கீ. பா. கணேஷ் குமார்
கீழோட்டே பாலகிருஷ்ண கணேஷ் குமார் (Keezhoote Balakrishna Ganesh Kumar) (பிறப்பு 25 மே 1967) ஓர் இந்திய நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2001 முதல் 2003 வரை கேரள அரசின் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார். 2011 முதல் 2013 வரை உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைச்சரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் திரைத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அப்பதவியை விட்டு விலகினார். மேலும் டிசம்பர் 2023 முதல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். 2001 முதல் பத்தனாபுரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கேரள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் கேரள காங்கிரசு (பி) கட்சியின் தலைவராக உள்ளார். கே. ஜி. ஜார்ஜ் இயக்கிய இரகல் (1985) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இவர் 100 க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கீ. பா. கணேஷ் குமார் | |
---|---|
கேரள அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 திசம்பர் 2023 | |
முன்னையவர் | ஆண்டனி ராஜூ |
தொகுதி | பத்தனாபுரம் |
கேரள காங்கிரசு (பி) கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மே 2021 | |
முன்னையவர் | இரா. பாலகிருஷ்ண பிள்ளை |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2001 | |
முன்னையவர் | கே. பிரகாஷ் பாபு |
தொகுதி | பத்தனாபுரம் |
வனத்துறை, விளையாட்டு மற்றும் திரைத்துறை | |
பதவியில் 23 மே 2011 – 1 ஏப்ரல் 2013 | |
கேரள அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் 2001 –2003 | |
நாயர் சமூகச் சங்கத்தின் தலைவர், பத்தனாபுரம் ஒன்றியம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 திசம்பர் 2021 | |
முன்னையவர் | ஆர். பாலகிருஷ்ண பிள்ளை |
நாயர் சமூகச் சங்கத்தின் இயக்குநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 சூன் 2023 | |
முன்னையவர் | களஞ்சூர் மதுu |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மே 1967 கொல்லம், கேரளம், இந்தியா |
அரசியல் கட்சி | கேரள காங்கிரசு (பி) (ஐக்கிய ஜனநாயக முன்னணி: 2001–2014) (சுயேட்சை 2014-2015) (இடதுசாரி ஜனநாயக முன்னணி: 2015–தற்போது வரை) |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வேலை | |
இணையத்தளம் | kbganeshkumar |
2001 ஆம் ஆண்டில் பத்தனாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணேஷ் குமார், அப்போதிருந்து இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். இவர் கேரளாவின் முன்னாள் அமைச்சர் இரா. பாலகிருஷ்ண பிள்ளையின் மகனாவார்.
அரசியல் வாழ்க்கை
தொகுமே 2001 இல், கணேஷ் குமார் பத்தனாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து கேரள காங்கிரசு (பி. டி. ஐ.) கட்சி சார்பில் கேரள சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது எதிராகப் போட்டியிட்ட கே. பிரகாஷ் பாபு என்பவரை 9,931 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]
2006 சட்டமன்றத் தேர்தலில், பத்தனாபுரத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கணேஷ் குமார், இந்த முறை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கே. ஆர். சந்திரமோகனனை தோற்கடித்து 11,814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2]
2011 சட்டமன்றத் தேர்தலில், பத்தனாபுரம் தொகுதியில் தனது மூத்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் போட்டியாளரான கே. ராஜகோபாலை தோற்கடித்து, 20,402 வாக்குகள் வித்தியாசத்தில் கணேஷ் குமார் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.[3][4] 2011 மே மாதம் உம்மன் சாண்டி அமைச்சரவையில் வனத்துறை, விளையாட்டு மற்றும் திரைத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவரது மனைவி யாமினி தங்கச்சி தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கைத் தொடர்ந்து 2013 ஏப்ரல் 7 அன்று அமைச்சரவையில் இருந்து விலகினார். 2016 சட்டமன்றத் தேர்தலில், கணேஷ் குமார் எல். டி. எஃப் வேட்பாளராகப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஜகதீஷை 24,562 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சொந்தத வாழ்க்கை
