குள்ள வாத்து
குள்ள வாத்து | |
---|---|
பச்சைக் குள்ள வாத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பிராண்ட், 1836
|
மாதிரி இனம் | |
நெட்டாபசு ஆரிடசு[1] ஜெமிலின், 1789 | |
சிற்றினங்கள் | |
| |
Distribution
N. auritus N. c. coromandelianus N. c. albipennisauritus N. pulchellus |
குள்ள வாத்துகள் (Pygmy goose) என்பன நெட்டாபசு பேரினத்தைச் சேர்ந்த மிகச் சிறிய "மரக்கிளைகளில் வாழும் வாத்துகளின்" குழுவாகும்.
வகைப்பாட்டியல்
தொகுகுள்ள வாத்து பழைய உலக வெப்ப மண்டலப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை அனைத்து காட்டுப் பறவைகளிலும் மிகச் சிறியவை. இவை புறமரபுவழி குழுவாக இருப்பதால்,[2] வகைப்பாட்டியலில் வேறு இடத்தில் வைக்கப்பட வேண்டும். டப்லிங் வாத்து துணைக்குடும்பமான அனாடினேவுடன் ஆரம்பத்தில் கருதப்பட்ட இன உறவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மேலும் இவை நீர்ப்பறவைகளின் பண்டைய கோண்டுவானா தழுவல் பரவலில் ஒரு பரம்பரையை உருவாக்குகின்றன. இதில் இவை தெளிவற்ற தொடர்புகளைக் கொண்டுள்ளன.[3] மத்திய மெக்சிகோவின் ஜாலிசுகோவின் பிற்பகுதியில் உள்ள கெம்பிலியலினிருந்து (5.0–4.1 மிஆ) விவரிக்கப்படாத புதை படிவ இனம், டார்சோமெட்டாடார்சசின் தூர உறவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது புதிய உலகில் உள்ள இனத்தின் பதிவு மட்டுமே.[4]
நெட்டாபசு பேரினமானது 1836-இல் செருமனி இயற்கையியலாளர் ஜோகன் பிரெட்ரிக் வான் பிராண்ட் என்பவரால் நிறுவப்பட்டது.[5] இந்த பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான நெட்டா என்பதிலிருந்து. நெட்டா என்பதன் பொருள் "வாத்து" என்பதாகும். பவுசு என்றால் "கால்" என்று பொருள்படும். இதன் மாதிரி இனங்கள், ஆப்பிரிக்க குள்ள வாத்து, நெட்டாபசு ஆரிடசு ஆகும்.[6]
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.[7]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
நெட்டாபசு ஆரிடசு | ஆப்பிரிக்க குள்ள வாத்து | சகாரா கீழமை ஆப்பிரிக்கா | |
நெட்டாபசு கோரமண்டலியனசு | குள்ளத்தாரா | வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா | |
நெட்டாபசு புல்செல்லசு | பச்சைக் குள்ள வாத்து | வடக்கு ஆத்திரேலியா மற்றும் தெற்கு நியூ கினி |
குள்ள வாத்துகள் குறுகிய அலகு, வட்டமான தலை மற்றும் குறுகிய கால்களை உடையன. இவை மரப் பொந்துகளில் கூடு கட்டுகின்றன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Anatidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
- ↑ Livezey, Bradley C. (1986). "A phylogenetic analysis of recent anseriform genera using morphological characters" (Full text). Auk 103 (4): 737–754. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v103n04/p0737-p0754.pdf.
- ↑ Sraml, M.; Christidis, L.; Easteal, S.; Horn, P.; Collet, C. (1996). "Molecular Relationships Within Australasian Waterfowl (Anseriformes)". Australian Journal of Zoology 44 (1): 47–58. doi:10.1071/ZO9960047. https://archive.org/details/sim_australian-journal-of-zoology_1996_44_1/page/47.
- ↑ Steadman, D.; Carranza-Castaneda, O. (2006). "Early Pliocene to early Pleistocene birds from central Mexico". Universidad Nacional Autónoma de México, Instituto de Geología and Centro de Geociencias, Publicacion Especial 4: 61–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:970-32-3895-5.
- ↑ Brandt, Johann Friedrich von (1836). Descriptiones et icones animalium rossicorum novorum vel minus rite cognitorum (in லத்தின்). Vol. Fasciculus 1: Aves. Jussu et sumptibus Academiae Scientiarum. p. 5.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. Christopher Helm. p. 269.
- ↑ "Screamers, ducks, geese & swans". World Bird List Version 7.3. International Ornithologists' Union. 2017. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
மேலும் படிக்க
தொகு- Madge, Steve; Burn, Hilary (1987). Wildfowl : an identification guide to the ducks, geese and swans of the world. London: Christopher Helm. pp. 190–193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7470-2201-1.
வெளி இணைப்புகள்
தொகு பொதுவகத்தில் Nettapus பற்றிய ஊடகங்கள்
- விக்கியினங்களில் Nettapus பற்றிய தரவுகள்
- Species text in The Atlas of Southern African Birds.