கு. வி. உசாசிறீ சரண்
கு. வி. உசாசிறீ சரண் (K. V. Ushashri Charan)(16 சூலை 1976)[1] என்பவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரும்[2] [3] அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். உசாசிறீ சரண் அனந்தபூர் மாவட்டத்தின் கல்யாண்துர்க் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[4]
கு. வி. உசாசிறீ சரண் | |
---|---|
பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை அமைச்சர்-ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | தானேதி வனிதா |
சட்டமன்ற உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | வுன்னம் ஹனுமந்தராய சௌத்ரி |
தொகுதி | கல்யாண்துர்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூலை 1976 இராயதுர்கம், ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2014 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி (2014 வரை) |
துணைவர் | சிறீ சரண் |
பிள்ளைகள் | ஜெயனா மற்றும் திவிஜித் |
பெற்றோர் | மருத்துவர் குருபா விருபாக்ஷப்பா மற்றும் கே வி ரத்னம்மா |
வாழிடம்(s) | கல்யாண்துர்க், ஆந்திரப் பிரதேசம் |
வேலை | அரசியல்வாதி |
இளமை
தொகுஉசாசிறீ சரண் 1976-இல் ராயதுர்கத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கு. வி. இரத்னம்மா மற்றும் மருத்துவர் குருபா விருபாசாப்பா. இவர் சரண் ரெட்டியை மணந்தார். இந்த இணையருக்கு ஜெயனா சிறீசரண் என்ற மகளும், திவிஜித் சிறீரீசரண் என்ற மகனும் உள்ளனர்.[1] உயிரியலில் இளம் அறிவியல் படிப்பினை முடித்ததும், சுற்றுச்சூழல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். தற்போது உசாசிறீ வளிமண்டல அறிவியல் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றிய எஸ். கே. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.[1]
பணி
தொகுஉசாசிறீ முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் பிரிவு மாநில பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[5] திசம்பர் 2014இல், இவர் இந்தப் பதவியிலிருந்து விலகினார்.[6] 2019-இல் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இவர் கல்யாண்துர்க் சட்டமன்றத் தொகுதியிலிருந்து[7] போட்டியிட்டார். இவர் 19896 வாக்குகள் கூடுதல் பெற்று பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சியின் உமா மகேசுவர் நாயுடுவைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[8][9][10] ஏப்ரல் 2022-இல் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இவர்[11][12][13][14][15] பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 . 2022-04-10.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ . 12 April 2022.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ . 11 April 2022.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ . 23 May 2019.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ "TDP leader jumps into YSRCP - TeluguMirchi.com".
- ↑ "TDP General Secretary Usha sree Charan joins YSRCP - Timesofap.com".
- ↑ "YSRCP releases the list of candidates contesting for Assembly and Parliament".
- ↑ "Andhra Pradesh Assembly Election 2019 Results: Full Winners List". https://www.indiatoday.in/elections/andhra-pradesh-assembly-polls-2019/story/andhra-pradesh-assembly-election-2019-results-winners-list-names-of-winning-candidates-of-bjp-congress-npp-1532110-2019-05-23.
- ↑ "Kalyandurg Constituency Winner List in AP Elections 2019 | Kalyandurg Constituency Election Results 2019".
- ↑ "Women in Legislature".
- ↑ "CM YS Jagan impressed by oratory skills of Ushashri Charan". பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
- ↑ "CM YS Jagan Gives Key Portfolios in AP Cabinet to Women". பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
- ↑ "Buggana retains finance, Vanitha gets Home". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/buggana-retains-finance-vanithagets-home/article65311357.ece.
- ↑ "AP's 4 women ministers hold key portfolios in new Cabinet".
- ↑ "AP Cabinet: 25 ministers sworn in". பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.