கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

கம்பட்ட விஸ்வநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் (தஞ்சாவூர் மாவட்டம்) அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

கம்பட்ட விஸ்வநாதர்கோயில் நுழைவாயில்
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில் is located in தமிழ் நாடு
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
கம்பட்ட விசுவநாதர் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°57′22″N 79°21′59″E / 10.9562°N 79.3664°E / 10.9562; 79.3664
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:கும்பகோணம்
சட்டமன்றத் தொகுதி:கும்பகோணம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:54.28 m (178 அடி)
கோயில் தகவல்
மூலவர்:விசுவேசர்
தாயார்:ஆனந்தநிதி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

தல வரலாறு தொகு

இக்கோயில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது. தஞ்சையையும், பழையாறையையும் தலைநகரங்களாகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் இங்குப் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் = பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம்) இருந்ததாகக் கூறப்படுவதால் கம்பட்ட விசுவநாதசுவாமி எனப் பெயர் பெற்றுள்ளது.

'கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய' என அகநானூறு கூறுகிறது. குடந்தையில் சோழரின் கருவூலம் இருந்ததாம். அதனை நினைவூட்டும் சான்று கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.[1]

பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இத்தலத்தில் விழுந்ததால் இத்தலம் மாலதிவனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது உதயகிரியில் நிசாசரா என்ற மாதவர் இருந்தார். அவரது புதல்வரான தூமகேது தமது மாணவர்கள் சூழ்ந்துவர இத்தலத்தை அடைந்தார். மகாமகத் தீர்த்தத்தில் நீராடி ஆதிகும்பேஸ்வரரை வணங்கி, இங்குள்ள வருண தீர்த்தத்தை திருப்பணி செய்து நாள்தோறும் பூஜை செய்து வர இறைவனும் காட்சி கொடுத்தார். அந்த ஆனந்தமயமான காட்சியைக் கண்ட தூமகேது இறைவன் விசுவேசர் என்றும், இறைவி ஆனந்தநிதி என்ற பெயருடனும் விளங்குமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே இறைவனும், இறைவியும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தீர்த்தம் தூமகேது தீர்த்தம் ஆகும்.[2]

இறைவன், இறைவி தொகு

இத்தலத்தில் உறையும் இறைவன் விசுவேசர், இறைவி ஆனந்தநிதி.

குடமுழுக்கு தொகு

2016 மகாமகத்தை முன்னிட்டு அக்டோபர் 26, 2015இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.[3] [4]

மேற்கோள்கள் தொகு

  1. கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர் 1985
  2. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்
  3. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
  4. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015

26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு தொகு

வெளி இணைப்புகள் தொகு