கீழாத்தூர் நாடியம்மன் கோயில்

தமிழகத்தின் புதுக்கோட்டையில் அமைந்துள்ள இந்துக் கோயில்

அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி வட்டத்தில் புதுக்கோட்டைலிருந்து-பேராவூரணி,பட்டுக்கோட்டை-க்கான மாநில நெடுஞ்சாலையில் ஆலங்குடி அருகே சுமார் 5 கி.மீ தொலைவில் கிழக்கில் உள்ள கீழாத்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.மேலாத்தூர் மற்றும் கீழாத்தூர் நாட்டார்களின் காவல் தெய்வமாக விளங்கும், இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மது எடுப்பு திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆலயத்தின் எழில்மிகு முன்புற தோற்றம்

திருத்தல வரலாறு முதல் இன்றுவரை

தொகு

இத்திருத்தலமானது சுமார் 150 வருடங்களுக்கு முற்பட்டது என்று தலவரலாறு தெரிவிக்கிறது.கடந்த 2008 வருடம் இக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.கோவில் முழுதும் கல்லால் ஆன மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.இப்பகுதியில் மிகவும் தொன்மையும் பிரசித்தியும் பெற்ற தளங்களுல் இவ்வாலயமும் ஒன்று.இந்தக் கோவிலில் அந்தக் காலத்தில் ஐயர் ஒருவர் பூஜைகள் வைத்துக் கோவிலைப் பராமரித்து வந்திருக்கிறார். அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னரிடமிருந்து இந்தக் கோவில் பராமரிப்புக்காக "மானியம்" அதாவது பணம் பெற்றிருக்கிறார்கள்.இந்தக் கோவிலில் பூஜை வைத்த ஐயருக்கு வாரிசுகள் இல்லை. அந்த நேரத்தில் தென்னங்குடி (புதுக்கோட்டைக்கு வடக்கே) பகுதியிலிருந்து சன்னாசி மற்றும் சில பேர்கள் இந்தப் பகுதியில் வந்து கீழத்தூரில் தங்கியிருந்திருக்கிறார்கள். இவர்கள் “காரக்காட்டு வெள்ளாளர்கள்” என அழைக்கப்பட்டனர்.சன்னாசி மற்றவர்களும் இந்தச் சிவன் கோவிலுக்கு வரப்போகவும்.... பூஜை நேரத்தில் ஐயருக்கு உதவியாகவும் இருந்தார்கள். ஐயருக்கு வாரிசு இல்லாததால் “எனக்குப் பிறகு நீங்களே இந்தக் கோவிலைப் பார்த்துக்கொள்ளவும்” என அவர்களிடம் கேட்டுக் கொண்டார் ஐயர்.அதன்படி ஐயர் இறந்த பிறகு இந்தக் காரக்காட்டு வெள்ளாளர்கள் சாமிக்குப் பூஜைகள் வைத்து கோவிலை நிர்வாகம் செய்து வந்தனர். சிவன் கோவிலுக்குப் பூஜை வைக்க ஆரம்பித்ததிலிருந்து “வெள்ளாளர்கள” பூசாரிகள் (பண்டாரங்கள்) ஆனார்கள்.பிறகு கண்ணக்காரர்கள் எனும் கள்ளர் சமூகத்தினரிடம் இந்தக் கோவிலின் நிர்வாகம் வந்திருக்கிறது. கிராமத்துப் பெண்கள் “மதுஎடுப்பு” உற்சவத்தின் பொழுது பாடும் "மகராஜன் கண்ணக்காரன் மதுக்கிளப்ப தாமுசங்க” என்ற கும்மிப்பாட்டு இதை வலியுறுத்துகிறது.கோவிலை நிர்வகம் செய்த கண்ணக்காரருக்கு குழந்தை இல்லை. அதனால் அவர் அதே கள்ளர் இனத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் சேர்வை என்பவரைத் தத்து குழந்தையாக வளர்த்தார். அதன்பிறகு கண்ணக்காரரிடமிருந்த கோவில் சேர்வைகாரர்களுக்கு வந்தது. அதனால் இப்பொழுது கோவிலை முதல் கரைகாரர்கள் சேர்வைக்காரர்கள்

திருத்தலம் உருவான செய்மதி கதை

தொகு

முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் மான்,முயல்கள் மற்றும் பல காட்டு உயிரினங்கள் அதிகமாக காணப்பட்டதாகவும் அப்போது அந்த பகுதியில் சிலர் வேட்டைக்கு சென்றனறாம்.அந்த காலகட்டத்தில் மன்னரால் இயற்றப்பட்ட சட்டமான மானை வேட்டையாடினால் மரண தண்டனை என்பது இவர்களுக்கு தெரிந்த விஷயம்.இருந்தும் இவர்கள் இப்பகுதிக்கு வேட்டைக்கு சென்று மானை வேட்டையாடி அதன் கறிகளை சேமித்து வைத்து(தற்போது திருத்தலம் உள்ள இடத்தில்) பகிரப்படும் வேளையில் மன்னரின் பாதுகாவலர்கள் இவர்களை நெருங்கினர்.உயிருக்கு பயந்த வேட்டைக்காரர்கள் இறைவனை நோக்கி வேண்டிக்கொண்டது.

"இறைவா இக்கறிகள் அனைத்தும் மாட்டுக்கறியாக மாற்றி விடு உனக்கு இவ்விடத்தில் நாங்கள் ஆண்டுதோறும் இதே வேளையில் திருவிழா கொண்டாடுகிறோம்"

என்று வேண்டியதன் வாயிலாக அம்மன் தோன்றி அனைத்து கறிகளையும் மாட்டுக்கறியாக மாற்றியது என்பது செய்மதி கதை.அந்த விஷயத்தை இன்றும் இக்கோவில் விழாக்காலத்தின் போது ஒருநாள் திருவிழாவாக "கொலைவெட்டு பூசை" எனற பெயரில் கொண்டாடுவதை காணமுடிகிறது.அவர்கள் கறியை சேமித்த மரத்தடியானது இன்றும் உள்ளது மிக பழமையான பெரிய மரம் ஆலயத்தில் முன்புறத்தில் உள்ளது.கோவில் செப்பனிட மற்ற எல்லா மரங்களையும் அகற்றிய போதும் இம்மரத்தை மட்டும் அப்படியே வைத்துள்ளார்கள்.

பிரத்தியேக விழாக்கள்

தொகு

பாலை எடுத்தல்,பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் இத்திருத்தலத்தில் அதிகமாக காணப்படுகிறது.ஆலயத்தின் கிணற்றில் பால் போன்ற குடிநீர் ஆண்டு முழுதும் கையால் இறைத்து குடிக்கும் ஆழத்தில் காணப்படுவது இந்த ஆலயத்தில்தான்.

 
ஆலயத்தின் கிணறு

சில கட்டுப்பாடுகள்

தொகு

கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாத விலக்கான பெண்கள் இவ்வாலயத்தின் திருவிழா காலத்தில் முக்கிய தினங்களில் ஊருக்குள் இருப்பதில்லை இன்றும் இந்த விஷயம் பின்பற்றப்படுகிறது.

 
பனோரமா வடிவில் கிழக்கு பகுதி
 
பனோரமா வடிவில் மேற்கு பகுதி