மாயா ராய்

இந்திய அரசியல்வாதி

மாயா ராய் (Maya Ray) ஓர் வழக்கறிஞரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியுமாவார். 1972இல் மேற்கு வங்கத்தின் இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாயா ராய்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1972–1977
முன்னையவர்சித்தார்த்த சங்கர் ராய்
பின்னவர்முகமது அயாத்து அலி
தொகுதிஇராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி, (மேற்கு வங்காளம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-02-09)9 பெப்ரவரி 1927
திப்ருகார், அசாம், பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு11 மார்ச்சு 2013(2013-03-11) (அகவை 86)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சித்தார்த்த சங்கர் ராய்
வாழிடம்கொல்கத்தா

தொழில் தொகு

இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான இவரது கணவர் சித்தார்த்த சங்கர் ராய் 1972இல் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு அந்த இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைஉறுப்பினர் மறைந்த தாமஸ் ஜே. மான்டன் என்பவரால் ஒரு வழக்கறிஞராக இவர் ஒருமுறை "புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி" என்று குறிப்பிடப்பட்டார்,

இறப்பு தொகு

இவர் தனது கணவர் இறந்து இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 11 மார்ச் 2013 அன்று சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.[3]

சான்றுகள் தொகு

  1. The States. India News and Feature Alliance.. 1971. பக். 21. https://books.google.com/books?id=JN8iAQAAMAAJ. பார்த்த நாள்: 19 January 2019. 
  2. "Raiganj Lok Sabha Elections". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  3. "Nation Briefs". The Telegraph. 12 March 2013. http://www.telegraphindia.com/1130312/jsp/nation/story_16662098.jsp#.UUHgTVd0dCw. பார்த்த நாள்: 3 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_ராய்&oldid=3296807" இலிருந்து மீள்விக்கப்பட்டது