கீர்த்தி ஜெயக்குமார்

கீர்த்தி ஜெயக்குமார் (Kirthi Jayakumar) (பிறப்பு: 1987 திசம்பர் 15) இவர் ஓர் இந்திய மகளிர் உரிமை ஆர்வலராகவும், சமூக தொழில்முனைவோராகவும், அமைதி ஆர்வலராகவும், கலைராகவும், வழக்கறிஞராகவும் மற்றும் எழுத்தாளராகவும் இருக்கிறார்.[1] இவர் ஒரு காமன்வெல்த் நட்டுகளின் உதவித்தொகைப் பெற்ற அறிஞராவார்.

கீர்த்தி ஜெயக்குமார்
2016இல் ஒரு நிகழ்ச்சியில் கீர்த்தி ஜெயக்குமார்
பிறப்புகீர்த்தி ஜெயக்குமார்
15 திசம்பர் 1987 (1987-12-15) (அகவை 37)
பெங்களூர், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஅமைதி மற்றும் பாலின சமத்துவ ஆர்வலர், ஆசிரியர் மற்றும் கலைஞர்

இவர் தி ரெட் எலிபென்ட் அறக்கட்டளை என்ற ஒரு அறக்கட்டடளையை நிறுவினார். இது கதை சொல்லல், குடிமக்களிடையே அமைதியை கட்டமைத்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கான செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. கொள்கை, சட்ட மற்றும் நிறுவன மட்டங்களில் பாலினம் குறித்த உலகளாவிய புரிதலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான பாலின பாதுகாப்பு திட்டத்தையும் இவர் நிறுவினார்.

சுயசரிதை

தொகு

இந்தியாவின் பெங்களூரில் கீர்த்தி பிறந்தார். தமிழ்நாட்டின் தலைநகராமான சென்னையில், ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆஃப் லா என்றக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[2][3]

கோஸ்டா ரிக்காவின் அமைதி பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு சமகால உலகில் நிலையான அமைதியில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] இவர் தற்போது கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் நம்பிக்கை, அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தில் ஒரு மாணவராக உள்ளார். காமன்வெல்த் உதவித்தொகையில் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஐ.நா. இணையவழி தன்னார்வலராகவும்,[5] மற்றும் ஒரு சுதந்திரமான பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கலைஞர்

தொகு

ஒரு கலைஞரன கீர்த்தி , "ஜென் டூடுல்களை" சரிபடுத்த பேனா மற்றும் மை ஆகியவற்றை பயன்படுத்துகிறார்.[6] பாலின சமத்துவம் மற்றும் அமைதிக் கல்விக்கான தனது செயல்பாட்டை வெளிப்படுத்த ஒரு வழிமுறையாக இவர் டூட்லிங்கைப் பயன்படுத்துகிறார்.[7]

டூடுல்

தொகு

இவர் இன்ஸ்ட்டாகிராம்அடிப்படையிலான ஒரு திட்டத்தை பெம்சைக்ளோபீடியா [8][9][10] என்ற பெயரில் நடத்துகிறார். அங்கு இவர் வயது மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பெண்களை ஊக்குவிக்கும் உருவப்படங்களை டூடுல் செய்கிறார். இந்த ஓவியங்களின் கீழ் அவர்களின் கதைகளை கையாளுகிறார்.[11] ஃபெமிசைக்ளோபீடியாவின் கதை 2017 பிப்ரவரியில் கதைக்கான விருதை வென்றது.[12]

ஃபெமிசைக்ளோபீடியாவின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மகளிர் வரலாற்று மாதத்திற்கான கண்காட்சியை கீர்த்தி தொகுத்து வழங்கினார்.[13][14][15]

செயற்பாட்டாளர்

தொகு

கீர்த்தி பெண்கள் உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் அமைதி மற்றும் மோதல்களில் ஒரு ஆர்வலரும் ஆவார். இவர் தி ரெட் எலிபென்ட் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். ஐ.நா இணைய வழி தன்னார்வத் திட்டத்தின் மூலம் "16 குடிமைச் சமூகங்கள் மற்றும் ஐ.நா. முகவர் நிறுவனங்களுடன்" [5] தன்னார்வத் திறன்களில் பணியாற்றியுள்ளார்.[16] இவர் டெக்கான் குரோனிக்கிள் / ஆசிய யுகத்தின் கட்டுரையாளருமாவார்.[17]

