குரோமியம்(III) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

குரோமியம்(III) அசிட்டேட்டு (Chromium(III) acetate) என்பது C12H36ClCr3O22 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பொதுவாக அடிப்படை குரோமியம் அசிட்டேட்டு என்று இது அழைக்கப்படுகிறது.[2] [Cr3O(O2CCH3)6(OH2)3]+ என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நெர்மின் அயனியை கொண்ட உப்புக் குடும்பமாக குரோமியம்(III) அசிட்டேட்டு கருதப்படுகிறது. முக்குரோமியம் நேர்மின் அயனி குளோரைடு மற்றும் நைட்ரேட்டு போன்ற பல்வேறு எதிர்மின் அயனிகளுடன் வினைபுரிகிறது. மேலே உள்ள அட்டவணையில் உள்ள தரவு குளோரைடு அறுநீரேற்றுக்கானதாகும்.

குரோமியம்(III) அசிட்டேட்டு
Chromium(III) acetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) அசிட்டேட்டு ஐதரேட்டு
வேறு பெயர்கள்
குரோமிக் அசிட்டேட்டு
குரோமியம் டிரை அசிட்டேட்டு
குரோமியம்(III) எத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
32591-52-9 Y
ChemSpider 13394 Y
InChI
  • InChI=1/2C2H4O2.Cr/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2
    Key: LRCIYVMVWAMTKX-NUQVWONBAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14012
  • O1C(C)=[O+][Cr-3]6(O23)([OH2+])([O+]=C(C)O4)[O+]=C(C)O[Cr-3]24([OH2+])([O+]=C(C)O5)[O+]=C(C)O[Cr-3]135([OH2+])[O+]=C(C)O6
பண்புகள்
C12H36ClCr3O22
வாய்ப்பாட்டு எடை 723.84 g·mol−1
தோற்றம் சாம்பல்-பச்சை முதல் நீலப் பச்சை வரையிலான திண்மம்
அடர்த்தி 1.662 கி/செ.மீ3
உருகுநிலை 1,152[1] °C (2,106 °F; 1,425 K)
-5104.0·10−6 செ,மீ3/மோல்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
அடிப்படை இரும்பு அசிட்டேட்டில் உள்ள நேர்மின் அயனி அடிப்படை குரோமியம் அசிட்டேட்டில் உள்ள நேர்மின் அயனியுடன் சமகட்டமைப்பில் உள்ளது. இரண்டும் ஆக்சோ மற்றும் அசிட்டேட்டு பால ஈந்தணைவிகளால் இணைந்த எண்முக உலோக மையங்களைக் கொண்டுள்ளன.

அடிப்படை குரோமியம் அசிடேட்டின் உப்புகள் நீண்ட காலமாக அறிவியலாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன. ஏனெனில் இதன் தனித்துவமான கட்டமைப்பு காரணமாகும். எண்முக Cr(III) மையங்கள், ஒரு மும்மடங்கு பாலமான ஆக்சோ ஈந்தணைவி, ஆறு அசிடேட்டு ஈந்தணைவிகள் மற்றும் மூன்று நீர் ஈந்தணைவிகள் இதன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.[2] இதே அமைப்பு அடிப்படை இரும்பு அசிட்டேட்டு மற்றும் அடிப்படை மாங்கனீசு அசிட்டேட்டுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[2][3] ஆக்சோ ஈந்தணைவி இடம்பெறாத ஓர் எளிய குரோமியம்(III) அசிட்டேட்டுக்கு சிறிய சான்றுகள் உள்ளன.[4] குரோமியம்(III) அசிட்டேட்டு நீலம்/சாம்பல்-பச்சை நிறத் தூளாகும். இது தண்ணீரில் கரையும். 1909 ஆம் ஆண்டு முதல் அதே அசல் நடைமுறையின்படி இன்னும் தயாரிக்கப்படுகிறது.[3][5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chromium (III) compounds". National Pollutant Inventory. Australian Government Department of Agriculture, Water and the Environment. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  2. 2.0 2.1 2.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. 3.0 3.1 Kurt J. Schenk; Hans U. Güdel (1982). "Low-temperature structural and spectroscopic properties of [Cr3O(CH3COO)6(H2O)3]Cl.6H2O". Inorg. Chem. 21 (6): 2253–2256. doi:10.1021/ic00136a025. 
  4. Erre, Liliana Strinna; Micera, Giovanni; Glowiak, Tadeusz; Kozlowski, Henry (April 1997). "Chromium (III) Acetate, Chromium (III) Acetate Hydroxide, or µ3-Oxo-esakis-(µ2-acetato-O,O') - triaqua-trichromium (III) Acetate? Determining the Structure of a Complex Compound by Analytical and Spectroscopic Methods". Journal of Chemical Education 74 (4): 432. doi:10.1021/ed074p432. Bibcode: 1997JChEd..74..432E. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1997-04_74_4/page/n75. 
  5. R. Weinland; P. Dinkelacker (1909). "Über Salze einer Hexaacetato(formiato)‐trichrombase. II". Berichte der Deutschen Chemischen Gesellschaft 42 (3): 2997–3018. doi:10.1002/cber.19090420318. https://zenodo.org/record/1426357. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(III)_அசிட்டேட்டு&oldid=4174223" இலிருந்து மீள்விக்கப்பட்டது