குந்தலா ஜெயராமன்

குந்தலா ஜெயராமன்(Kunthala Jayaraman) என்பவர்இந்திய உயிரி தொழில்நுட்பவியலாளர். இவர் 'தொழில்துறை உலகில் உயிரி தொழில்நுட்பக் கல்வியின் தாய்' என்று கருதப்படுகிறார். முனைவர் கே.ஜே. என்று அடிக்கடி அழைக்கப்படும் ஜெயராமன், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே இணக்கமான சமநிலையை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.[1] பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயிர்வேதியியலில் பட்டம் பெற்றார். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளியில் புகழ்பெற்ற பேராசிரியராகவும் இருந்தார்.[2] மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது உலக சுகாதார அமைப்பின் மாநாடு மற்றும் பன்னாட்டுப் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு இவர் முக்கியமானவராக இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எசு. இராமச்சந்திரன், குப்பமுத்து தர்மலிங்கம் ஆகியோருடன் இணைந்து உயிரித் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களை எழுத இவர் வழிகாட்டியாகச் செயல்பட்டார் 2022ஆம் ஆண்டில், குந்தலா ஜெயராமனின் நினைவாக, சென்னையின் அறிவியல் அகாதமி "உயர்கல்வி மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சியில் சீர்குலைக்கும் சீர்திருத்தம்" என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரையை நடத்தியது. இதனை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் பி. காளிராஜ் நிகழ்த்தினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "From Anna University to America and to Agriculture" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
  2. "School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai" (PDF). School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தலா_ஜெயராமன்&oldid=3784893" இலிருந்து மீள்விக்கப்பட்டது