குடவி பறவைகள் சரணாலயம்
குடவி பறவைகள் சரணாலயம் (Gudavi Bird Sanctuary) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் சாகரா துணைப்பிரிவின் சொராபா வட்டத்தில், பனவாசி சாலையில், 16.01 கி.மீ. தூரத்தில் 0.74 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது.
குடவி பறவைகள் சரணாலயம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 14°26′23″N 75°0′45″E / 14.43972°N 75.01250°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிமோகா மாவட்டம் |
உட்கோட்டம் | சாகரா |
வட்டம் | சொரபா |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 வெவ்வேறு வகையான பறவைகள் இந்த இடத்தில் காணப்படுகின்றன. [1] [2]
ஒரு இயற்கை ஏரியும், மரங்களும் இந்த பறவைகளுக்கு தங்குமிடத்தைத் தருகின்றன. ஒரு சிறிய பருவகால ஏரியான இது மழைக்காலங்களில் பெரும்பாலும் தண்ணீரில் நிரப்பப்படுகிறது. பல்வேறு பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பருவங்களில் இடம் பெயர்கின்றன. பறவைகளை உன்னிப்பாகக் கவனிக்க பறவை பார்வையாளர்களுக்காக ஒரு தளமும் கட்டப்பட்டுள்ளது.
பலவிதமான பறவைகள்
தொகுஅணுகல்
தொகு- அருகிலுள்ள நகரம்: சொராபா (15 கி.மீ)
- அருகிலுள்ள இரயில் பாதை: சாகரா ஜம்பாகரு (45 கி.மீ) [3]
- அருகிலுள்ள விமான நிலையம்: ஹூப்ளி (165 கி.மீ)