குடமுழா
குடமுழா என்பது ஒரு பஞ்சமுக வாத்தியமாகும்.
வரலாறு
தொகுமுப்பது வகையான தோற்கருவிகள் தமிழர் வாழ்வோடு இணைந்திருந்தன. அவற்றில் குடமுழவம் எனப்படும் குடமுழா மங்கலக் கருவியாகும். சங்க நூல் மட்டுமல்லாமல் அண்மையில் வெளியான நூல்களிலும்கூட குடமுழவம் பற்றிய குறிப்புகள் உள்ளன. [1]
இசைக்கருவி, தாளக்கருவி
தொகுதொன்மையில் தமிழர்களின் இல்லங்களில் நிகழ்ந்த மங்கல நிகழ்ச்சிகளில் குடமுழா இருந்தது என்பதற்கும், இது யாழொடும், குழலொடும் இணைந்து ஒலித்தது என்பதற்கும் குறிப்புகள் உள்ளன. மங்கலக்கருவியாக இருந்த இது பின்னர் ஆடலுக்குரிய தாளக்கருவியாக ஆனது.[1]
வளர்ச்சி
தொகுஇந்தியாவின் பல்வேறு கலை மரபுகளிலும் ஒரு வாயுடைய குடமுழவம் இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் குறிப்பாகச் சோழ மண்டலத்தில் இக்கருவி பஞ்சமுக முழவமாக வளர்ச்சியடைந்தது. இன்றும் இம்மண்டலத்தின் ஏதோ ஒரு மூலையில் (திருவாரூரில்) இசைக்கப்பெற்று வாழ்ந்துகொண்டும் இருக்கிறது.[1]
மேலும் பார்க்க
தொகுஇவையையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள், சைவம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்