குருதி நீர் நோய்
மனிதர்களில் குருதி நீர் நோய் (Serum sickness) என்பது மனிதரல்லாத விலங்கு மூலத்திலிருந்து பெறப்பட்ட எதிர்குருதிரீநில் உள்ள புரதங்களுக்கு எதிர்வினையாகும். இது குரு திநீர் பெறப்பட்ட 5-10 நாட்களுக்குப் பிறகு நிகழ்கிறது. இது ஒரு வகை மிகையுணர்வூக்க வினையாகும், குறிப்பாக நோயெதிர்ப்பு சிக்கலான மிகையுணர்வூக்க வினை (வகை III). குருதி நீர் நோய் போன்ற விளைவை (SSLR) எப்போதாவது ஏற்படுத்தும் குறிப்பிட்ட புரதம் அல்லதா பொருட்கள் அறிமுகத்தால், எழும் நோய்களைக் குறிக்கவும் இது பயன்படுகின்றது (உம் பென்சிலின்).[1] இது முதன்முதலில் 1906இல் க்ளெமென்ஸ் வான் பிர்கெட் மற்றும் பெலா ஷிக் ஆகியோரால் விளக்கப்பட்டது.[2]
குருதி நீர் நோய் Serum sickness | |
---|---|
சிறப்பு | குருதியியல் |
அறிகுறிகள்
தொகுநோய் அறிகுறிகள் தோன்ற 14 நாட்கள் ஆகலாம். மேலும் பொதுவாக அதிக உணர்திறன் அல்லது தொற்றுநோய்களுடன் தொடர்புடைய அறிகுறிகளாக அவை இருக்கலாம்.
- தடிப்புகள்
- அரிப்பு
- மூட்டு வலி (ஆர்த்ரால்ஜியா), குறிப்பாக விரல் மற்றும் கால் மூட்டுகள்
- காய்ச்சல், 40° C வரை அதிகம் மற்றும் பொதுவாகச் சொறி முன் தோன்றும்
- லிம்பேடனோபதி (நிணநீர் முனையின் வீக்கம்), குறிப்பாக ஊசி செலுத்தப்பட்ட இடம், தலை மற்றும் கழுத்து இடத்திற்கு அருகில்
- உடல்நலக்குறைவு
- உயர் இரத்த அழுத்தம் (இரத்த அழுத்தம் குறைந்தது)
- ஸ்ப்ளெனோமேகலி (விரிவாக்கப்பட்ட மண்ணீரல்)
- குளோமெருலோனெப்ரிடிஸ்
- புரதச் சிறுநீர்
- சிறுநீரில் இரத்தம்
- அதிர்ச்சி
காரணங்கள்
தொகுஒரு எதிர்குருதிநீர் கொடுக்கப்படும்போது, மனித நோயெதிர்ப்பு அமைப்பு தீங்கு விளைவிக்கும் ஆன்டிஜென்களுக்கு இருக்கும் புரதங்களைத் தவறாக வழிநடத்தும். உடல் எதிர் பொருள்களை உருவாக்குகிறது. இது இந்த புரதங்களுடன் இணைந்து நோயெதிர்ப்பு கூட்டுப்பொருட்களை உருவாக்குகிறது . இந்த கூட்டுப்பொருட்கள், வீழ் படிவாகி, இரத்த நாளங்களின் சுவர்களில் நுழைகின்றன. அங்கு நோய் குறை நிரப்பு பொருட்களைத் தூண்டி தொடர் வினையினை செயல்படுத்துகின்றன. இதில் கிடைக்கக்கூடிய குறை நிரப்பு கூறு 3 (சி 3)ஐ அதிகம் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக ஒரு குருதிவெள்ளையணுக்களை துண்டாக்கி குருதி நாள அழற்சியினை ஏற்படுத்துகின்றது. இது இதன் விளைவாக குறைநிரப்பு 3 அளவில் குறைந்த ஹைபோகாம்ப்ளெண்டீமியாவில் எனும் நிலை விளைகிறது. இது குருதி நீர் நோயின் பொதுவான அறிகுறியாகும். இது அதிக எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
நச்சுமுறிப்பான் மற்றும் எதிர்குருதிநீர்
தொகுவிலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பிறபொருளெதிரி (ஆன்டிபாடிகளை) வெளிப்படுத்தியதன் விளைவாக குருதி நீர் நோய் உருவாகலாம். இந்த குருதிநீர் அல்லது நச்சு முறிப்பான் பொதுவாக ஒரு தொற்று அல்லது நச்சு முறிவில் சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
மருந்துகள்
தொகுகுருதி நீர் நோயுடன் தொடர்புடைய சில மருந்துகள்:
- அல்லோபுரினோல்
- பார்பிட்யூரேட்டுகள்
- கேப்டோபிரில்
