சித்தார்த்த சங்கர் ராய்

இந்திய அரசியல்வாதி (1920-2010)

சித்தார்த்த சங்கர் ராய் (Siddhartha Shankar Ray) (20 அக்டோபர் 1920 - 6 நவம்பர் 2010) ஓர் இந்திய வழக்கறிஞரும், இராசதந்திரியும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். அரசியல் வாழ்க்கையில் இவர் மத்திய கல்வி அமைச்சர் (1971-72), மேற்கு வங்க முதல்வர் (1972-77), பஞ்சாப் ஆளுநர் (1986-89), அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் (1992-96) உட்பட பல பதவிகளை வகித்தார். ஒரு கட்டத்தில் காங்கிரசு கட்சிக்கு முக்கிய பிரச்சனையாக இருந்தார்.[1] [2] [3] [4]

சித்தார்த்த சங்கர் ராய்
18வது அமெரிக்காவின் இந்தியத் தூதர்
பதவியில்
1992–1996
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்அபித் உசேன்
பின்னவர்நரேஷ் சந்திரா
22வது பஞ்சாப் ஆளுநர்
பதவியில்
2 ஏப்ரல் 1986 – 8 திசம்பர் 1989
முதல்மைச்சர்சுர்சித் சிங் பர்னாலா
முன்னையவர்சங்கர் தயாள் சர்மா
பின்னவர்நிர்மல் முகர்ஜி
6வது மேற்கு வங்க முதலமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1972 – 21 சூன் 1977
ஆளுநர்அந்தோனி லான்சிலோட் டயஸ்
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்ஜோதி பாசு
கல்வித் துறை அமைச்சர்
பதவியில்
1967–1972
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்வி. க. ர. வ. ராவ்
பின்னவர்எஸ். நூருல் அசன்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971–1972
முன்னையவர்சப்பளா கந்த பட்டாச்சார்ஜி
பின்னவர்மாயா ராய்
தொகுதிஇராஜ் கஞ்ச் மக்களவைத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1967-1971 – 1991-1993
முன்னையவர்தேவி பிரசாத் சட்டோபாத்யாய்
பின்னவர்அனில் சட்டர்ஜி
தொகுதிசௌரங்கி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1957–1967
முன்னையவர்மிரா தத்தா குப்தா
பின்னவர்தொகுதி ஒழிக்கப்பட்டது
தொகுதிபவானிபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-10-20)20 அக்டோபர் 1920
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 நவம்பர் 2010(2010-11-06) (அகவை 90)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாயா ராய்
முன்னாள் கல்லூரிமாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
இன்னர் தெம்ப்பிள் (பார் அட் லா)
தொழில்வழக்கறிஞர், இராசதந்திரி

சுயசரிதை தொகு

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கிய வைத்ய [5] குடும்பத்தில் இவர் பிறந்தார். தந்தை, சுதிர் குமார் ராய், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தார். தாயார் அபர்ணா தேவி, தேசியவாத தலைவர் சித்தரஞ்சன் தாஸ் - வசந்தி தேவி ஆகியோரின் மூத்த மகளாவார்.

கொல்கத்தாவின் மித்ரா நிறுவனம், பவானிபூர் கிளை, கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரி , கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி ஆகியவற்றின் படித்தார் . கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும், இவர் விளையாட்டிலும் மாணவ அரசியலிலும் தீவிரமாக இருந்தார். ஒரு விளையாட்டு வீரராக இவர் மாநிலக் கல்லூரியின் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். இவர் 1944இல் கல்லூரிகளுக்கிடையேயான போட்டியை வென்ற அணித் தலைவராக இருந்தார். மேலும், இவர் கொல்கத்தாவில் காளி படித்துறை கால்பந்து சங்கத்தில் தீவிர வீரராகவும் இருந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1939ஆம் ஆண்டில், எலியட் மற்றும் ஆர்டிங் பிறந்தநாள் கேடயங்களை வென்ற கல்லூரி கால்பந்து அணியின் தலைவராக இருந்தார். இவர் புல்வெளி டென்னிசு, மேசை டென்னிசு ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

1947 இல் இலண்டனில் உள்ள இன்னர் டெம்பிள் என்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினரானார்.[6] இலண்டனில் இருந்தபோது இந்திய சிம்கானா சங்கத்தில் துடுப்பாட்டம் விளையாடியுள்ளார்

தொழில் தொகு

1946இல் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு, கொல்கத்தா வழக்கறிஞர் சங்கத்தில் பின்னர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும் (பொறுப்பு) ஆன நீதிபதி இராமபிரசாத் முகர்ஜியின் இளையவராக சேர்ந்தார். 1954இல் இவர் கொல்கத்தாவில் மூன்று இளைய மத்திய அரசு ஆலோசகர்களில் ஒருவரானார்.

