தர்ம வீரா

இந்திய அரசு அலுவலர்

தர்ம வீரா (Dharma Vira) , (இந்தியக் குடிமைப் பணி) (20 ஜனவரி 1906 - 16 செப்டம்பர் 2000) ஒரு இந்திய அரசு ஊழியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் ஆளுநராக பணியாற்றினார். வீரா இந்திய அரசின் அமைச்சரவைச் செயலாளராகவும் பணியாற்றினார்.

தர்ம வீரா
1966இல் தர்ம வீரா
மைசூரின் 5வது ஆளுநர்
பதவியில்
23 அக்டோபர் 1970 – 1 பிப்ரவரி 1972
முதலமைச்சர்வீரேந்திர பட்டீல்
முன்னையவர்கோபால் சுவரூப் பதக்
பின்னவர்மோகன் லால் சுகாதியா
மேற்கு வங்காளத்தின் 5வது ஆளுநர்
பதவியில்
1 ஜூன் 1967 – 1 ஏப்ரல் 1969
முதலமைசர்அஜய் முகர்ஜி
பிரபுல்ல சந்த்ர கோஷ்
முன்னையவர்பத்மசா நாயுடு
பின்னவர்தீப் நாராயண் சின்கா (பொறுப்பு)
அரியானாவின் முதலாவது ஆளுநர்
பதவியில்
1 நவம்பர் 1966 – 14 செப்டம்பர்r 1967
முதலமைச்சர்பி. டி. சர்மா
வீரேந்தர் சிங்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்வீரேந்திர நாராயணன் சக்ரவர்த்தி
பஞ்சாப்பின் 7வது ஆளுநர்
பதவியில்
27 ஜூன் 1966 – 1 ஜூன் 1967
முதலமைச்சர்ராம் கிஷன்
கியானி குர்முக் சிங் முசாபிர்
குர்நாம் சிங்
முன்னையவர்சர்தார் உஜ்ஜல் சிங்
பின்னவர்மெகர் சிங்h (பொறுப்பு)
8வது இந்திய அமைச்சரவைச் செயலாளர்
பதவியில்
18 நவம்பர் 1964 – 27 ஜூன் 1966
பிரதமர்லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா (பொறுப்பு)
இந்திரா காந்தி
முன்னையவர்எஸ். எஸ். கேரா
பின்னவர்தத்தாத்ராய ஸ்ரீதர் ஜோஷி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஜனவரி 1906
பிஜ்னோர், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 2000(2000-09-16) (அகவை 94)
புது தில்லி, இந்தியா
துணைவர்தயாவதி கங்கா
பெற்றோர்(s)ராஜா ஜ்வாலா பிரசாத்,
பாக்யதி தேவி
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகம்
முயர் மத்தியக் கல்லூரி
விருதுகள்பத்ம விபூசண்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தர்ம வீரா, 1906 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பிஜ்னோரில் ராஜா ஜ்வாலா பிரசாத் மற்றும் பாக்யாதி தேவிக்கு மகனாகப் பிறந்தார். 1929 மற்றும் 1930 க்கு இடையில் படிக்க லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு, அலகாபாத்தில் உள்ள முயர் மத்திய கல்லூரியில் படித்தார். அக்டோபர் 1930 இல் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். [1] நவம்பர் மாதம் இந்தியா திரும்பினார்.

1932 இல் தயாவதி கங்கா ராம் என்பவரை மணந்தார். பின்னர் உத்தரபிரதேசத்தில் நீதிபதியாக இருந்தார். ஆனால் 1941 முதல் மத்திய இந்திய அரசாங்க விவகாரங்களில் அதிக ஈடுபாடு காட்டினார்.

அரசுப் பணிகள் தொகு

இவர் இரண்டாம் உலகப் போரின்போது இறக்குமதிக்கான துணைத் தலைமைக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றினார். மேலும் 1945 இல் இந்தியாவின் ஜவுளி ஆணையராக இருந்தார். ஐக்கிய ராச்சியத்தின் 1946 புத்தாண்டு கௌரவத்தில் கௌரவிக்கப்பட்டார். [2]

சுதந்திரத்திற்குப் பிறகு, ஜவகர்லால் நேருவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். மேலும் 1947 இல் இந்திய அமைச்சரவையின் இணைச் செயலாளராக இருந்தார். பின்னர் 1950-51 ஜவகர்லால் நேருவின் முதன்மை தனிப்பட்ட செயலாளராகவும், 1951-3 இல் இலண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரின் வணிக ஆலோசகராகவும் ஆனார்.

1954 இல், செக்கோசிலோவாக்கியாவின் தூதராக நியமிக்கப்பட்டார். அதில் 1956 வரை பணியாற்றினார். பின்னர், இந்தியா திரும்பியதும் 1962 வரை புனர்வாழ்வு அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார் . மேலும், 1962 இல் வேலைகள், வீட்டுவசதி மற்றும் வழங்கல் அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார்.

1963 முதல் 1964 வரை தில்லியின் தலைமை ஆணையராகவும், பின்னர் 1964 முதல் 1966 வரை அமைச்சரவைச் செயலாளராகவும், மத்திய அமைச்சர்கள் குழுவின் செயலாளராகவும் இருந்து அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.


ஆளுநர் தொகு

கீழ் கண்ட மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றினார்:

1977-83 தேசிய காவல் ஆணையத்தின் தலைவராக இருந்தார். தரம் வீரா நவம்பர் 1973 முதல் செப்டம்பர் 1976 வரை இந்திய சாரணர் சங்கத்தின் தலைவராக]] பணியாற்றினார்.

விருதுகள் தொகு

1999 இல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசண் வழங்கி கௌரவித்தது. இவர் செப்டம்பர் 16, 2000 அன்று இறந்தார்.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ம_வீரா&oldid=3793534" இலிருந்து மீள்விக்கப்பட்டது