குல்பகர் பேகம்

சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கின் மனைவி

குல்பகர் பேகம் (Gulbahar Begum, இறப்பு:1863) சீக்கியப் பேரரசரான மகாராசா ரஞ்சித் சிங்கின் மனைவியாவார்.

வாழ்க்கை தொகு

குல்பகர் பேகம் அமிர்தசரசு நகரைச் சேர்ந்த பஞ்சாபி முசுலிம் இன நடனப்பெண்ணாவார்.[1] இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரூப்நகரில் இவரது நடனத்தைக் கண்ட மகாராசா ரஞ்சித் சிங் இவரது நடனத்தால் வசீகரிக்கப்பட்டார்.[2]

திருமணம் தொகு

1833 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.[1] திருமணத்திற்கு சீக்கிய பழமைவாதிகளைடமிருந்து எதிர்ப்பு வந்தது. இவர் சீக்கிய மதத்திற்கு மாறவேண்டும் என்று அவர்கள் கோரினர். மகாராசா மதமாற்றத்தை எதிர்த்தார். இதனால் இவர் ஒரு முசுலிமாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[2]

திருமணத்தின்போது பேகம் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். முத்துடன் கூடிய ஒரு தங்க மூக்குத்தியும் மூக்கில் அணிவிக்கப்பட்டது. கைகளிலும் கால்களிலும் சிவப்பு நிற மருதாணி சாயம் பூசப்பட்டன. மேலும் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களால் பேகம் அலங்கரிக்கப்பட்டார். [3]

திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பேகத்தின் சகோதரர்களுக்கு நிலங்களும், நவாப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[4]

திருமணத்திற்குப் பிறகு, ரஞ்சித் சிங் தனது மனைவிக்கு மகாராணி குல்பகர் பேகம் என்று பெயர் மாற்றம் செய்து மற்ற அரசவைப் பெண்களை விட உயர்நிலைக்கு உயர்த்தினார். அவர்கள் இவரது கால்கலை பிடித்து விடும் பணியில் ஈடுபட்டனர். பர்தா எனப்படும் உடலங்கியை அணிவதை குல்பகர் கடைப்பிடிக்கவில்லை. ஊர்வலங்களின் போது மன்னனுடன் பட்டத்து யானையில் அடிக்கடி வலம் வந்தார்.[2] இரங் மகாலுக்கும், மியான் கான் மாளிகைக்குமிடைடையில் இவருக்கு ஒரு மாளிகை வழங்கப்பட்டது.[5]

பிற்கால வாழ்வு தொகு

1839 ஆம் ஆண்டு மகாராசா இறந்தபோது குல்பகர் உடன்கட்டை ஏறி உயிர் துறக்க முயன்றார். இச்சடங்கு இசுலாமில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால் தடுக்கப்பட்டார்.[5] 1849ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பஞ்சாப்பை கைப்பற்றிய பின்னர் குல்பகர் பேகத்திற்கு 12380 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினர். பிற்காலத்தில் பேகம் சர்தார்கான் என்ற ஒரு மகனை தத்தெடுத்துக் கொண்டார்.[5] தனது இறுதி ஆண்டுகளை மியானி சாகிப் பகுதியில் பேகம் கழித்தார். அங்கு ஒரு தோட்டத்தையும் பள்ளிவாசலையும் கட்டினார். [6]

இறப்பு தொகு

1863 ஆம் ஆண்டு குல்பகர் பேகம் லாகூர் நகரில் இறந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Massy, Charles Francis, and Griffin, Lepel Henry. The Punjab Chiefs (rev. Edn.). Pakistan, Sang-e-Meel Publications, 1909.
  2. 2.0 2.1 2.2 Duggal, Kartar Singh. Maharaja Ranjit Singh, the Last to Lay Arms. India, Abhinav Publications, 2001.
  3. Singh, Khushwant. Ranjit Singh: Maharaja of the Punjab. India, Random House Publishers India Pvt. Limited, 2017.
  4. Atwal, Priya. Royals and Rebels: The Rise and Fall of the Sikh Empire. United States, Oxford University Press, 2020.
  5. 5.0 5.1 5.2 "Dazzling Rani of Punjab that was Gulbahar Begum". https://www.dawn.com/news/1312781. 
  6. "Queen of Takht-e-Lahore". https://www.thefridaytimes.com/queen-of-takht-e-lahore/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்பகர்_பேகம்&oldid=3186752" இருந்து மீள்விக்கப்பட்டது