காங்கிரசின் தலைவரானார். பங்களா காங்கிரசு 1960 மற்றும் 1970 களில் இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தது. இந்த இரண்டு அரசாங்கங்களிலும், மார்ச் முதல் நவம்பர் 1967 வரையிலும், மீண்டும் பிப்ரவரி 1969 முதல் மார்ச் 1970 வரையிலும் இவர் முதலமைச்சர் பதவியை வகித்தார்.
முதலமைச்சர்
தொகு1967 ஆம் ஆண்டில் அஜய் முகர்ஜி மற்றொரு காந்தியவாதியான பிரபுல்லா சந்திர சென்னை அரம்பாக் சட்டமன்றத் தொகுதியில் தோற்கடித்து, பிரபுல்லா சந்திரா சென்னுக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் முதலமைச்சரானார். அரம்பாக்கில் அஜய் முகர்ஜியின் வெற்றிக்கான காரணமான அரம்பாக்கில் அப்போதைய மாணவர் தலைவர் நாராயண் சி கோஷ் இருந்தார். நாராயண் கோஷ், அஜய் முகர்ஜியுடன் பல நாட்கள் படகில் சென்று 1968 ஆம் ஆண்டில் அரம்பாக் மற்றும் காத்தல் உட்பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்ளுக்கு பலவகையில் உதவினார்.
இந்திய தேசிய காங்கிரசில் சேர்தல்
தொகுநீண்டகால கூட்டாளியான சுசில் குமார் தாராவை விட்டுப் பிரிந்து பிரணப் முகர்ஜி போன்ற தனது நெருங்கிய சகாக்களுடன் அஜய் முகர்ஜி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இவருக்கு மறைந்த மூனாள் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் தனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக இப்பதவியை பிரணாப் முகர்ஜி வழங்க அஜய் முகர்ஜி கூறினார். பின்னர் பிரணாப் முகர்ஜி இந்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
விருது
தொகு1977 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]
இவரது சகோதரர் விசுவநாத் முகர்ஜி, இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜியின் கணவராவார். அஜயின் சகோதரரின் மகள் கல்யாணி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மோகன் குமாரமங்கலத்தை மணந்தார்.
இறப்பு
தொகுமுகர்ஜி 1986 மே 27 அன்று கொல்கத்தாவில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padm Bibhusan Awardees". My Indian, My Pride. India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2008-07-30.
வெளி இணைப்புகள்
தொகு- Sumanta Banerjee. "THE NAXALITES: THROUGH THE EYES OF THE POLICE: Book review". Parabaas Inc. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
- Ruud, Arild Engelsen (1 January 1994). "Land and Power: The Marxist Conquest of Rural Bengal". Modern Asian Studies 28 (2): 357–380. doi:10.1017/s0026749x00012440.
- [1]