குளோரோபார்மிக் அமிலம்

வேதிச் சேர்மம்

குளோரோபார்மிக் அமிலம் (Chloroformic acid) ClCO2H என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட நிலைப்புத்தன்மையற்ற ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கார்பானிக் அமிலத்தினுடைய ஒற்றை அசைல் ஆலைடு வழிப்பொருள் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பாசுசீன் ஒர் இரட்டை அசைல் ஆலைடு வழிப்பொருளாகும். பார்மிக் அமிலத்தின் கட்டமைப்புடன் குளோரோபார்மிக் அமிலத்தின் கட்டமைப்பும் ஒத்திருக்கிறது. பார்மிக் அமிலத்தின் அமைப்பில் காணப்படும் ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக இச்சேர்மத்தில் குளோரின் அணுக்கள் இடம் பெற்றுள்ளன. பெயரளவில் குளோரோஃபார்ம் சேர்மத்துடன் ஒன்றுபட்டிருந்தாலும் குளோரோபார்மிக் அமிலம் முற்றிலும் வேறுபட்டதாகும்.

குளோரோபார்மிக் அமிலம்
Structural formula of chloroformic acid
Space-filling model of the chloroformic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கார்பனோகுளோரிடிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
குளோரோபார்மிக் அமிலம் (பரிந்துரைக்கப்படுவதில்லை[1])
குளோரோகார்பானிக் அமிலம்
இனங்காட்டிகள்
463-73-0 Y
ChemSpider 144299 Y
InChI
  • InChI=1S/CHClO2/c2-1(3)4/h(H,3,4) Y
    Key: AOGYCOYQMAVAFD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHClO2/c2-1(3)4/h(H,3,4)
    Key: AOGYCOYQMAVAFD-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164602
  • ClC(=O)O
பண்புகள்
CHClO2
வாய்ப்பாட்டு எடை 80.47 g·mol−1
அடர்த்தி 1.576
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.426
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வேதிவினைகளைப் பொருத்த அளவில் குளோரோபார்மிக் அமிலம் தன்னளவில் மிகுந்த நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது. இருப்பினும் இக்கார்பாக்சிலிக் அமிலத்தினுடைய எசுத்தர்கள் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கின்றன. மேலும் இக்குளோரோபார்மேட்டுகள் கரிம வேதியியலில் முக்கியமான வினையாக்கிகளாக உள்ளன. பெப்டைடு தயாரிக்கும் தொகுப்பு வினையில் பயன்படும் கலப்பு கார்பாக்சிலிக் அமில நீரிலிகளைத் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. தொடர்புடைய மற்ற ஐதரோகார்பன்களைப் போலவே இச்சேர்மமும் திறன்மிக்க ஒரு ஆல்கைலேற்றும் முகவராகச் செயல்படுகிறது.

4-நைட்ரோபீனைல் குளோரோபார்மேட்டு, புளோரெத்தில்மெத்திலாக்சிகார்பனைல்குளோரைடு, பென்சைல்குளோரோபார்மேட்டு, எத்தில்குளோரோபார்மேட்டு போன்றவை சில முக்கியமான குளோரோபார்மேட்டு எசுத்தர்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 776–777. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோபார்மிக்_அமிலம்&oldid=2128998" இலிருந்து மீள்விக்கப்பட்டது