குத்லவல்லெட்டி சலபதி ராவ்

ஆந்திராவைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற எழுத்தாளர்

குத்லவல்லெட்டி சலபதி ராவ் (Gudlavalleti Chalapati Rao) அல்லது குத்லவல்லெட்டி வெங்கடாசலபதி ராவ் எனவும் அறியப்படும் இவர் ஓர் புகழ்பெற்ற எழுத்தாளரும், தத்துவஞானியும், ஆந்திரப் பிரதேச அரசின் அறக்கட்டளைத் துறையின் முன்னாள் துணை ஆணையரும் ஆவார். 1915ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குத்லவல்லேருவில் வெங்கட ராமையா குத்லவல்லெட்டி - சூர்யகாந்தம் குத்லவல்லெட்டி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் பயின்றார். பிறகு, இவர் வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, அறநிலையத் துறைகளில் பணியாற்றினார். இறுதியாக தேர்வு நிலை துணை ஆட்சியராக ஓய்வு பெற்றார். இறுதியாக ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணத்தில் குடியேறினார். இவருக்கு கிருஷ்ணவேணி அம்மா என்பவருடன் திருமணமாகி, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

குத்லவல்லெட்டி வெங்கடாசலபதி ராவ்
பிறப்பு10 February 1915 (1915-02-10)
குத்லவல்லேரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புNot recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). (வயது 72)
மச்சிலிப்பட்டணம்
பணிதுணை ஆட்சியளர், எழுத்தாளர், மெய்யியலாளர்
பெற்றோர்வெங்கட ராமையா குத்லவல்லெட்டி - சூர்யகாந்தம்

அறநிலையத் துறைகளில் இவர் பணியாற்றிய போது இவர் சேகரித்த பரந்த அனுபவத்துடன், இவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம்(விசயநகரம் உட்பட), கிழக்கு கோதாவரி மாவட்டம் , மேற்கு கோதாவரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் கோயில்கள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் ஆந்திராவின் கடலோரப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று மற்றும் பிற புகழ்பெற்ற கோயில்களைப் பற்றிய கடந்தகால தகவல்களின் சில அரிய மாதிரிகளாகும்.

அத்யாத்ம இராமாயணத்தை சமசுகிருதத்திலிருந்து தெலுங்கிலும், துளசிதாசரின் ராமசரிதமானஸை இந்தியிலிருந்து தெலுங்கிற்கும் மொழிபெயர்த்தார். ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாதமி இவரது பங்களிப்பை அங்கீகரித்து, இவரது "அத்யாத்ம இராமாயணத்திற்கு" பண மானியம் வழங்கியது.

படைப்புகளும் வெளியீடுகளும் தொகு

  • பத்ராசல இராமதாஸ், 18 அக்டோபர் 1980 அன்று வெளியானது
  • துளசிதாஸரின் ஸ்ரீ ராம சரித மானஸ், இந்தியிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது
  • அத்யாத்ம இராமாயணம், சமசுகிருதத்தில் இருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது
  • ஸ்ரீ வெங்கடாசலம், அதன் மகிமை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம், 1983
  • விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள்
  • கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட கோவில்கள்
  • ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள்

சான்றுகள் தொகு

[1] [2]

  1. Chalapati Rao, Gudlavalleti Venkata (1983). Sri Venkatachala, its glory. Tirumalai-Tirupati Devasthanam. பக். 83. 
  2. "Digital Library of India : IISc". New.dli.ernet.in. Archived from the original on 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.