குரோமியம்(III) புரோமைடு

குரோமியம்(III) புரோமைடு (Chromium(III) bromide) என்பது CrBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் செலுத்தப்பட்ட ஒளியில் பச்சை நிறமாகவும் எதிரொளிக்கப்பட்ட ஒளியில் சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது. எத்திலீனின் சில்படிமமாதல் வினையின் வினையூக்கிகளுக்கு குரோமியம்(III) புரோமைடு முன்னோடியாக விளங்குகிறது.

குரோமியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) புரோமைடு
வேறு பெயர்கள்
குரோமியம் முப்புரோமைடு, குரோமியம் புரோமைடு, குரோமிக் புரோமைடு
இனங்காட்டிகள்
10031-25-1
13478-06-3 (அறுநீரேற்று)
ChemSpider 74280
EC number 233-088-6
InChI
  • InChI=1S/3BrH.Cr/h3*1H;/q;;;+3/p-3
    Key: UZDWIWGMKWZEPE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82309
  • [Cr+3].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
CrBr3
வாய்ப்பாட்டு எடை 291.71 கி/மோல்
தோற்றம் கருப்புநிற பளபளப்பற்ற படிகம்; செலுத்தப்பட்ட ஒளியில் பச்சை நிறம்,எதிரொளிக்கப்பட்ட ஒளியில் சிவப்பு நிறம் [1]
அடர்த்தி 4.25 கி/செ.மீ3[2]
உருகுநிலை 1,130 °C (2,070 °F; 1,400 K) (நீரிலி)[2]
79 °செ (அறுநீரேற்று)
குளிர்ந்த நீரில் கரைவதில்லை, குரோ மியம்(II) அயனி உப்புகளைச் சேர்த்தால் கரைகிறது.[1] soluble in hot water[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

குரோமியம் தூளுடன் புரோமின் ஆவியை ஒரு குழாய் அனல் உலையில் இட்டு 1000 0 செல்சியசு வெப்பநிலைக்கு வினைப்படுத்துவதால் குரோமியம்(III) புரோமைடு உருவாகிறது. தனிநிலை அல்லது தூய இரு எத்தில் ஈதருடன் சேர்த்து எஞ்சியிருக்கும் CrBr2 பிரித்தெடுக்கப்படுகிறது. அதேவேளையில் தனிநிலை இரு எத்தில் ஈதர் மற்றும் தனிநிலை எத்தனால் ஆகியவற்றால் கழுவப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறது[1].

குரோமியம்(III) ஆலைடுகளை ஒத்த வரிசைச் சேர்மங்களில் குரோமியம்(III) புரோமைடு தண்ணீரில் கரைந்து CrBr3(H2O)3 கரைசலைத் தருகிறது. இச்செயல்முறை வினையூக்கி அளவுக்கு ஒரு ஆக்சிசன் ஒடுக்கியைச் சேர்க்கும் பொழுது மட்டுமே நிகழ்ந்து CrBr2 வை [1] உருவாக்குகிறது. இவ்வாக்சிசன் ஒடுக்கியானது கரையாத திண்மத்தின் மேற்பரப்பில் குரோமச புரோமைடை உருவாக்கி அதைக் கரைத்து மீண்டும் குரோமியம்(III) ஆக உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Brauer, Georg (1965) [1962]. Handbuch Der Präparativen Anorganischen Chemie (in German). Vol. 2. Stuttgart; New York, New York: Ferdinand Enke Verlag; Academic Press, Inc. p. 1340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-32316129-9. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-43981462-8. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(III)_புரோமைடு&oldid=3950671" இலிருந்து மீள்விக்கப்பட்டது