தொகுகணேஷ் குமார் ஒரு இந்து நாயர் குடும்பத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளை மற்றும் வத்சலா குமாரி ஆகியோரின் மகனாக 25 மே 1967 அன்று கேரளா கொல்லத்தில் பிறந்தார். திருவனந்தபுரம் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவராக இருந்தார்.[5][6][7][8]
மே 20,1994 அன்று, அவர் டாக்டர் யாமினி தங்கச்சியை மணந்தார். இவர் இளம்பருவ ஆரோக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றபோது சுகாதார அறிவியல் ஆய்வுகளுக்கான அச்சுத மேனன் மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். இந்த தம்பதிக்கு ஆதித்யன் மற்றும் தேவராமன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர், சொந்த காரணங்களுக்காக விவாகரத்து பெற்றனர். பின்னர் ஏசியாநெட்டில் பணிபுரியும் பிந்து மேனனை கணேஷ் 24 ஜனவரி 2014 அன்று மணந்தார். [9]
திரைப்பட வாழ்க்கை
தொகுகணேஷ் குமார் 1985 ஆம் ஆண்டு கே. ஜி. ஜார்ஜ் இயக்கிய இரகல் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் அந்த ஆண்டின் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து, துணை நடிகராக வெள்ளித்திரையில் தனது அடையாளத்தை உருவாக்கினார்.
மார்ச் 2008 இல், அமிர்தா தொலைக்காட்சியின் அலியான்மாரும் பெங்கன்மாரும் என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பரிந்துரைக்கப்பட்டார். சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாதவம் தொடரில் நடித்ததற்காக சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான மாநில விருதை வென்றார்.
சர்ச்சை
தொகு2013இல் நடைபெற்ற சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா எஸ் நாயரின் வழக்கறிஞர் பென்னி பாலகிருஷ்ணன், கணேஷ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த்தார்.[10]
2018 ஆம் ஆண்டில், சாலையில் ஒரு இளைஞரை இவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[11] அந்த ஆண்டின் பிற்பகுதியில் கணேஷ் குமார் ஒரு பள்ளி நிகழ்வில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியரை அடித்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala Assembly Election Results 2001". www.keralaassembly.org. Archived from the original on 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 18 August 2010.
- ↑ "Winners of Kerala Assembly elections 2006 (MLAs) with victory margins". www.keralaassembly.org. Archived from the original on 4 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
- ↑ "Constituency Wise Result Status". Archived from the original on 16 May 2011. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011.
- ↑ "Constituency Wise Result Status". Archived from the original on 16 May 2011. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011.
- ↑ "ബാലകൃഷ്ണ പിള്ള മുന്നോക്ക വികസന കോര്പ്പറേഷന് ചെയർമാനാകും...(Balakrishna Pillai will become the Chairman of Munnoka Development Corporation...)". Archived from the original on 20 May 2017. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
- ↑ "Balakrishna Pillai's wife passes away". 3 January 2018. Archived from the original on 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
- ↑ "Kerala Congress (B) chairman R Balakrishna Pillai passes away". The New Indian Express. 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "Members Profile". www.niyamasabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "MarunadanMalayalee.com". www.marunadanmalayalee.com. Archived from the original on 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
- ↑ "Ganesh Kumar added pages to Saritha S Nair's letter, says Fenny Balakrishnan". Asianet News Network Pvt Ltd. Archived from the original on 25 October 2020. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
- ↑ "Kerala: MLA Ganesh Kumar thrashes youth in road rage incident". The Week (in ஆங்கிலம்). Archived from the original on 25 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
- ↑ "Kerala MLA KB Ganesh Kumar tries to manhandle headmaster". The New Indian Express. 11 November 2018. Archived from the original on 21 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.