குளோரின் நான்காக்சைடு

குளோரின் நான்காக்சைடு (Chlorine tetroxide) என்பது ClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட குளோரின் ஆக்சைடு சேர்மமாகும்

வரலாறு

தொகு

மோசசு கோம்பெர்க்கின் 1923 கோரிக்கை

தொகு

பிரபல தனியுறுப்பு வேதியியலாளர் மோசசு கோம்பெர்க்கு 1923 ஆம் ஆண்டில் குளோரின் நான்காக்சைடு தயாரிப்பு முறை ஒன்றை முன்மொழிந்தார். நீரிலி ஈரெத்தில் ஈதரில் அயோடின் மற்றும் வெள்ளி பெர்குளோரேட்டு வினைபுரிந்தால் குளோரின் நான்காக்சைடு தயாரிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்[1]

I2 + 2 AgClO4 → 2 AgI + (ClO4)2.

எனினும் பின்னர் வந்த ஆய்வாளர்கள் இவ்வினையின் விளைபொருள் குளோரின் நான்காக்சைடு அல்லவென்றும் அச்சேர்மம் அயோடின் பெர்குளோரேட்டு என்றும் வாதிட்டனர்[2]. இன்று வரையிலும் அயோடின் பெர்குளோரேட்டு என்றொரு சேர்மம் இருப்பதற்கான எந்தவொரு சான்றும் கிடைக்கவில்லை.

இயகசின் 1968 கோரிக்கை

தொகு

1968 ஆம் ஆண்டில் இயகசு என்பவர் 77 கெல்வின் வெப்பநிலையில் பொட்டாசியம் குளோரேட்டை காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தி குளோரின் நான்காக்சைடைத் தொகுத்தார். இங்கு இருகுளோரின் ஏழாக்சைடு சிதைவடையும் வினையின் இடைவிளை பொருளாக இச்சேர்மம் இருக்கிறது.

பண்புகள்

தொகு

குளோரின் நான்காக்சைடின் எலக்ட்ரான் நாட்டச் சக்தியை பெர்குளோரேட்டுகளின் அணிக்கோவை ஆற்றல் மற்றும் பார்ன் – ஏபர் சுழற்சி தரவுகளின் வழியாக மதிப்பிட்டனர். இம்மதிப்பு 561 கி.யூ/மோல் ஆகும்.[3]

குளோரின் நான்காக்சைடின் படிக அமைப்பில் தெளிவில்லை மற்றும் இதனுடைய அமைப்புச் சீரொழுங்கு Cs அல்லது C2v. ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Gomberg, M. (1 February 1923). "The Reaction Between Silver Perchlorate and Iodine. Chlorine Tetra-Oxide". Journal of the American Chemical Society 45 (2): 398–421. doi:10.1021/ja01655a017. 
  2. Alcock, N. W.; Waddington, T. C. (1 January 1962). "478. The reaction between iodine and silver perchlorate". Journal of the Chemical Society (Resumed): 2510. doi:10.1039/JR9620002510. 
  3. வார்ப்புரு:Zh-hans张青莲. 《无机化学丛书》第六卷:卤素、铜分族、锌分族. 北京: 科学出版社. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-03-002238-6.
  4. Kopitzky, Rodion; Grothe, Hinrich; Willner, Helge (16 December 2002). "Chlorine Oxide Radicals ClOx (x=1-4) Studied by Matrix Isolation Spectroscopy". Chemistry - A European Journal 8 (24): 5601–5621. doi:10.1002/1521-3765(20021216)8:24<5601::AID-CHEM5601>3.0.CO;2-Z. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரின்_நான்காக்சைடு&oldid=1927895" இலிருந்து மீள்விக்கப்பட்டது