அவேலி
அவேலி (ஆங்கிலம்: Haveli) என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒரு பாரம்பரிய தொகுப்பு வீடுகள் அல்லது ஒரு மாளிகையாகும். இது பொதுவாக வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவேலி என்பது அரபுச் சொல்லான கவாலியில் இருந்து உருவானது. அதாவது "பகிர்வு" அல்லது "தனியார் இடம்" எனப் பொருள்படும். இவ்வகைக் கட்டிடங்கள் முகலாயப் பேரரசின் கீழ் பிரபலப்படுத்தப்பட்டது. மேலும் எந்தவொரு கட்டடக்கலை பாணியையும் பின்பற்றப்படாமல் இல்லாமல் இருந்தது. [1] பின்னர், அவேலி என்ற சொல் இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும் பிராந்திய மாளிகைகள், தொகுப்பு வீடுகள் மற்றும் கோயில்களின் பல்வேறு பாணிகளுக்கான பொதுவான வார்த்தையாக பயன்படுத்தப்பட்டது.
வரலாறு
தொகுமுற்றங்கள் என்பது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள வீடுகளின் பொதுவான அம்சமாகும். அவை மாளிகைகள் அல்லது பண்ணை வீடுகளில் அதிகமாக காணப்படும். [2] இந்திய துணைக் கண்டத்தின் பாரம்பரிய முற்ற வீடுகள் வாஸ்து சாஸ்திரத்தின் பண்டைய கொள்கைகளால் செல்வாக்கு பெற்றுள்ளன. [3] இது எல்லா இடங்களும் வீட்டின் மையமாக இருக்கும் ஒரு புள்ளியிலிருந்து வெளிப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள முற்றத்தின் வீடுகளின் ஆரம்ப தொல்பொருள் சான்றுகள் கிமு 3300 க்கு முந்தையவை. [4] [5] இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பாரம்பரிய வீடுகள் ஒரு முற்றத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சௌக் அல்லது முற்றத்தை சுற்றி வருகின்றன. கூடுதலாக, முற்றமானது ஒளி மற்றும் காற்று வரும் இடமாக செயல்படுகிறது மற்றும் இப்பகுதி வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் வீட்டை காற்றோட்டமாக வைத்திருக்க உதவுகிறது.
இடைக்கால காலத்தில், முகலாய சாம்ராஜ்யம் மற்றும் இராஜபுதன அரசுகளின் கீழ் குஜராத்தில் உள்ள அவர்களின் கோயில்களைக் குறிக்க வைஷ்ணவ பிரிவினரால் அவேலி என்ற சொல் முதன்முதலில் இராஜபுதனத்தில் பயன்படுத்தப்பட்டது. அவேலி என்ற பொதுவான சொல் இறுதியில் தொகுப்பு வீடுகள் மற்றும் வணிக வர்க்கத்தின் மாளிகைகளுடன் அடையாளம் காணப்பட்டது. [6]
பண்புகள்
தொகுசமூக கலாச்சார அம்சங்கள்: சௌக் அல்லது முற்றங்கள் பல்வேறு விழாக்கள் மற்றும் சடங்குகளுக்கான மையமாக செயல்பட்டது. புனித துளசி மாடம் இங்கு வைக்கப்பட்டு, வீட்டிற்கு செழிப்பைக் கொடுப்பதற்காக தினமும் வழிபாடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமை: முற்றங்கள் சில நேரங்களில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரிக்கப்பட்ட பகுதிகளாக, அவர்களுக்கு தனியுரிமை வழங்கியது.
காலநிலை: உள்ளூர் காலநிலையை சமாளிக்கும் விதமாக கட்டிட வடிவமைப்பில் திறந்தவெளியைப் பயன்படுத்துதல், வெப்பநிலை வேறுபாடுகளால் ஏற்படும் காற்றின் இயக்கம் கட்டிடத்தின் இயற்கையான காற்றோட்டத்திற்கு உதவுகிறது.
வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நடவடிக்கைகள்: பகல் நேரத்தில், பெரும்பாலும் பெண்கள் இங்கு ஒன்றாகக் கூடி தங்கள் வேலையைச் செய்வதற்கும் மற்ற பெண்களுடன் தொடர்புகொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. வணிக வர்க்கத்தின் மாளிகைகள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட முற்றங்களைக் கொண்டிருந்தன.
இடத்தின் பயன்பாடு உதய்பூரில் உள்ள நகர மாளிகையில் உள்ள மோர் சௌக் ஒரு நடன மண்டபம் என்ற கருத்து உள்ளது. இதேபோல், அவேலியில் உள்ள முற்றத்தில் பல செயல்பாடுகள் உள்ளன. அவை பொதுவாக திருமணங்களுக்கும் பண்டிகை சந்தர்ப்பங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பொருட்கள்: இங்கு செங்கற்கள், மணற்கல், பளிங்கு, மரம், பிளாஸ்டர் மற்றும் கிரானைட் ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். அலங்கார அம்சங்கள் பல்வேறு உள்ளூர் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளால் செல்வாக்கு பெற்றுள்ளன.
கட்டிட பாணிகள்
தொகுஇந்தியா மற்றும் பாக்கித்தானின் அவேலிகளில் பல ராஜஸ்தானி கட்டிடக்கலைகளால் செல்வாக்கு பெற்றுள்ளன. அவை வழக்கமாக ஒரு முற்றத்தைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் மையத்தில் ஒரு நீரூற்று இருக்கும். இந்தியாவின் பழைய நகரங்களான ஆக்ரா, லக்னோ, ஜெய்சால்மர் மற்றும் தில்லி ஆகிய இடங்களிலும்,பாக்கிஸ்தானின் லாகூர், முல்தான், பெசாவர், ஐதராபாத் போன்ற இடங்களில் ராஜஸ்தானி பாணி அவேலிகளுக்கு பல சிறந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டுள்ளன. நேபாளத்தில் அவேலிகள் நெவாரி கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. பழைய சந்தைகளில் உள்ள வீடுகள் மற்றும் காத்மாண்டு, கிருதிபூர், பக்தாபூர் மற்றும் படான் ஆகிய இடங்களில் கடைவீதிகள் இந்த பாணியில் கட்டப்பட்டுள்ளன
இந்தியாவில் குறிப்பிடத்தக்க அவேலிகள்
தொகுபகவான் கிருட்டிணருக்கு இந்தியாவின் வடக்குப் பகுதியில், பெரிய மாளிகை போன்ற கட்டுமானங்களைக் கொண்ட அவேலிகள் அமைப்பது நடைமுறையில் உள்ளன. ஆண் தெய்வங்கள், இறைவிகள், விலங்குகள், குடிமைப்பட்ட கால இந்தியா காட்சிகள் மற்றும் பகவான் இராமர் மற்றும் கிருட்டிணன் ஆகியோரின் வாழ்க்கை கதைகளை சித்தரிக்கும் சுதை ஓவியங்கள் இந்த அவேலிகளால் குறிப்பிடப்படுகின்றன. இங்கு இசைக்கப்படும் இசை அவேலி சங்கீதம் என்று அழைக்கப்பட்டது.
மேலும் காண்க
தொகு- லாகூர் நகரம்
- பழைய டெல்லி
- சேதி மொகல்லா
குறிப்புகள்
தொகு- ↑ "haveli - definition of haveli in English from the Oxford dictionary". Oxforddictionaries.com. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-19.
- ↑ Herbert J. M. Ypma (1994) "India modern: traditional forms and contemporary design", p.24
- ↑ Jagdish, Gautam (2012). Disenchanting India: Organized Rationalism and Criticism of Religion in India. abhinav publications. p. 72. பார்க்கப்பட்ட நாள் 17 August 2006.
- ↑ Lal, B. B. (1997). The Earliest Civilisation of South Asia (Rise, Maturity and Decline).
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Morris, A.E.J. (1974). History of Urban Form: Before the Industrial Revolutions.
- ↑ Bahl, Vani. "Haveli — A Symphony of Art and Architecture". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/education/student/Haveli-%E2%80%94-A-Symphony-of-Art-and-Architecture/2014/10/27/article2494669.ece. பார்த்த நாள்: 2016-01-19.