குழந்தைக் கவிராயர் 1
முதலாம் குழந்தைக் கவிராயர் கிபி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். அப்போதைய இராமநாதபுரம் மாவட்டம் தற்போதைய சிவகங்கை மாவட்டம் மிதிலைப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை மங்கைபாகக் கவிராயர் ஆவர்.
இருப்பிடம்
தொகுஇவருடைய முன்னோர்கள் தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இருந்தவர்கள்[1]. இவர்களின் பூர்வீகம் சிதம்பரம் அருகில் உள்ள மல்லையூர் என்கிற கொல்லிமலை என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது[2]. முன்னோரில் ஒருவரான சிற்றம்பலக் கவிராயர் என்பவர் வெங்களப்ப நாயக்கர் என்பவர் மீது ஒரு குறவஞ்சி பாடி மிதிலைப்பட்டியை மடப்புறமாகப் பெற்றார். பிறகு அங்கேயே இவர் மரபினர் வாழ்ந்து வந்தனர்.
புலமை
தொகுஇவரது தந்தையாகிய மங்கைபாகக் கவிராயர் நத்தம் பெரு நிலக்கிழாராகிய இம்முடிலிங்கைய நாயகர் மகனார் சொக்க லிங்க நாயக்கர் மீது வருக்கக் கோவை என்னும் நூலைப்பாடி பூசாரிப்பட்டி என்னும் ஊரைப் பெற்றார். ஒருமுறை, தாண்டவராயப்பிள்ளை இவருக்கு ஆயிரங்கலம் நெல் நன்கொடை வழங்கியதாகத் தெரிகிறது. இவர் தாண்டவராயப்பிள்ளையின் தமையன் இராமகிருஷ்ணப் பிள்ளையையும், நத்தம் பெருநிலக்கிழாரையும், புதுக்கோட்டை அரசர் திருமலைத் தொண்டைமானையும் தனிப்பாடல்களால் பாடியுள்ளார்.[1]
ஒருமுறை, இவர் நத்தம் பெருநிலக்கிழாரிடம் சென்று விட்டுத் தம் பல்லக்கில் ஏறி சிங்கம் பிடாரி (சிங்கம்புணரி) என்னும் ஊர் வழியாக வந்தார். அடுத்த ஊருக்குச் செல்ல எண்ணிய சில அந்தணப் பெண்கள் அப்பல்லக்கைத் தொடர்ந்தனர். பல்லக்குச் சிறிது முந்தவே கள்வர்கள் அந்தணப் பெண்களை வழிமறித்துத் துன்பப்படுத்தி நகைகள் தாலி முதலிய வற்றைக் கைப்பற்றினர். துயரம் அடைந்த அப்பெண்டிர் நடந்ததைக் கவிராயரிடம் கூறினர். கவிராயர் அவ்வூரில் உள்ள ஐயனார் மீது அண்டர் தொழும்' என்று தொடங்கும் செய்யுளைப் பாடினார். உடனே ஐயனார் அருளால் கள்வர்களுக்குக் கண்பார்வை இல்லாமல் போய்விட்டது என்றும், அவர்கள் அச்சமடைந்து திருடிய நகைகளை அவ்வூர் அதிகாரியிடம் கொடுத்துப் பிழைபொறுக்க வேண்டினர் என்றும் கூறுவர்.[1][2]
எழுதிய நூல்கள்
தொகுமான்விடுதூது, தனிப்பாடல்கள். இது சிவகங்கைச் சமத்தானப் பிரதானியான தாண்டவராயப் பிள்ளை மீது பாடப் பெற்றது.