குஜ்ரன்வாலா மாவட்டம்

குஜ்ரன்வாலா மாவட்டம் (Gujranwala District), பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஒன்றாகும். 34,00,940 மக்கள் தொகையும், 3,622 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குஜ்ரன்வாலா நகரத்தில் அமைந்துள்ளது.

குஜ்ரன்வாலா மாவட்டம்
گُوجرانٚوالا
மாவட்டம்
பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தின் அமைவிடம்
பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்குஜ்ரன்வாலா
அரசு
 • District Coordination OfficerMuhammad Aamir Jan
பரப்பளவு[1]
 • மொத்தம்3,622 km2 (1,398 sq mi)
மக்கள்தொகை (1998)[2]:23
 • மொத்தம்34,00,940
 • அடர்த்தி701/km2 (1,820/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
வருவாய் வட்டங்கள்5
மொழிகள் (1981)97.6% பஞ்சாபி[3]

மக்கள் தொகையியல் தொகு

3622 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குஜ்ரன்வாலா மாவட்டத்தின், 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 34,00,940 ஆகும். அதில் ஆண்கள் 17,70,225 (52.05%) ; பெண்கள் 16,30,685 (47.95%) ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (1981 - 98) 2.85% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 939 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 108.6 ஆண்களுக்கு, 100 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 56.5% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 63.60 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 48.80 % ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் ஆக உள்ளனர். [4]

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 97.3% மக்களும், உருது மொழியை 1.9% மக்களும், மற்றும் பிற மொழிகளை 0.8% மக்களும் பேசுகின்றனர்.[2]:27

மாவட்ட நிர்வாகம் தொகு

குஜ்ரன்வாலா மாவட்டம் ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; குஜ்ரன்வாலா, குஜ்ரன்வாலா சதர், வசீராபாத், கமோங்கி மற்றும் நௌஷெரா வீர்கான் ஆகும்.

முக்கிய நகரங்கள் தொகு

குஜ்ஜரன்வாலா, அரூப், நந்திப்பூர், கியுலா திதர் சிங் நகரம், வசீராபாத் மற்றும் கமோங்கி முதலியன் இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.

போக்குவரத்து தொகு

பெசாவர்கராச்சியை இணைக்கும் முக்கிய இருப்புப் பாதை குஜ்ரன்வாலா மாவட்டத்தின் வழியாக செல்கிறது. சியால்கோட், ஹபீசாபாத், குஜராத் மாவட்டங்கள் தொடருந்து]]கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள் தொகு