குருவாயூர் துரை
குருவாயூர் துரை (ஆங்கிலம்: Guruvayur Dorai) 1935 சூலை 2 அன்று பிறந்துள்ள இவர் ஒரு இந்திய தாளவாத்திய கலைஞராவார்.[1] இவர் தென்னிந்திய பாரம்பரிய தாளக் கருவியான மிருதங்கத்தின் பெரிய மேதையாவார். இவர் தனது ஆரம்ப பயிற்சியை பாலக்காடு சுப்பு ஐயர், ஈ. பி. நாராயண பிசரோடி மற்றும் புகழ்பெற்ற கலைஞர் பழனி சுப்ரமணியம் பிள்ளை ஆகியோரிடமிருந்து மேற்கொண்டார். தனது எட்டு வயதில் இசை நிகழ்ச்சிகளைத் தொடங்கிய குருவாயூர் துரை கடந்த 60 ஆண்டுகளாக மேடைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். மிருதங்கம் மற்றும் இசைத்துறையில் அவரது பரந்த அளவிலான முயற்சிகள் உலகம் முழுவதும் கலையை பரப்புவதற்கு உதவியுள்ளன.
ஆரம்ப ஆண்டுகளில்
தொகுபுதுக்கோட்டை பாணியிலான மிருதங்கத்தின் ஒரு நிபுணரான குருவாயூர் துரை (அவரது உண்மையான பெயர் வைத்தியநாதன்) கேரளாவில்கோயில் நகரமான குருவாயூரில், ஜி.எஸ். கிருஷ்ண ஐயர் மற்றும் மீனாட்சி ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை ஒரு பூசாரி, தாய், இல்லத்தரசியாவார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவரது சகோதரி குருவாயூர் பொன்னம்மாள் அப்போது மிகவும் புகழ்பெற்ற பாடகியாக இருந்தார். இவரது மற்றொரு சகோதரி சென்னையில் புகழ்பெற்ற இசை ஆசிரியராக உள்ளார். அதே நேரத்தில் இவரது சகோதரர் ஜி. கே. இராஜாமணி பாலக்காட்டில் (கேரளா) வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வயலின் கலைஞராவார்.
இளம் துரை தாளத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தூக்கத்தில் இருந்தபோதும் அவரது உடலில் விரல்களால் வாசிப்பதை அடிக்கடி காண முடிந்தது. ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவரது தந்தை, துரை குருவாயூருக்கு வெளியே உயர் படிப்பு மற்றும் வேலைக்காக செல்வது கடினம் என்று நினைத்தார்.
குடும்பத்தில் ஏற்கனவே ஒரு வாய்ப்பாட்டு கலைஞர் மற்றும் ஒரு வயலின் கலைஞர் இருந்தனர். ஒரு மிருதங்க வாத்திய கலைஞர் இல்லை. எனவே இவரது தந்தை இவரை அதில் செதுக்க முடிவு செய்தார். பொன்னம்மாள், இராஜாமணி மற்றும் துரை ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை வழங்க முடியும் என்றும், உடன்பிறப்புகள் துரையைக் கவனித்துக்கொள்வார்கள் என்றும் இவரது தந்தை நினைத்தார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் அதிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும் என்றும் நம்பினார்..
துரை ஆறு வயதில் இருந்தபோது மறைந்த பாலாகாடு சுப்பு ஐயரின் கீழ் மிருதங்கம் கற்கத் தொடங்கினார். எரானல்லூரைச் சேர்ந்த இ. பி. நாராயண பிச்ரோடியும் இந்த நேரத்தில் அவருக்கு கற்பித்தார். பிசரோடியின் 'மிருதங்க நட மஞ்சரி' (மிருதங்கத்தின் நடைமுறை ஆய்வு) என்றப் புத்தகம் 2001 செப்டம்பர் 23 அன்று குருவாயூர் துரையால் வெளியிடப்பட்டது.
புகழ்பெற்ற பாடகர் செம்பை வைத்தியநாத பாகவதர் அப்போது பொன்னம்மாளுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் குருவாயூருக்கு வரும்போதெல்லாம், செம்பை அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார். துரையின் மிருதங்கப் பயிற்சியில் தீவிர அக்கறை காட்டினார். துரை தனது எட்டு வயதில் தனது முதல் அரங்கேற்றத்தை செய்தார். செம்பையைத் தவிர வேறு பலருடன் மிருதங்கம் வாசித்தார்.
1949 துரையின் வாழ்க்கையில் ஒரு நீரோட்டமாக இருந்தது. ஏனெனில் அவர் சென்னைக்கு முதல் முறையாக வந்து செம்பையுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கிடையில், பொன்னம்மாளுக்கு ஒரு மலையாள படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், இவரது தந்தை சென்னையில் குடியேற முடிவு செய்தார். துரை, பொன்னம்மாள், இராஜாமணி மற்றும் இவரது தந்தை ஆகியோர் நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். மீதமுள்ள குடும்பத்தினர் குருவாயூரில் தங்கியிருந்தனர். அதே ஆண்டில், திருபூந்தரை என்ற புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர் பழணி சுப்பிரமணியம் பிள்ளையை சந்தித்தார். பழனி சுப்பிரமணியம் பிள்ளை 1953 இல் சென்னைக்குச் சென்ற பிறகு, துரை அம்மேதையுடன் வகுப்புகளைத் தொடங்கினார். இது புதுக்கோட்டை பாணியிலான மிருதங்கத்தின் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் அவருக்கு உதவியது. துரை பழனி சுப்பிரமணியம் பிள்ளையுடன் அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் குருகுலவாசம் பாணியில் தங்கியிருந்தார்.
விருதுகள்
தொகு- 2003இல் சென்னை, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது.
- 1996இல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.[2]
- 1990இல் தமிழ்நாடு அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
- 2011இல் சங்கீத நாடக அகாதமி தாகூர் ரத்னா விருது வழங்கப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Abram, David; Edwards, Nick (2004-02-01). The Rough Guide to South India. Rough Guides. pp. 670–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843531036. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.