குன்பி

மகாராட்டிராவில் காணப்படும் ஒரு சாதியினர்

குன்பி (Kunbi)[1][2] என்பது மேற்கு இந்தியாவில் பாரம்பரிய விவசாயிகளின் பல சாதிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்.[3][4][5] விதர்பாவின் தோனோஜே, கடோல், மசாரம், இந்த்ரே, ஜாதவ், ஜாரே, கைரே, லேவா (லேவா பாட்டீல்), லோனாரே மற்றும் திரோல் சமூகங்களும் இதில் அடங்கும்.[6] இந்த சமூகங்கள் பெரும்பாலும் மகாராட்டிர மாநிலத்தில் காணப்படுகின்றன. ஆனால் மத்தியப் பிரதேசம், குசராத்து (இப்போது பட்டிதர் என ஆழைக்கப்படுகின்றனர்) கருநாடகம், கேரளம் மற்றும் கோவா என்று அழைக்கப்படுகின்றன) போன்ற மாநிலங்களிலும் உள்ளனர். குன்பிகள் மகாராட்டிராவில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[6][7][8]}

மத்திய இந்தியாவிலிருக்கும் குன்பி சமூகம், 1916

பின்னணி

தொகு

சிவாஜியின் கீழ் மராட்டியப் பேரரசின் படைகளில் பணியாற்றிய பெரும்பாலான மாவலாக்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[9] மராட்டியப் பேரரசின் சிந்தியா மற்றும் கெய்க்வாட் வம்சாவளியினர் முதலில் குன்பி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.[10] பதினான்காம் நூற்றாண்டிலும் பின்னர் பல்வேறு ஆட்சியாளர்களின் படைகளில் இராணுவ வீரர்களாக வேலை செய்த பல குன்பிகள் சமசுகிருதமயமாக்கலுக்கு உட்பட்டு தங்களை மராத்தியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். காலனித்துவத்தின் விளைவுகளால் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மராத்தியர்களுக்கும் குன்பிகளுக்கும் இடையிலான எல்லை தெளிவற்றதாகிவிட்டது. மேலும் இரு குழுக்களும் மராத்தா-குன்பி என்ற ஒரு தொகுதியை உருவாக்கின.

கைர்லாஞ்சி படுகொலைகளின் போது குன்பி மற்றும் தலித் சமூகங்களுக்கு இடையே சாதி அடிப்படையில் பதட்டங்கள் காணப்பட்டன. மேலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிற சாதிகளுக்கிடையேயான பிரச்சினைகளில், அரசியல்வாதிகள், பெரும்பாலும் சம்பல் குன்பி-மராட்டிய சாதி பகுதியில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து தேர்தலுக்கு போட்டியிட அனுமதிக்கும் வகையில் சாதி சான்றிதழ்களை மோசடி செய்வதும் இதில் அடங்கும். ஏப்ரல் 2005 இல், இந்திய உச்ச நீதிமன்றம் மராத்தியர்கள் குன்பிகளின் துணை சாதி அல்ல என்று தீர்ப்பளித்தது.

சமூகம்

தொகு

மகாராட்டிராவின் குன்பி சமூகம் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் குர்மி மக்களுடன் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. இருவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இரு சமூகங்களும் விவசாயத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. மராத்தியில் “குன்பி” என்றால் “விவசாயி” என்று பொருள். 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவர்களை ஒத்ததாக அங்கீகரித்தது. மேலும், மகாராட்டிராவின் ‘குர்மி’ சாதி/சமூகம் மகாராட்டிராவின் குன்பிகளைப் போன்றது என்றும் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கியுள்ளது என்றும் தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. Tulpule, Shankar Gopal; Feldhaus (1999). A Dictionary of Old Marathi. Popular Prakashan. p. 163.
  2. Turner, Ralph Lilley (1962–1966). A Comparative Dictionary of Indo-Aryan Languages. Oxford University Press. p. 166.
  3. Lele 1981, ப. 56 Quote: "Village studies often mention the dominance of the elite Marathas and their refusal to accept non-elite Marathas such as the Kunbis into their kinship structure (Ghurye, 1960; Karve and Damle, 1963)."
  4. Dhar 2004, ப. 1218.
  5. Singh 2003, ப. 734.
  6. 6.0 6.1 Dhar 2004, ப. 1179–1239.
  7. Srinivas 2007, ப. 189–193.
  8. Datta-Ray 2005.
  9. J. S. Grewal, ed. (2005). The State and Society in Medieval India. Oxford University Press. p. 226. He [Shivaji] drew his military strength mainly from the mawales, the kunbis of the Mawal region. In the north, particularly in the eighteenth century, the term 'Maratha' was used with reference to all the people of Maharashtra, irrespective of their caste...
  10. Ramusack, Barbara N. (2004). The Indian Princes and their States. The New Cambridge History of India. Cambridge University Press. pp. 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139449083.
  11. Government of India, NCBC (4 October 2006). ""Kurmi" as a synonym of "Kunbi" be added at entry No.70 in the Central List of OBCs for the State of Maharashtra" (PDF).
  12. "Order Copy By "NCBC"" (PDF).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்பி&oldid=4153620" இலிருந்து மீள்விக்கப்பட்டது