லினக்சு

லினக்சு கருனியை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளம். இதில் குனு/லினக்சு மற்றும் ஆன்ட்ராய்டு இயங்க
(குனு/லினக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லினக்ஸ் (Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும். இவ்வியக்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் குனூ/லினக்ஸ் என்பதேயாகும்.லினக்ஸ் பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் பறவைச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.

டக்ஸ் (Tux) பெங்குயின்

ஆப்பிள் மாக்கின்டோஷ், யுனிக்ஸ், சொலாரிஸ், பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.

தத்துவம்

'லினக்ஸ் இயக்கத்தளம் கட்டற்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதன் மென்பொருட் பகுதிகள் யாவும் திறந்த ஆணைமூலமாக, பொதுமக்கள் உரிமத்தின்அடிப்படையில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இதன் ஆணைமூலத்தினை அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியக்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் வழங்கலாம் (பகிர்ந்துகொள்ளலாம்) அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம்.

இவ்வியக்குதளதளம், லினக்ஸ் கரு, குனூ திட்ட மென்பொருட்கள், ஏனைய திறந்த ஆணைமூல மென்பொருட்கள் என்பவற்றின் தொகுப்பாகும்.

வழங்கல்கள்

தனிக் கட்டுரை: லினக்ஸ் வழங்கல்கள்

குனூ/லினக்ஸ் பற்றி முதன்முதல் அறிந்துகொள்பவர்களுக்கு பெரும் விளக்கப் போதாமையை கொடுக்கும் எண்ணக்கரு வழங்கல்கள் என்பதாகும்..

இவ்வியக்குதளம் பொதுவாக பயனர்மட்டத்தில் வழங்கல்களாகவே கொடுக்கப்படுகிறது. வழங்கல்களை பெற்று குனூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதே வசதியானதாகும். தேர்ந்த பயனர் ஒருவரே குனூ/லினக்ஸ் இயக்குதளத்தை அடிப்டையிலிருந்து நிறுவிக்கொள்ள முடியும்.

 
உபுண்டு

வரலாறு

அன்றவ் எஸ் டேனேன்பாம் (இடது ), மினிக்சு இயக்குதளத்தை உருவாக்கியவர், மற்றும் லினஸ் டோர்வால்ட்ஸ் (வலது), லினக்சு கருவின் முக்கிய உருவாக்குநர்களில் ஒருவர்.

யூனிக்ஸ்

யூனிக்ஸ் இயக்குதளம் கென் தாம்சன் , டென்னிஸ் ரிட்சி , டக்ளஸ் மேக்ள்ராய் மற்றும் ஜோ ஒச்சன்னா மூலம் அமெரிக்காவில் AT&T பெல் ஆய்வகத்தில் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.அது 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஆரம்பத்தில் முற்றிலும் சில்லு மொழியில் (அசெம்பிளி) எழுதப்பட்டது. பின்னர் , 1973 ஆம் ஆண்டு ஒரு முன்னோடியான அணுகுமுறையில் , யூனிக்ஸ் டென்னிஸ் ரிச்சி மூலம் சி நிரலாக்க மொழியில் மீண்டும் எழுதப்பட்டது. ஒரு உயர் மட்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு இயக்க அமைப்பு கிடைக்கும் பல்வேறு கணினி தளங்களில் எளிதாக பெயர்வுத்திறன் அனுமதித்தது.1984 இல் , AT&T பெல் லேப்ஸ் என்ற தாமாகவே விலகிய பின் இலவச உரிமம் தேவைப்படும் தனியுரிம மென்பொருளாக யூனிக்ஸின் விற்பனை தொடங்கியது.

குனு

1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மேன் தொடங்கிய குனு திட்டம்,முற்றிலும் இலவசமான மென்பொருளாக " யுனிக்ஸ் இணக்கமான மென்பொருள் அமைப்பு " உருவாக்கும் நோக்கத்துடன் 1984 இல் தொடங்கியது. பின்னர்,1985 ஆம் ஆண்டு, ஸ்டால்மேன் இலவச மென்பொருள் அறக்கட்டளை தொடங்கி 1989 இல் பொது மக்கள் உரிம குனு-ஐ( குனு ஜிபிஎல் ) எழுதினார்.

1990 ல் குனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான செயலிகள், காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது.