1957ஆம் ஆண்டில் இவர் மேற்கு வங்காளத்தின் பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிதான் சந்திர ராய் தலைமையில் அமைந்த மேற்கு வங்க அமைச்சரவையின் இளைய உறுப்பினரானார். இவர் மேற்கு வங்கத்தின் பழங்குடியினர் நல மற்றும் சட்டத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1962இல், இவர் மாநில சட்டமன்றத்திற்கு சுயேட்சை வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 இல், இவர் இந்திய அரசாங்கத்திற்கான கல்வி மற்றும் இளைஞர் சேவைகளின் மத்திய அமைச்சரவை அமைச்சரானார். இவர் இந்திய அரசின் மேற்கு வங்க விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார்.

1972 பொதுத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்ற பிறகு, இவர் மார்ச் 19, 1972 முதல் சூன் 21, 1977 வரை மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்தார். வங்காளதேச விடுதலைப் போருக்குப் பிறகு இவர் பதவியேற்றார். மேலும் இவரது நிர்வாகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை மீள்குடியேற்றும் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டது. நக்சலைட்டுகள் மீதான அடக்குமுறையும் இந்த காலகட்டத்தில் நடந்தது.[7]

பின்னர், இவர் ஏப்ரல் 2, 1986 முதல் திசம்பர் 8, 1989 வரை பஞ்சாப் ஆளுநராக பணியாற்றினார். 1991இல் தில்லியில் காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அமெரிக்காவிற்கு இந்தியாவின் தூதராக அனுப்பப்பட்டார். இவர் 1992 முதல் 1996 வரை அமெரிக்காவில் இருந்தார். அதற்கு முன், இவர் 1991-1992 வரை மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

நெருக்கடி நிலைக் காலத்தில் பங்கு தொகு

1975 முதல் 1977 வரை நெருக்கடி நிலைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சித்தார்த்த சங்கர் ராய்க்கு பெரும் பங்கு இருந்தது. இவர் இந்திராகாந்தியிடம் "உள்நாட்டு அவசரநிலை" ஒன்றை அமல்படுத்த முன்மொழிந்தார். மேலும் குடியரசுத் தலைவருக்கு பிரகடனத்தை வெளியிட ஒரு கடிதத்தையும் வரைந்தார். அரசியலமைப்பின் வரம்பிற்குள் இருக்கும் போது ஜனநாயக சுதந்திரத்தை எப்படி நிறுத்தி வைக்க முடியும் என்று காட்டினார். [8] [9]

ஓய்வு தொகு

ஓய்வு பெற்ற பின்னர், 1996க்கும் 2010க்கும் இடையில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக தனது சட்டப் பயிற்சிக்கு திரும்பினார்.

சித்தார்த்த சங்கர் ராய் நவம்பர் 2010 இல் தனது 90 வயதில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார். [10]

பெருமை தொகு

வரது நினைவாக "சித்தார்த்த சங்கர் ராய் அறக்கட்டளை" [11] என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை இவரது மனைவி மாயா ராயின் உரிய ஒப்புதலுடன் இராஜேஷ் சிரிமர் என்பவரால் உருவாக்கப்பட்டது. தொண்டு நிறுவனம் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இவரது நூற்றாண்டு பிறந்த நாளையும் கொண்டாடியது.

சான்றுகள் தொகு

  1. "Welcome to Sri Chinmoy Library". srichinmoylibrary.com. Archived from the original on 16 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
  2. "Siddhartha Shankar Ray ill – Yahoo! India News". in.news.yahoo.com. Archived from the original on 29 March 2010. பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
  3. "A Wily Survivor". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
  4. "There Are More Anti-American Indians Than Anti-Indian Americans". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
  5. Dutta-Ray, Sunanda (2016-06-04). "WB Polls: Mamata's triumph, a victory of class over caste". Free Press Journal (News Paper) (in ஆங்கிலம்). The Free Prees Journal. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.{{cite web}}: CS1 maint: date and year (link)
  6. Sengupta, Ranjana (25 September 1988). "A man of many faces". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880925&printsec=frontpage&hl=en. 
  7. Austin, Granville (1999). Working a Democratic Constitution - A History of the Indian Experience. New Delhi: Oxford University Press. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-565610-5. 
  8. Lt. Gen J.F.R. Jacob (2012). An Odyssey in War and Peace. 262: Roli Books Private Limited. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174369338. https://books.google.com/books?id=99BbBAAAQBAJ&q=%22minister+of+Tripura%2C+Sen+Gupta%2C+was+openly+encouraging+the+entry+of+Bangladeshis+into+Tripura+in+order+to+change+the+ethnic+balances%27&pg=PT120. 
  9. Narayan. "[Explained Why Did Indira Gandhi Impose Emergency In 1975?"]. https://www.thehansindia.com/hans/opinion/news-analysis/why-did-indira-gandhi-impose-emergency-in-1975-630015. 
  10. [1]
  11. "Siddhartha Shankar Ray Foundation". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்த_சங்கர்_ராய்&oldid=3708908" இலிருந்து மீள்விக்கப்பட்டது