குர்மீத் சிங்

குர்மீத் சிங் (Gurmeet Singh) ஒர் இந்திய நடையோட்ட வீரராவார். உத்தராகண்டம் மாநிலத்தில் 1985 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதியன்று ஒரு சிற்றூரில் இவர் பிறந்தார். 20 கிலோமீட்டர் நடையோட்டத்தில் போட்டியிடும் இவர், 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் [2] பாட்டியாலாவில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்சு 1 போட்டியில் வெற்றி பெற்று தேசிய சாதனை நிகழ்த்தியவராகத் திகழ்கிறார். உலகத் தர இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உதவும் நிறுவனமான மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை குர்மீத் சிங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி ஊக்குவிக்கிறது. உலகின் பெரும்பணக்காரர்களுள் ஒருவரான லக்சுமி மிட்டலால் [3] தொடங்கப்பட்டது இவ்வறக்கட்டளையாகும். 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 20 கிலோமீட்டர் நடையோட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தடகள வீரர்களில் இவரும் ஒருவராவார். 20 கிலோமீட்டர் தொலைவை இவர் 1:22:30 மணி நேரத்தில் நடந்து தேசிய சாதனை நிகழ்த்தியிருந்தார்[4]. 1:22:05 மணி நேரத்தில் நடந்து ஆறாவது இடம்[5] பிடித்ததன் மூலமாக அயர்லாந்தில் நடைபெற்ற 18 ஆவது டப்ளின் அனைத்துலக கிராண்ட் பிரிக்சு போட்டிக்கு தகுதிபெற்ற குர்மீத் சிங் அப்போட்டியில் 1:23:34 மணி நேரத்தில் நடந்து முடித்து 33 ஆவது இடத்தைப் பிடித்தார்[6].

குர்மீத் சிங்
Gurmeet Singh
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்1 சூலை 1985 (1985-07-01) (அகவை 39)[1]
பிறந்த இடம்உத்தராகண்டம்
வசிப்பிடம்சார்க்கண்ட், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)20 கிலோமீட்டர் நடையோட்டம்

இளமையும் வாழ்க்கைப் பணியும்

தொகு

வட்டெறிதல் வீரரான தனது உறவுவழி சகோதரர் சுர்சித் சிங்கை முன்மாதிரியாகக் கொண்டே குர்மீத் சிங் தடகள விளையாட்டுப் போட்டிகளைத் தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார். தீப்மாதா என்ற 20 கிலோமீட்டர் நடையோட்ட வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார்[7]. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய இளையோர் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். புரூனையில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் தடகளச் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்[8].

பெங்களுரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில், பயிற்சியாளர் ராமகிருட்டிணன் காந்தியிடம் 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பயிற்சியைத் தொடங்கிய பிறகே இவரது வாழ்க்கை திசைதிரும்பியது. மார்ச் 2012 இல், அவர் நோமி, சப்பான் நாட்டிலுள்ள நோமி நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் 1:21:31 மணி நேரத்தில் நடந்து முடித்தார்[7]. மார்ச்சு 2016 இல் நடைபெற்ற ஆசிய 20 கி.மீ. இனம் நடை சாம்பியன் போட்டியில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் 29 வினாடிகளில் நடந்து முடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன் போட்டி அல்லது ஆசிய விளையாட்டு நிகழ்வு ஒன்றில் ஒரு இந்தியர் தங்கம் வென்ற நிகழ்வு, கடந்த 34 ஆண்டுகளில் முதல் முறையாக நிகழ்ந்த ஒரு சாதனையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Gurmeet Singh IAAF profile". iaaf.org. IAAF. Archived from the original on 8 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Gurmeet smashes 20km walk national record". The Times of India (New Delhi: timesofindia.indiatimes.com). 4 May 2011 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103091618/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-04/athletics/29499360_1_national-games-medal-prospect-london-olympics. பார்த்த நாள்: 26 June 2012. 
  3. "10 Mittal Champions qualify for London Olympics Games 2012". mittalchampionstrust.com. Mittal Champions Trust. 31 March 2012. Archived from the original on 14 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Berth for Baljinder, silver for Gurmeet". The Hindu (thehindu.com). 13 March 2012. http://www.thehindu.com/sport/athletics/article2988634.ece. பார்த்த நாள்: 26 June 2012. 
  5. "Victories go to China and Finland in Dublin". iaaf.org. IAAF. 27 June 2011. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.
  6. "Gurmeet Singh Bio, Stats, and Results". Olympics at Sports-Reference.com. Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-24.
  7. 7.0 7.1 "The loneliness of the long-distance walkers". The Hindu. July 7, 2012 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204063607/http://www.thehindu.com/arts/magazine/article3613051.ece. 
  8. "Gurmeet Singh". intoday.in India Today. 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மீத்_சிங்&oldid=3550602" இலிருந்து மீள்விக்கப்பட்டது