சுசில் குமார் தாரா

இந்திய அரசியல்வாதி (1911-2011)

சுசில் குமார் தாரா (Sushil Kumar Dhara) (மார்ச் 2,1911- 28,2011) பிரித்தானிய இந்தியாவில் புரட்சியாளராகவும், 1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு அரசியல் தலைவராகவும் இருந்தார்.[1]

சுசில் குமார் தாரா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1977–1980
முன்னையவர்சதீசு சந்த்ர சமந்தா
பின்னவர்சத்யகோபால் மிசுரா
தொகுதிதாம்லுக்
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1962–1971
முன்னையவர்பிரபுல்ல சந்த்ர கோசு
மகதாப் சந்த் தாசு
பின்னவர்அகிந்த்ரா மிசுரா
தொகுதிமகிசாதல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-03-02)2 மார்ச்சு 1911
மகிசாதல், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய மகிசாதல், மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு28 சனவரி 2011(2011-01-28) (அகவை 99)
மகிசாதல், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பங்களா காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
வேலைஇந்திய விடுதலைப் போராட்ட வீர, மக்களவை உறுப்பினர்

ஆரம்ப ஆண்டுகள்

தொகு

சுசில் குமார் தாரா 2 மார்ச் 1911 அன்று திக்ராம்பூரில் (தற்போதைய கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள மகிசாதலில் உள்ள தம்லக் அருகே) ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பு காலத்திலிருந்தே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1937 ஆம் ஆண்டில் வித்யாசாகர் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். பின்னர், 1940இல் காந்தியின் சத்தியாகிரக இயக்கத்தில் பங்கேற்றார். 1942 ஆகஸ்டில் பிரித்தானிய எதிர்ப்பு இயக்கத்தை பிரிக்கப்படாத மிட்னாபூரில் தொடங்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இந்த இயக்கம் தாம்ரலிப்தாவை பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுவிக்க உதவியது. மேலும் 1942 டிசம்பர் 17 அன்று இந்தப் பிராந்தியத்தில் ஒரு சுதந்திர அரசாங்கம் உருவாக்கப்பட்டது. பிரித்தானையர் ஆட்சிக் காலத்தில், தாரா 12 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறையில் கழித்தார்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சுசில் குமார் தாரா பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் 1962,1967 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்க சட்டமன்றத்தின் மகிசாதல் தொகுதியும் அடங்கும். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1966 இல் பங்களா காங்கிரசை உருவாக்கினார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பங்களா காங்கிரசு கட்சியின் வேட்பாளராக வெற்றி பெற்றார். மாநில அரசில் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர், பிரணப் முகர்ஜி, அஜய் முகர்ஜி போன்ற தனது நெருங்கிய சகாக்களுடன் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

பிற்கால வாழ்க்கையும் இறப்பும்

தொகு

சுசில் குமார் தாரா 1980களில் அரசியலில் இருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டார். நீண்டகால நோயால் 2011 ஜனவரி 28 அன்று தனது 99வது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sushil Dhara passes away at 101 | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Jan 29, 2011. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  2. Sen, S. N. (1997). History of the Freedom Movement in India (1857-1947) (in ஆங்கிலம்). New Age International. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1049-5.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_குமார்_தாரா&oldid=4004768" இலிருந்து மீள்விக்கப்பட்டது