குழந்தைக்காக

பி. மாதவன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குழந்தைக்காக (Kuzhanthaikkaga) பி. மாதவன் இயக்மேற்கோள்கள்டி. ராமா நாயுடு]] தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதை துறையூர் கே. மூர்த்தி, இசையமைப்பு ம. சு. விசுவநாதன்.[2] இப்படத்தில் பேபி ராணி, மேஜர் சுந்தரராஜன், இரா. சு. மனோகர், எஸ். வி. ராமதாசு மற்றும் பத்மினி போன்றோர் முன்னணி வேடங்களிலும், இவர்களுடன் எஸ். ஏ. அசோகன் எஸ். வி. சகஸ்ரநாமம், தேங்காய் சீனிவாசன் மற்றும் டி. கே. பகவதி ஆகியோரும் நடித்திருந்தனர். "பாப்ப கோசம்" என்ற தெலுங்கு மொழியில் வெளிவந்த மடத்தின் மறு ஆக்கமாகும்.[3][4][5] "நன்ஹா ஃபரிஸ்தா" என்ற பெயரில் இந்தியிலும், மலையாள மொழியில் "ஓமனக்குஞ்சு" என்ற பெயரிலும் வெளிவந்தது.

குழந்தைக்காக
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. ராமா நாயுடு
கதைதுறையூர் கே. மூர்த்தி
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புபேபி ராணி
மேஜர் சுந்தரராஜன்
இரா. சு. மனோகர்
எஸ். வி. ராமாதாசு
பத்மினி
ஒளிப்பதிவுபி. பாஸ்கர் ராவ்
ஏ. வெங்கட்
பி. என். சுந்தரம் (ஒளிப்பதிவு இயக்குனர்)
படத்தொகுப்புகே. ஏ. மார்த்தான்ட்
கலையகம்வாஹினி ஸ்டுடியோஸ்
விநியோகம்விஜயா- சுரேஷ் கம்பைன்ஸ்
வெளியீடு12 ஜுன் 1968[1]
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு கிறித்தவரான ஜோசப் (இரா. சு. மனோகர்), முஸ்லீமான நசீர் (எஸ்.வி.ராமதாஸ்), மற்றும் இந்துவான ஜம்பு (மேஜர் சுந்தரராஜன்) ]) ஆகிய மூவரும் துப்பாக்கி முனையில் பயணிகளின் நகைகளை திருடுகிறார்கள். அவர்கள் பல கடைகள் மற்றும் உணவு விடுதிகளிலும் திருடி வருகின்றனர்; அவர்களுடைய அட்டூழியங்கள் நகரெங்கும் ஒரே பேச்சாக உள்ளது. அந்த மூன்று பேரும் பணக்காரரான பிரபாகரின் (கிருஷ்ணா) வீட்டில் நுழைந்து குழந்தையைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று பணத்தை திருடுகின்றனர். குழந்தை கீதாவின் (பேபி ராணி) மீது ஜம்பு பாசம் காட்டத் தொடங்குகிறான். மற்ற இருவருக்கும் இது பிடிக்கவில்லை, ஆனால் ஜம்பு தன்னுடன் குழந்தையை அழைத்து வர முடிவு செய்கிறான். காவலர்கள் வந்ததும் அந்த மூன்று பேரும் குழந்தையுடன் தப்பி ஓடிவிடுகின்றனர். காவலர்கள் அவர்களை பிடித்துத் தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வெகுமதி அளிப்பதாக அறிவிக்கின்றனர். அவர்கள் மறைந்து வாழும் போது ஜம்பு குழந்தையிடம் நெருக்கமாகிறான், மற்ற இருவரும் குழந்தையை வெறுக்கின்றனர். ஆனால் அக்குழந்தை தனது அன்பால் மற்ற இருவரையும் கவர்கிறாள். இப்போது மூன்று பேரும் அக்குழந்தையை கடவுள் போல நம்புகிறார்கள். குழந்தை கீதா சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாள் . இதற்காக அவர்கள் கௌரி (பத்மினியை) நியமிக்கிறார்கள். கௌரியின் நடத்தையால் காவல் துறை அதிகாரி (எஸ். ஏ. அசோகன்) இதை எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார். பிறகு என்னவாயிற்று என்பதை படத்தின் மீதிக்கதை சொல்கிறது.

நடிகர்கள்

தொகு

படக்குழு

தொகு

கலை: ராஜேந்திர குமார்
புகைப்படம்: சிட்டி பாபு மற்றும் ஷ்யாம்
வடிவம்: ஈஸ்வர்
விளம்பரம்: எலிகன்ட்
படக் கலவை: எஸ். ரங்கநாதன் விஜயா லபாரேடரிக்காக
ஒலிப்பதிவு: ஜி. வி. ரமணன்
பின்ணை ஒலிப்பதிவு: சுவாமிநாதன்
நடனம்: பி. எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் கே. எஸ். ரெட்டி
சண்டை: சேது மாதவன்
வெளிப்புறம்: பிரசாத் புரடக்சன்ஸ்

படத்தின் வெற்றி

தொகு

சிறந்த தமிழ்த் திரைப்பட பாடல்களுக்கான தேசிய அளவில் மிகவும் பாராட்டப்பட்டது மேலும் இரண்டு தேசிய விருதுகளை பெற்று கூடுதலாக 100 நாட்களுக்கு மேல் ஓடியது

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றினார். பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், தாராபுரம் சுந்தர்ராஜன், ஏ. வீரமனி மற்றும் பி. சுசீலா ஆகியோர் பாடியுள்ளனர்.[6]

எண் பாடல் பாடியோர் எழுதியோர் நீளம்(m:ss)
1 "ராமன் என்பது" (தேவன் வந்தான்) டி. எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் & பி. பி. ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன் 04:25
2 "தை மாத மேகம்" பி. சுசீலா 05:03
3 "தொட்டு பாருங்கl" பி. சுசீலா 04:12
4 "தை மாத மேகம்" - 2 தாராபுரம் சுந்தர்ராஜன், ஏ. வீரமணி & பி. சுசீலா

மேற்கோள்கள்

தொகு
  1. G. Dhananjayan 2014, ப. 202.
  2. "Kuzhandhaikaga Movie". gomolo. Archived from the original on 2016-10-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  3. http://tamilrasigan.com/kuzhandaikaga-1968-tamil-movies-online-watch-free/
  4. Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931 to 2013. Blue Ocean Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84301-05-7. {{cite book}}: Invalid |ref=harv (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Kuzhandaikaga 1968 Tamil Movie". filmiclub. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  6. "1000 Songs to Hear Before You Die". mayyam. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.

நூல் தொகை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தைக்காக&oldid=3961809" இலிருந்து மீள்விக்கப்பட்டது