குரும்பபாளையம் அம்மணீசுவரர் கோயில்
அம்மணீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குரும்பபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு அம்மணீசுவரர் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°42′02″N 77°01′36″E / 10.7005°N 77.0268°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர்கொங்குநாடு |
அமைவிடம்: | அம்மணீசுவரர் கோவில் தெரு, குரும்பபாளையம், பொள்ளாச்சி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பொள்ளாச்சி |
மக்களவைத் தொகுதி: | பொள்ளாச்சி |
கோயில் தகவல் | |
மூலவர்: | அம்மணீசுவரர் |
குளம்: | ஆற்றங்கரை குளம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
உற்சவர்: | அருள்மிகு பரமேசுவரர் |
உற்சவர் தாயார்: | பார்வதிதாயார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கொங்கு சோழர்கள் |
கோயில்களின் எண்ணிக்கை: | 5 |
கல்வெட்டுகள்: | 5 |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அமைத்தவர்: | கொங்குசோழர்கள் |
இங்கு மேற்கு பார்த்த மூன்று சிவ லிங்கங்கள் அமைந்துள்ளது சிறப்பாகும்.
அகத்தியர் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
இந்தத் திருக்கோவில் கொங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
தஞ்சை பெரிய கோவில் இராச இராச சோழன் கட்டிய பிறகு சோழர்கள் தங்கள் ஆட்சி செய்த அனைத்து பகுதிகளிலும் சைவ திருத்தலங்களை உருவாக்கி சிவனுக்கு கோவில் கட்டினர்.
கொங்கு நாட்டை ஆண்ட கொங்கு சோழரகள் தங்கள் பாளையங்களிலும் கோவில் கட்டினர்.
பொள்ளாச்சி என்பது முடி கொண்ட சோழநல்லூர் என்று பெயர் பெற்றிருந்தது இதன் மூலம் இங்கு சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் அப்போது குரும்பபாளையம் என்ற ஊரில் அம்மணீசுவரர் திருக்கோவில் கட்டி வணங்கினார் என்ற செய்தி கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
நமசிவாய போற்றி
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] கோவில் மேற்கு முகமாக அமைந்துள்ளது இங்கு அம்மன் சன்னதி இல்லை பிரம்மா சிவன் விட்டுணு என்று மூவரும் இங்கு லிங்க வடிவில் அமர்ந்திருக்கிறார்கள்
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
ஆண்டு முழுவதும் மாத பிரதோசம் சனிப்பிரதோசம் பூசை சிறப்பாக நடைபெறுகிறது.
பௌர்ணமி பூசை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
சித்திரை பவுர்ணமி நாட்களில் ஐம்பொன் உட்சவர்சிலை திருவீதி உலா உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள அகத்தியருக்கு மாதம் தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறுகிறது மற்றும் இங்கு வாயு மூலையில் தெற்கு முகமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காலபைரவருக்கு தேய்பிறை அட்டமி பூசை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மற்றும் சிவகாமி அம்மை உடனமர் ஆனந்த நடராச பெருமான், மாணிக்கவாசகர், முருகர், சிவன் பார்வதி உற்சவமூர்த்திகள் உள்ளன மற்றும் வருடத்தில் ஆறு முறை மட்டும் நடக்கும் நடராச பெருமானுக்கு அபிசேகம் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
🔱சித்ரா பௌர்ணமி பூசை அன்று மாலை சூரியன் அத்தமனம் ஆகும் நேரத்தில் மும்மூர்த்திகளின் மேல் அத்தம சூரியனின் ஒளி படும் இது தனிச்சிறப்பாகும் மத்த எந்த தினங்களிலும் இல்லாமல் சித்ரா பௌர்ணமி அன்று மட்டும்தான் சூரியனின் ஒளி சிவன் மேல் படும்.🕉️
கோவிலை சுற்றி அமைதியான நிலை மற்றும் தவம் செய்யும் நிலை எந்த நேரங்களிலும் இருக்கும் பல சித்தர்களின் ஆத்மாக்கள் இங்கு வந்து தவம் செய்கின்றன 🌼
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.