குட்டி இளவரசன் (நூல்)

குட்டி இளவரசன் பிரெஞ்சு ​மொழியிலிருந்து ​தமிழாக்கம் ​செய்யப்பட்ட நூல். இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. 1943இல் வெளியான இந்த நூல், தமிழில் 1981இல் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. இந்த நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் வெ. ஸ்ரீராம் மற்றும் மதனகல்யாணி.

குட்டி இளவரசன் (நூல்)
வகை:புதினம்
துறை:{{{பொருள்}}}
காலம்:மே 2002
மொழி:தமிழ்
பக்கங்கள்:117

பிரஞ்சு ​மொழியிலிருந்து ​தமிழாக்கம் ​செய்யப்பட்ட நூல்.
பிரெஞ்சு மொழியில் - அந்துவான் து செயிந் தெகுபெறி
தமிழில் - வெ. ஸ்ரீராம் + மதனகல்யாணி

கதைச்சுருக்கம்

தொகு

பயணம் மேற்கொண்ட விமானி ஒருவர், விமானம் பழுது பெற்று, பாலைவனத்தில் தரையிறங்குகிறார். வெம்மை மட்டுமே நிறைந்த சூழலது. விமானம் பழுதுபார்க்க போராடிக்கொண்டிருக்கும் வேளையில், விண்மீனிலிருந்து ஒரு அழகிய சிறுவன் வருவது போல் கற்பனைக்கொண்டு, அவனோடு கழிக்கும் அற்புத பொழுதுகளை இங்கு கதையாய் விரித்துள்ளார்.

குட்டி இளவரசன், தன்னிடமிருந்த மலர் ஒன்றின்மேல் கோவம் கொண்டு, தன் கிரகத்கதை விட்டு வெளியே வேலை தேடும் பொருட்டும், அறிவை தேடும் பொருட்டும் மற்ற கிரகங்கள் செல்கிறான், அங்கு ஒவ்வொரு கிரகங்களிலும் பலவித மனிதர்களை சந்திக்கிறான். மனிதர்களின் இயல்பு கண்டு மிகுந்த வியப்படைகிறான். பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொள்கிறான். இறுதியாய் பூமி வந்தடைகிறான், விமானியிடம் நேசம் கொள்கிறான், புதிராய் பேசுகிறான், நரியுடன் நட்பு பாராட்டுகிறான், பின்பு இனம் புரியா உணர்வை சுமக்கும் கனத்த மனதை அளித்துவிட்டு பிரிந்து செல்கிறான்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_இளவரசன்_(நூல்)&oldid=4104952" இலிருந்து மீள்விக்கப்பட்டது