எழுத்தாளர்

தொகு

ஸ்டோரிஸ் ஆஃப் ஹோப் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியுள்ளார். சிரியாஸ் ரப்பிள் மற்றும் டூட்லர்ஸ் ஆஃப் டிமாஷ்க் - எ ஹார்ட் ரெஞ்சிங் டேல் ஆஃப் ஹோப் ஆகியவற்றின் தொகுப்பான தி டோவ்ஸ் லாம்ன்ட் என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். இவர் 2011இல் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் சேவைகள் பதக்கத்தையும் [18] 2012 மற்றும் 2013இல் ஐக்கிய நாடுகளின் இணையவழி தன்னார்வ விருதுகளையும் பெற்றுள்ளார்.[19][20]

நாடக அரங்கம்

தொகு

கீர்த்தி, ஃபிராங்க்லி ஸ்பீக்கிங் என்ற ஒரு நாடகத்தையும் எழுதினார். இது அன்னே ஃபிராங்கின் டைரி முடிவடையும் இடத்திலிருந்து தொடங்குகிறது. இந்த நாடகம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மோதல் மண்டலங்களைச் சேர்ந்த எட்டு இளம் பெண்களின் குரல்களை பதிவு செய்கிறது, மேலும் தி டைரி ஆஃப் அன்னே ஃபிராங்கின் பத்திகளுடன் இது பிரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. Jayakumar, Kirthi. "Three things I've learned about the real meaning of gender equality". The Guardian. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/global-development-professionals-network/2017/jan/12/three-things-ive-learned-about-the-real-meaning-of-gender-equality. 
  2. Lazarus, Susanna Myrtle. "Bringing change from Chennai to DC". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Bringing-change-from-Chennai-to-DC/article14424029.ece. 
  3. SETH, KUHIKA. "Legally innovative". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/society/legally-innovative/article2969833.ece. 
  4. "Inspirational Woman Interview: Kirthi Jayakumar". Inspirational Women Series. 15 November 2016. Archived from the original on 22 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "UN Online Volunteer Kirthi Jayakumar". Onlinevolunteering.org (in ஆங்கிலம்). Archived from the original on 19 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Zen doodling is something that one doesn't have to `learn' - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/life-style/spotlight/Zen-doodling-is-something-that-one-doesnt-have-to-learn/articleshow/52217898.cms?. 
  7. Badiyani, Darshith (2016-11-26). "Interview with Kirthi Jayakumar". Smiles here & Smiles there. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
  8. "Women Influence Community Forum". www.womeninfluence.club (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
  9. "Crusading for Peace: Kirthi Jayakumar is Storytelling a Difference" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2018-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180819082907/https://www.fwdlife.in/crusading-for-peace-kirthi-jayakumar-is-storytelling-a-difference/amp. 
  10. "Doodle tribute for my heroes". http://www.asianage.com/life/more-features/161217/doodle-tribute-for-my-heroes.html. 
  11. "Femcylopaedia Is A Labour Of Love – Immortalising Women Who Ought To Be Remembered". http://www.womensweb.in/2017/12/femcylopaedia-immortalising-women-who-ought-to-be-remembered-dec17wk3. 
  12. "INDIA: We Will Not Be Left Out of History" இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180927050640/https://www.worldpulse.com/en/voices-rising/stories/india-we-will-not-be-left-out-history#get-involved. 
  13. "Why Women Stories Matter". Facebook.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  14. "Express Publications Indulge". http://epaper.newindianexpress.com/1137885/Indulge-Chennai/17-03-2017#dual/1/1. 
  15. "US consulate hosts meet on 'Why women stories matter'". Trinity Mirror. http://www.trinitymirror.net/news/us-consulate-hosts-meet-women-stories-matter. 
  16. "Startup World And Sexual Harassment: Bizarre Or Normal? Women Speak Out". Shethepeople.tv. 2017-02-22. Archived from the original on 2017-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.
  17. "Deccan Chronicle/Asian Age". Asianage.com. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
  18. "2012 Chennai Press Releases". Chennai.usconsulate.gov. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
  19. Volunteers, United Nations. "United Nations Volunteers: Online Volunteers honoured for their 'outstanding' contributions to peace and sustainable development". Unv.org. Archived from the original on 10 October 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
  20. "UN Online Volunteer Kirthi Jayakumar". Onlinevolunteering.org. Archived from the original on 19 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_ஜெயக்குமார்&oldid=3928973" இலிருந்து மீள்விக்கப்பட்டது