முக்குளோரோ அசிட்டிக் அமிலம்
முக்குளோரோ அசிட்டிக் அமிலம் (Trichloroacetic acid ) C2HCl3O2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம், டிரைகுளோரோ எத்தனாயிக் அமிலம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடத்தக்க ஓர் அமிலமாக உள்ளது. அசிட்டிக் அமிலத்தின் மெத்தில் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தில் மூன்று குளோரின் அணுக்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வமிலத்தின் உப்புகளும், எசுத்தர்களும் முக்குளோரோ அசிட்டேட்டுகள் என அழைக்கப்படுகின்றன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
76-03-9 | |||
ChEMBL | ChEMBL14053 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C11150 | ||
பப்கெம் | 6421 | ||
வே.ந.வி.ப எண் | AJ7875000 | ||
| |||
பண்புகள் | |||
C2HCl3O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 163.38 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்றும் வெண்மையாகவும், படிகத் திண்மமாக | ||
மணம் | தெளிவான காரச்சுவை [1] | ||
அடர்த்தி | 1.63 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 57 முதல் 58 °C (135 முதல் 136 °F; 330 முதல் 331 K)[2] | ||
கொதிநிலை | 196 முதல் 197 °C (385 முதல் 387 °F; 469 முதல் 470 K)[2] | ||
0.1 பகுதிகளில் கரையும்[2] | |||
ஆவியமுக்கம் | 1 மி.மீ பாதரசம் (51.1°செ)[1] | ||
காடித்தன்மை எண் (pKa) | 0.66[3] | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 3.23 D | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் (C) அபாயம் சுற்றுச்சூழலுக்கு (N) | ||
R-சொற்றொடர்கள் | R35, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S36/37/39, S45, S60, S61 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
5000 மி.கி/கி.கி எலிகளுக்கு வாய்வழி[2] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
இல்லை[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 பகுதி/மில்லியன் (7 மி.கி/மீ3)[1] | ||
உடனடி அபாயம்
|
N.D.[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுபொருத்தமான ஒரு வினையூக்கியின் முன்னிலையில் அசிட்டிக் அமிலத்துடன் குளோரின் சேர்த்து வினைபுரிய வைப்பதால் முக்குளோரோ அசிட்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
CH3COOH + 3Cl2 → CCl3COOH +3HCl
பயன்கள்
தொகுமுக்குளோரோ அசிட்டிக் அமிலம் உயிர் வேதியியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. புரதங்கள், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்ற பெருமூலக்கூறுகளைத் வீழபடிவாக்க இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. முக்குளோரோ அசிட்டிக் அமிலம், இருகுளோரோ அசிட்டிக் அமிலம் ஆகிய இரண்டும் அழகியல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. (பச்சை குத்திய அடையாளத்தை நீக்குதல் மற்றும் வேதி நீக்கல் போன்றவை) முகப்பருக்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் போன்ற சரும உபாதைகளை நீக்கும் சிகிச்சையில் மேற்புற மருந்துப் பூச்சாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரண செல்களையும் இவை அழித்துவிட இயலும் என்பது கவனிக்கத்தக்கது ஆகும். மகப்பேறு காலத்திலும் மேற்கண்ட காரணத்திற்காக பயன்படுத்துவது பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது[4][5].
முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தின் சோடிய உப்புகள் களைக்கொள்ளிகளாக 1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கி பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1980 களின் பிற்பகுதி மற்றும் 1990 களின் முற்பகுதியில் இவற்ரின் பயன்பாடு வழக்கொழிந்தது[6][7][8][9][10].
வரலாறு
தொகுஇயீன்-பாப்டிசுடு தூமாசு 1839 ஆம் ஆண்டு முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தைக் கண்டறிந்தார். இக்காலத்தில் தொடக்கநிலையில் இருந்த கரிம வேதியியல் தனி உறுப்புகள் மற்றும் இணைதிறன்கள்[11] தொடர்பான கோட்பாடுகளுக்கு முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தின் கண்டுபிடிப்பு ஒரு உதாரணமாக விளங்கியது. இயான்சு இயாக்கோப்பு பெர்சிலியசின் நம்பிக்கைகளுக்கு மாற்றுக் கருத்தாக அமைந்து தூமாசு மற்றும் பெர்சிலியசு இடையே ஒரு மிகநீண்ட சர்ச்சையை தோற்றுவித்தது[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 NIOSH Pocket Guide to Chemical Hazards #0626National Institute for Occupational Safety and Health (NIOSH)
- ↑ 2.0 2.1 2.2 2.3 வார்ப்புரு:Merck12th
- ↑ Databog fysik kemi, F&K Forlaget 11. udgave 2009
- ↑ "Trichloroacetic Acid or Bichloroacetic Acid for Genital Warts (Human Papillomavirus)". WebMD.
- ↑ "External genital warts: Diagnosis, treatment, and prevention". Clinical Infectious Diseases 35 (Suppl 2): S210–S224. 2002. doi:10.1086/342109. பப்மெட்:12353208. http://cid.oxfordjournals.org/content/35/Supplement_2/S210.long.
- ↑ வார்ப்புரு:PPDB, accessed June 20, 2014
- ↑ G. S. Rai and C. L. Hamner Persistence of Sodium Trichloroacetate in Different Soil Types Weeds 2(4) Oct. 1953: 271-279
- ↑ OECD Trichloroacetic Acid CAS N°: 76-03-9 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Accessed June 20, 2014
- ↑ EPA December 1991. trichloroacetic acid (TCA) EPA Cancellation 12/91 Accessed June 20, 2014
- ↑ PAN Trichloroacetic acid, sodium salt
- ↑ Dumas (1839). "Trichloroacetic acid". Annalen der Pharmacie 32: 101–119. doi:10.1002/jlac.18390320109.
- ↑ William Albert Noyes (1927). "Valence". Proceedings of the American Philosophical Society 66: 287–308. https://archive.org/details/sim_proceedings-of-the-american-philosophical-society_1927_66/page/287.