குருசாமி சந்திரன்

குருசாமி சந்திரன் (Gurusamy Chandran) (பிறப்பு ஏப்ரல் 08, 1970) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டினைச் சேர்ந்த நாட்டுப்புற ஆய்வாளர், தமிழ்ப் பேராசிரியர் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர் ஆவார். இவர் மதுரை சந்திரன் என நன்கு அறியப்படும் கிராமிய இசைப் பாடகர் ஆவார்.[1]

குருசாமி சந்திரன்
பிறப்பு8 ஏப்ரல் 1970 (1970-04-08) (அகவை 54)
தொழில்பேராசிரியர், கிராமிய இசை, பாடல், கூத்து
தேசியம்இந்தியர்
வகைதமிழ் நாட்டுப்புற கலை

இளமையும் கல்வியும்

தொகு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் குருசாமி பாண்டியம்மாள் இணையரின் ஐந்தாவது மகனாகச் சந்திரன் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் நாளன்று பிறந்தார். பள்ளிக் கல்வியினை மதுரையில் முடித்த சந்திரன், கல்லூரிக் கல்வியில் இளநிலை தமிழ் இலக்கியப் படிப்பினை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும், இளங்கலை கிராமப்புற தொழில் மேலாண்மை படிப்பினையும் முதுகலை தமிழ் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த பாடத்தினையும் திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.

நாட்டுப்புற பாடகராக

தொகு

சந்திரனின் தந்தையாரும் நாட்டுப்புற பாடகர் ஆவார். இவர் இளமையிலே பள்ளிப் பருவத்தில் பாடல்களைப் பாடி பரிசுகள் பல பெற்றுள்ளார். கல்லூரிக் காலங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டு மேடைகளில் பாடல்கள் பாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் 20க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார்.[2]

விருதுகள்

தொகு
  • கலை வளர் மணி. 2007. தமிழ்நாடு அரசு
  • மக்கள் பாடகன். 2013. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
  • இன்னிசை செம்மல். 2019 மனித நேயப் பேரவை, திருவாரூர்
  • நா. வானமாமலையார் விருது. 2021. தமிழய்யா கழகம், மதுரை

இசைத் தொகுப்பு

தொகு
  • ஓம் அங்காளி[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr.Madurai Chandran Songs: Listen Dr.Madurai Chandran Hit Songs on Gaana.com". Gaana.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  2. "Margazhiyil Makkal Isai: Folk Singer Madurai Chandran Has a Tune for Every Line". Silverscreen India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  3. "ஓம் அங்காளி". Pinterest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருசாமி_சந்திரன்&oldid=4140817" இலிருந்து மீள்விக்கப்பட்டது