- செபலோஸ்போரின்ஸ்
- குரோபாப்
- கிரிசோபுல்வின்
- பென்சிலின்கள்
- பெனிடாயின்
- புரோகேனமைடு
- குயினிடின்
- ஸ்ட்ரெப்டோகினேசு
- சல்போனமைடுகள்
- ரிடுக்சிமேப்
- ஐப்யூபுரூஃபன்
- இன்ஃபிசிமேப்
- ஆக்ஸிகோடோன்
மற்றவைகள்
தொகுஒவ்வாமை சாறுகள், இயக்குநீர் மற்றும் தடுப்பு மருந்து குருதி நீர் நோயையும் ஏற்படுத்தலாம். இருப்பினும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் சுகாதார பள்ளியின் கூற்றுப்படி, தற்போது அமெரிக்காவில் உள்ள பொது மக்களுக்கு வழக்கமாகப் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் குருதி நீர் நோயை ஏற்படுத்துவதாகக் காட்டப்படவில்லை.[1] SARS-CoV-2 காரணமாகப் புதுப்பித்தல் தேவை காண்க: https://www.nejm.org/covid-vaccine
நோய் கண்டறிதல்
தொகுசமீபத்திய மருந்துகள் உட்பட நோயாளி வழங்கிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது நோயறிதல்.
தடுப்பு
தொகுகுருதி நீர் நோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுமுறிப்பன்களை தவிர்ப்பது குருதி நீர் நோயைத் தடுக்க சிறந்த வழியாகும். சில நேரங்களில், இதன் நன்மைகள் உயிருக்கு ஆபத்தான கடி அல்லது விசக்கடியினை அபாயங்களை விட அதிகமாக இருக்கும். முற்காப்பு ஆண்டிஹிஸ்டமின்கள் அல்லது கார்டிகோஸ்டீராய்டுகளை நச்சு முறிவுகளுக்கெதிராகப் பயன்படுத்தலாம். எதிர்வினைக்கு ஆபத்து உள்ள நபர்களை அடையாளம் காணத் தோல் பரிசோதனையினை மேற்கொள்ளலாம். மருத்துவர்கள் ஒவ்வாமை கொண்ட மருந்துகள் அல்லது நச்சு எதிர் குறித்து தங்கள் நோயாளிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மருத்துவர், நச்சு முறிப்பான் பொருத்தமானதாக இருந்தால் அதையும் இல்லையெனில் முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
சிகிச்சை
தொகுஎதிர்விளைவினை ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டினை நிறுத்தும்போது, அறிகுறிகள் பொதுவாக 4-5 நாட்களுக்குள் மறைந்துவிடும்.
கார்டிகோஸ்டீராய்டுகள், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் சிகிச்சையின் முக்கியமாக உள்ளன. இந்த தேர்வு எதிர்வினையின் தீவிரத்தைப் பொறுத்தது அமைகின்றது.
ஊன்நீர் நீக்கத்தின் பயன்பாடும் உபயோகத்தில் உள்ளது.[3]
மேலும் காண்க
தொகு- ஹைபர்சென்சிட்டிவிட்டி
- ஆர்தஸ் எதிர்வினை
- சீரம் நோய் போன்ற எதிர்வினை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Serum sickness-like reaction associated with cefazolin". BMC Clin Pharmacol 6: 3. 2006. doi:10.1186/1472-6904-6-3. பப்மெட்:16504095.
- ↑ Jackson R (October 2000). "Serum sickness". J Cutan Med Surg 4 (4): 223–5. doi:10.1177/120347540000400411. பப்மெட்:11231202.
- ↑ "Serum sickness following rabbit antithymocyte-globulin induction in a liver transplant recipient: case report and literature review". Liver Transpl. 13 (5): 647–50. May 2007. doi:10.1002/lt.21098. பப்மெட்:17377915.
வெளி இணைப்புகள்
தொகுவகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |