குவாதம் இ ரசூல்
குவாதம் இ ரசூல் (Qadam e Rasool) இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ளது. இது ஒடிசாவில் உள்ள முகலாய கட்டிடக்கலையின் ஒரு புனிதத் தலமாகும். குவாதம் ரசூல் வளாகத்தில் ஏராளமான தர்காக்கள், மோட்டி, குவாதம் இ ரசூல் என்ற பெயர்களில் இரண்டு பள்ளிவாசல்கள் , பல கல்வெட்டுகள் உள்ளன.
குவாதம் இ ரசூல் Qadam e Rasool | |
---|---|
குவாதம் இ ரசூலின் முக்கிய குவிமாடம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | தர்கா சந்தை, கட்டக், ஒடிசா |
சமயம் | இசுலாம் |
மாவட்டம் | கட்டக் |
நிலை | தர்கா |
ஆராய்ச்சியாளர் முகமது யாமின் கூறுகையில், "கட்டிடக்கலைப்படி இது முகலாய காலத்து அழகிய கோயில், ஆனால் ஒடியா பாணியில் கட்டப்பட்ட ஒரு கோயில் கட்டிடம் என்கிறார். எனவே, இதை ஒடிசாவில் உள்ள இந்து-முசுலிம் கட்டிடக்கலையின் கலவையாக கருதப்படுகிறது." [1]
மயானம்
தொகுகோயிலின் உள்ளே, ஒரு பெரிய கல்லறை உள்ளது, இதில் சாகீத் பானி, அதாருதீன் முகமது, முகமது மொக்சின், முகம்மது தாகி கான், சயீத் முகமது, பேகம் பதார் உன் நிசா அக்தர், அப்சல்-உல் அமீன், சிக்கந்தர் ஆலம், உசைன் ராபி காந்தி ஆகியவர்களின் உடல்கள் . புதைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் பல பாரசீக கல்வெட்டுகளும் உள்ளன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Barik, Bibhuti (19 August 2013). "Qadam-e-Rasool to get new look". பார்க்கப்பட்ட நாள் 22 August 2020.
- ↑ "Qadam-l-Rasool". பார்க்கப்பட்ட நாள் 21 August 2020."Qadam-l-Rasool". Times of India Travel. Retrieved 21 August 2020.