பி.எஸ்.டி

இணைய பி.எஸ்.டி , ஓப்பன் பி.எஸ்.டி மற்றும் ஃப்ரீ லினக்ஸ்லிருந்து உருவாக்கப்பட்டது.சட்ட சிக்கல்கள் காரணமாக 1992 வரை இது வெளியிடப்படவில்லை.லினஸ் டோர்வால்ட்ஸ் 386BSD உரிய நேரத்தில் கிடைக்க இருந்திருந்தால் , அவர் ஒருவேளை லினக்ஸ் உருவாக்கிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மினிக்ஸ்

மினிக்ஸ் என்பது ஆண்ட்ரூ எஸ் தனென்பாம் எழுதிய ஒரு மலிவான யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு ஆகும்.2005 ஆம் ஆண்டு இதன் 3 பதிப்புலிருந்து,மினிக்ஸ் இலவசமாக மாறியது.

1991-ல் லினஸ் டோர்வால்ட்ஸ் என்பவர், மினிக்ஸ் என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது.

1991 செப்டெம்பர் 17: லினக்ஸ் தனது இயங்குதளத்தை இணையத்தில் கிடைக்கச்செய்கிறார். இதன் ஆணைமூலத்தை பெற்ற ஏராளமான நிரலாளர்கள் லினக்சை மேன்மேலும் வளர்த்தெடுக்கிறார்கள்.

அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் குனூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

பயன்பாடுகள்

இது பொது நோக்கத்திற்காக பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயக்குதளமயினும் இதன் கணினி கட்டமைப்பு ஆதரவு, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு,பல்வேறு மொழி ஆதரவு ஆகியவற்றிக்காக மீத்திறன் கணினிகள் மற்றும் வழங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனரின் சூழலில் நிபுணத்துவத்திர்க்காக சில வழங்கல்களுக்கென்றே பிரத்யேக இலவச மென்பொருள் உள்ளன. தற்போது, முன்னூறு வழங்கல்கள் உருவாக்கப்பட்டாலும் ஒரு டஜன் வழங்கல்கள் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. லினக்ஸ் பரவலாக ஏற்கப்பட்ட இயங்குதள கர்னலாக உள்ளது.லினக்ஸ் கர்னல் கணினி கட்டமைப்புகள் மிகவும் பலவித பயன்பாடுகளை கொண்டது. கையடக்க ARM,அடிப்படை ஐபெக் மற்றும் IBM இன் z9,Z10 மைய கணினிகள்,அலைபேசிகளில் இருந்து மீக்கணினிகள் வரை பல சாதனங்களில் விசேஷ வழங்கல்களக உள்ளன.

தனிநபர் கணினி

தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் தரத்தினால் லினக்ஸின் பயன்பாடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தற்போது மிகவும் பிரபலமாக 2 வழங்கல்கள் உள்ளன அவை குநோம், மற்றும் கே டீ ஈ பிளாஸ்மா இயக்குதளம்.

வழங்கிகள்,மைய அலுவலககணினிகள் மற்றும் மீக்கணினிகள்

லினக்ஸ் வழங்கி இயக்க அமைப்புகள் நீண்ட காலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, Netcraft அமைப்பின் செப்டம்பர் 2006 அறிக்கையில் உலகின் பத்து மிகவும் நம்பகமான இணைய நிறுவனங்களில் எட்டு தங்கள் இணைய வழங்கிகளில் லினக்சை பயன் படுத்துவதாக கூறியது. ஜூன் 2008 ல் பத்தில் ஐந்து லினக்ஸ்,மூன்று ஃப்ரீ பி.யஸ்.டி , மற்றும் இரண்டில் மைக்ரோசாப்ட் பயன்படுவதாகவும்,பிப்ரவரி 2010 ல் இருந்து, பத்தில்சிறந்த பத்தில் ஆறு பத்தில்,இரண்டு ஃப்ரீ பி.யஸ்.டி, மற்றும் ஒன்று மைக்ரோசாப்ட் இயக்குதளம் என் குறிப்பிட்டது.

உட்பொதிக்கப்பட்ட சாதனங்கள்

லினக்ஸின் குறைந்த விலை மற்றும் எளிமை காரணமாக, உட்பொதிக்கப்பட்ட சாதனஅமைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.லினக்ஸ் கர்னல் அடிப்படையிலான அண்ட்ராய்டு பதிப்பு நோக்கியாவின் பழைய சிம்பியன் திறன்பேசி இயக்குதளத்தை பின் தள்ளியது.2013 ஆம் வருட இரண்டாவது காலாண்டில்,உலகளவில் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் 79.3%, அண்ட்ராய்டு ஆகும்.லினக்ஸ் தளங்களில் இயங்கும் அலைபேசிகள் மற்றும் பிடிஏ 2007 இருந்து மிகவும் அதிகரித்தது. உதாரணங்கள்: நோக்கியா N810, ஓப்பன்மோக்கோ இன் Neo1973, மற்றும் மோட்டோரோலா ROKR E8

வெளியிணைப்புக்கள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லினக்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லினக்சு&oldid=4046015" இலிருந்து மீள்விக்கப்பட்டது