கீத் மில்லர்
கீத் ரோஸ் மில்லர் (Keith Ross Miller 28 நவம்பர் 1919 - 11 அக்டோபர் 2004) ஓர் முன்னாள் ஆத்திரேலிய தேர்வுத் துடுப்பாட்ட வீரர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை விமானி ஆவார். மில்லர் ஆஸ்திரேலியாவின் பன்முகவீரர்களில்ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.[1] இவரது திறன் மற்றும் நல்ல தோற்றம் காரணமாக இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தார்.[2] ஆங்கில பத்திரிகையாளர் இயன் வூல்ட்ரிட்ஜ் மில்லரை துடுப்பாட்டத்தின் "தங்கப் பையன்" என்று அழைத்தார், இதனால் இவருக்கு " நுகெட் " என்று புனைபெயர் வந்தது.[3]
1956 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில், இன்வின்சிபில்ஸின் உறுப்பினராக இருந்தார்.ஓய்வு பெறும் போது பன்முகவீரர்களில் சிறந்த புள்ளிவிவரத்தினைக் கொண்டிருந்தார்.[1] இவர் பெரும்பாலும் துவக்க வீரரக அதிக அளவில் மட்டையாடினார். சில நேரங்களில் மூன்றாம் இடத்தில் விளையாடினார்.சிறந்த களத் தடுப்பு வீரராகவும் இவர் இருந்தார்.
துடுப்பாட்டத்தில் இருந்து விலகிய பின்னர் மில்லர் ஒரு வெற்றிகரமான ஆஸ்திரேலிய கால்பந்து வீரராகவும் இருந்தார் . செயின்ட் கில்டாவுக்காக விளையாடிய இவர் விக்டோரியன் மாநில அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார். இவர் செயின்ட் கில்டாவுக்காக 50 ஆட்டங்களில் விளையாடினார். அந்த அணிக்காக இவர் 1941 ஆம் ஆண்டில் வடக்கு மெல்போர்னுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் எட்டு கோல்களை உதைத்தார்.[4]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமில்லர் மேற்கு மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான சன்ஷைனில் 28 நவம்பர் 1919 இல் பிறந்தார்,[5] இவரின் தாய் லெஸ்லி மற்றும் தந்தை எடித் மில்லர் ஆவர். இவர்து பெற்றோர்களின் நான்கு குழந்தைகளில் மில்லர் இளையவர் ஆவார்.[6][7][8] ஆஸ்திரேலிய முன்னோடி ஏவியேட்டர் சகோதரர்களான கீத் மற்றும் ரோஸ் ஸ்மித் ஆகியோரின் பெயரால் இவருக்கு இந்தப் பெயர் வைத்தனர்.[8][9] இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது இவர் பிறந்தார் .[6][10] இவர்களின் தந்தை ஒரு வெற்றிகரமான உள்ளூர் துடுப்பாட்ட வீரராக இருந்தார். மேலும் சிறுவர்களுக்கு ஒரு மரபார்ந்த நுட்பத்துடன் விளையாடக் கற்றுக் கொடுத்தார்.[7] ஏழு வயதில், மில்லரின் குடும்பம் மெல்போர்னின் தென்கிழக்கில் எல்ஸ்டர்ன்விக் நகருக்கு குடிபெயர்ந்தது.[11][12]
தனது 12 வயதில், 15 வயதுக்குட்பட்ட விக்டோரியன் பள்ளி சிறுவர் துடுப்பாட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.[13] அந்த நேரத்தில், இவர் நான்கு அடி மட்டுமே வளர்ந்திருந்தார், உயரமான மற்றும் ஒரு மரத்தாலான மட்டையினை தூக்கி விளையாடும் அளவிற்கு [14] இவருக்கு சக்தி இல்லை.[14][15]
மில்லர் மெல்போர்ன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்,[16] ஆஸ்திரேலிய தேர்வுத் துடுப்பாட்ட அணியின் தலைவர் பில் உட்ஃபுல் இவரது கணித ஆசிரியராக இருந்தார்.[13] மில்லர் ஒரு சராசரியான மாணவர் ஆவார்.[17] இருப்பினும், உட்ஃபுல் மில்லரின் துடுப்பாட்ட திறன்களால் ஈர்க்கப்பட்டார்.[18] 14 வயதில், மில்லர் பள்ளியின் முதல் லெவன் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இவர் 44 ஓட்டங்களை எடுத்தார்.1934 ஆம் ஆண்டில், மில்லர் தனது அனைத்து பாடங்களிலும் தோல்வியுற்றார், உட்ஃபுல்லின் வடிவியல் வகுப்பிற்கான தனது இறுதித் தேர்வில் பூஜ்ஜியத்தைப் பெற்றார், மேலும் மீன்டும் அதே வகுப்பில் படிக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[19][20]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Brett, Oliver (11 October 2004). "Australia's greatest all-rounder". http://news.bbc.co.uk/sport1/hi/cricket/other_international/australia/3733322.stm. பார்த்த நாள்: 2 February 2009.
- ↑ Baum, Greg (11 October 2004). "Death of a hero". The Age. பார்க்கப்பட்ட நாள் 2 February 2009.
- ↑ "Keith Ross Miller, MBE (1919–2004)". Australian War Memorial. Archived from the original on 19 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 February 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The Argus 25.08.1941 p8
- ↑ Frith, David (12 October 2004). "Keith Miller". The Independent (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
- ↑ 6.0 6.1 Perry, p. 10.
- ↑ 7.0 7.1 Perry, p. 11.
- ↑ 8.0 8.1 Whitington, p. 42.
- ↑ Mallett, p. 61.
- ↑ Pollard, Jack (1989). Australian Cricket:The Game and the Players.
- ↑ Perry, p. 12.
- ↑ Whitington, p. 43.
- ↑ 13.0 13.1 Coleman, pp. 473–478.
- ↑ 14.0 14.1 Perry, p. 15.
- ↑ Perry, p. 16.
- ↑ Perry, p. 17.
- ↑ Perry, p. 18.
- ↑ Perry, p. 19.
- ↑ Perry, p. 21.
- ↑ Perry, p. 22.