குளோரோபுளோரோமீத்தேன்
குளோரோபுளோரோமீத்தேன்(Chlorofluoromethane) அல்லது ஃபிரியான் 31 ( Freon 31) என்பது வளிமம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். மேலும் இச்சேர்மம் ஒரு ஐதரோகுளோரோபுளோரோகார்பன் ஆகும். இது குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.02 ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
குளோரோபுளோரோமீத்தேன்
| |||
வேறு பெயர்கள்
புளோரோகுளோரோமீத்தேன், குளோரோபுளோரோமீத்தேன், மெத்திலீன் குளோரைடு புளோரைடு, ஒருகுளோரோ வொருபுளோரோமீத்தேன், குபுமீ, கிலாடொன் 31, ஃபிரியான் 31, குபுகா 31.
| |||
இனங்காட்டிகள் | |||
593-70-4 | |||
ChemSpider | 11153 | ||
EC number | 209-803-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C19362 | ||
பப்கெம் | 11643 | ||
| |||
UNII | CUM8OUO53E | ||
பண்புகள் | |||
CH2ClF | |||
வாய்ப்பாட்டு எடை | 68.48 கி/மோல் | ||
தோற்றம் | வளிமம் | ||
அடர்த்தி | 1.271 kg/m3 20 °செ வெப்பத்தில் | ||
உருகுநிலை | −133.0 °C (−207.4 °F; 140.2 K) | ||
கொதிநிலை | −9.1 °C (15.6 °F; 264.0 K) | ||
என்றியின் விதி
மாறிலி (kH) |
0.15 மோல்.கி.கி−1.bar−1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புற்றுநோயாக்கி. வகை. 3 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
குளோரோபுளோரோமீத்தேன் ஒற்றைச்சரிவு படிகவமைப்பும் P21 இடத்தொகுப்பும் அணிக்கோவை மாறிலி மதிப்பு a = 6.7676, b = 4.1477, c = 5.0206 (.10−1 nm), β = 108.205° எனவும் கொண்டுள்ளது[1]. 22 கிலோமீட்டர் உயரத்துக்கு மேலே குளோரோபுளோரோமீத்தேன் சேர்மத்தின் சுவடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Binbrek O. S., Torrie B. H., Swainson I. P. (2002). "Neutron powder-profile study of chlorofluoromethane". Acta Crystallographica C 58 (11): 672–674. doi:10.1107/S0108270102017328. பப்மெட்:12415178.
- ↑ C. Lippens (1981). "Atmospheric nitric acid and chlorofluoromethane 11 from interferometric spectra obtained at the Observatoire du Pic du Midi". Journal of Optics 12 (5): 331–336. doi:10.1088/0150-536X/12/5/007.
வெளி இணைப்புகள்
தொகு- Thermochemical table at chemnet.ru
- Infrared Spectrum of Chlorofluoromethane பரணிடப்பட்டது 2008-09-20 at the வந்தவழி இயந்திரம்
- IARC Summaries & Evaluations: Vol. 41 (1986), Vol. 71 (1999)