டி. ராமா நாயுடு

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

தக்குபாத்தி ராமாநாயுடு (Daggubati Ramanaidu, 6 சூன் 1936 – 18 பெப்ரவரி 2015)[1] பல மொழிகளில் இந்தியத் திரைப்படங்களைத் தயாரித்தவராவார். சுரேசு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஒரு தனிநபரால் மிகக் கூடுதலான திரைப்படங்களைத் தயாரித்ததற்கான கின்னசு உலக சாதனை நிகழ்த்தியவர். 13 இந்திய மொழிகளில் 150 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 1999 முதல் 2004 வரை குண்டூர் மாவட்டத்தின் பாபட்ல மக்களவைத் தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவையில் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.

டக்குபாத்தி ராமாநாயுடு
RamaNaidu.jpg
இராமா நாயுடு
பிறப்புடக்குபாத்தி ராமாநாயுடு
சூன் 6, 1936(1936-06-06)
கரம்சேடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய பிரகாசம் மாவட்டம், ஆந்திரா)
இறப்பு18 பெப்ரவரி 2015(2015-02-18) (அகவை 78)
ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
பணிதயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
இராசேசுவரி தக்குபாத்தி
பிள்ளைகள்சுரேசு பாபு தக்குபாத்தி
வெங்கடேசு தக்குபாத்தி
இலட்சுமி தக்குபாத்தி
விருதுகள்பத்ம பூசன், தாதாசாகெப் பால்கே விருது, கின்னஸ் உலக சாதனைகள்
வலைத்தளம்
www.sureshproductions.com

தெலுங்கு திரைப்படத்துறைக்கு இவராற்றிய சேவைக்காக 2012இல் இந்தியக் குடியரசின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசன் இவருக்கு வழங்கப்பட்டது.[2] இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சீரிய பங்களித்தமைக்காக 2009இல் வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

இராமாநாயுடு 1991இல் இராமாநாயுடு அறக்கட்டளை ஏற்படுத்தி பலருக்குக் கல்விக்காக உதவியுள்ளார்.

குடும்பம்தொகு

இராமாநாயுடுவின் மனைவி இராசேசுவரி ஆவார். இவர்களுக்கு சுரேசு, வெங்கடேசு என்ற இரண்டு மகன்களும், தக்குபாத்தி லட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சுரேசு படத் தயாரிப்பாளராகவும், இளைய மகன் வெங்கடேசு முன்னணி நடிகராகவும் உள்ளனர். சுரேசின் மகனும், ராமாநாயுடுவின் பேரனுமான ராணா டக்குபாதி தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி இளம் நடிகர் ஆவார்.

இராமாநாயுடுவின் மகள் லட்சுமியின் கணவர் பிரபல நடிகர் நாகார்ஜூனா ஆவார். இவர்கள் தற்போது மணமுறிவு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிறந்த நாக சைதன்யாவும் தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராமா_நாயுடு&oldid=3127651" இருந்து மீள்விக்கப்பட்டது