குருபா

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

குருபா, (Kuruba)(குருபா கவுடா, குருமா மற்றும் குரும்பர் என்றும் அழைக்கப்படுகின்றனர்) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த இந்து சாதி ஒன்றைக் குறிப்பதாகும். இங்கு இவர்கள் மூன்றாவது பெரிய சாதிக் குழுவாக உள்ளனர்.[1] இச்சமூகத்தின் பாரம்பரிய தொழிலாகக் கால்நடை மேய்ச்சல் உள்ளது.

சொற்பிறப்பியல் தொகு

குருபா என்ற சொல், மேய்ப்பன் என்று பொருள்படும் குரி என்பதிலிருந்து உருவானது, குரி என்பது ஆடுகளைக் குறிக்கின்றது. இவர்களின் பாரம்பரிய முதன்மைத் தொழிலாக மேய்ச்சல் உள்ளது.[2] இன்றும் பலர் நாடோடி வாழ்க்கையினை மேற்கொள்கின்றனர்.[3]

வரலாறு தொகு

பாரம்பரிய வட்டாரங்களின் கூற்றுப்படி விஜயநகர சாம்ராஜ்யத்தின் நிறுவன வம்சமான சங்கமா வம்சத்தை குருமா அல்லது குருபாக்கள் தோற்றுவித்தனர்.[4] மகாராட்டிராவின் மத மரபு அறிஞர் ராம்சந்திர சிந்தமன் தேரே கருத்துப்படி:

தென்இந்திய வரலாறு, தென்இந்திய அரச வம்சங்கள் குறித்த தெளிவான கருத்துக்களைத் தெரிவிக்கின்றது. ஆயர், மேய்ச்சல் குழுக்கள் சந்திர பரம்பரை வழித்தோன்றலான சத்திரியர்கள் என்ற பெருமையுடன் 'யாதவர்கள்' என்ற அந்தஸ்தினை பெறுகின்றனர். தென்னிந்தியாவின் பல்வேறு வம்சங்கள், பல்லவர்கள் முதல் யாதவராயர்கள் வரை, ஆயர், மேய்ச்சல் குழுக்களின் உறுப்பினர்களாகவும் குருபா பரம்பரையைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருபா&oldid=3787410" இலிருந்து மீள்விக்கப்பட்டது