கூகுள் புகைப்படங்கள்
கூகுள் ஒளிப்படங்கள் (Google Photos) என்பது ஒளிப்படங்களைப் பகிர்வதற்கும் மேக சேமிப்பகமாகச் செயல்படுவதற்கும் கூகுள் உருவாக்கிய தளமாகும். இது மே 2015இல் அறிவிக்கப்பட்டது. மேனாள் சமூக வலைப்பின்னலான கூகிள் பிளசிலிருந்து பிரிக்கப்பட்டது.
உருவாக்குனர் | கூகிள் |
---|---|
தொடக்க வெளியீடு | மே 28, 2015 |
இயக்கு முறைமை | ஆண்ட்ராய்டு இயங்குதளம்,ஐஓஎஸ் |
உருவாக்க நிலை | செயலில் |
மென்பொருள் வகைமை | பகிர்தல் |
இது, 15 ஜிகாபைட் இலவச சேமிப்பகத்தை கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் போன்ற பிற கூகுள் சேவைகளுடன் பகிர்ந்து கொள்கிறது. பயனர்கள் தரமான அமைப்பில், அசல் அல்லது சுருக்கப்பட்ட (புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முறையே 16 மெகாபிக்சல் மற்றும் 1080p தீர்மானம் வரை[a]) தங்கள் ஒளிப்படங்களையும் நிகழ்படங்களையும் பதிவேற்றலாம். சூன் 1,2021 க்கு முன் பிக்சல் திறன் பேசிகளின் மூலமாகப் பதிவேற்றப்பட்டவைகள் வரம்பற்றவைகளாகக் கணக்கில்கொள்ளப்ப்படுகிறது.[1][2] கூகுள் ஒன் சந்தாக்கள் மூலம் பயனர்கள் தங்கள் சேமிப்பிடத்தை விரிவாக்க முடியும்.
வரலாறு
தொகுகூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளசின் உட்பொதிக்கப்பட்ட புகைப்பட அம்சங்களின் வரவேற்பினைத் தொடர்ந்து கூகுள் ஒளிப்படங்கள் என்பதனை தனிப் பதிப்பாக அந்நிறுவனம் வெளியிட்டது.[3] முகநூலுக்குப் போட்டியாக இதனை வெளியிட்டது. ஆனால் முகநூல் அளவிற்குப் பரவலாக அறியபப்டவில்லை. முகநூலினை விட அதிக சேமிப்பகம், வசதிகளைக் கொடுத்த போதிலும் பயனர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.[4]
திசம்பர் 2015 இல், கூகுள் புகைப்படங்களில் பகிரப்பட்ட ஒளிப்படங்களைத் தொகுதியாகச் சேர்க்கவும், அந்தத் தொகுதிகளை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியினை ஏற்படுத்தியது. மற்ற பயனர்களும் தாங்கள் பெற்ற ஒளிப்படத் தொகுதிகளுடன் தங்களது ஒளிப்படங்களையும் சேர்க்கலாம். புதியதாக ஏதேனும் ஓர் ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகளையும் அந்தப் பயனர்கள் பெறுவர். பகிரப்பட்ட ஒளிப்படங்களையும், நிகழ்படங்களையும் பயனர்கள் சேமிக்கலாம்.[5][6][7] iOS இன் உள்ளக ஒளிப்படச் சேவையைப் போலல்லாமல், கூகுள் ஒளிப்படங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் மற்றும் இரண்டிற்கும் இடையில் முழு தெளிவுத்திறன் பகிர்வை அனுமதிக்கிறது.
அம்சங்கள்
தொகுஆண்ட்ராய்டு மற்றும் iOS இயக்க முறைமைகளில் இதனைப் பயன்படுத்தும் வகையிலான செயலியும் வலைத்தளமும் உள்ளது.[3] பயனர்கள் தங்கள் ஒளிப்படங்களை மேகக்கணி சேவையில் காப்புப் பிரதி எடுக்கவும் அவர்களின் அனைத்து சாதனங்களின் மூலமாக அணுகக்கூடியதாகவும் உள்ளது.[8]
பயனர்கள் எடுக்கும் ஒளிப்படங்களை குழுக்களாக பகுப்பாய்வு செய்து ஒழுங்கமைக்கிறது. கடற்கரைகள், அடிவானம் அல்லது "டொராண்டோவில் பனிப்புயல்" போன்ற அம்சங்களை அடையாளம் காணலாம்.[9] செயலியில் உள்ள தேடுதல் அம்சத்தினைப் பயன்படுத்தி, மக்கள், இடங்கள்,பொருட்கள் ஆகிய மூன்று வழிகளில் ஒளிப்படங்களைத் தேட இயலும்.[3][8] இந்த சேவை ஒத்த முகங்களுக்கான ஒளிப்படங்களைப் பகுப்பாய்வு செய்து அவற்றை மக்கள் பிரிவில் ஒன்றாகத் தொகுக்கிறது.[8] இது முகங்களின் வயதிற்கு ஏற்ப அவற்றைக் கண்காணிக்கவும் முடியும்.[9] கூகுள் லென்சும் இந்த சேவையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.[10]
சிக்கல்கள்
தொகுதரவுப் பகிர்வு மற்றும் ஏற்றுமதி குறித்து சிக்கல்கள் உள்ளன, அதாவது ஒளிப்படங்கள் மற்றும் நிகழ்படங்களை அவற்றின் அசல் தரத்தில் அல்லது அனைத்து அசல் தரவுகளுடனும் பதிவிறக்க முடியவில்லை, குறிப்பாக ஜி. பி. எஸ் இருப்பிட தகவல்களை.[11][12][13][14] கூகுள் டேக்அவுட் அம்சம் வழியாகப் பதிவிறக்கம் செய்தாலும் கூட சில அசல் தகவல்கள் கிடைக்காது போகின்றன.
வளர்ச்சி
தொகுஅக்டோபர் 2015,இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பின் 100 மில்லியன் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை 3.72 டெராபைட்டுகள் பதிவேற்றினர்.[15][16][17]
இந்த எண்ணிக்கையானது மே 2017-ல் ஐநூறு மில்லியன் பயனர்கள் 1.2 பில்லியன் உகைப்படங்ள் பதிவேற்றம் செய்துள்ளனர்.[18][19]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Updating Google Photos' storage policy to build for the future". Google (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-11. Archived from the original on November 11, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
- ↑ Hager, Ryne (2021-08-17). "The Pixel 5a won't have unlimited high-quality Google Photos backups". Android Police (in ஆங்கிலம்). Archived from the original on August 17, 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ 3.0 3.1 3.2 Kastrenakes, Jacob (May 14, 2005). "Google announces unlimited picture and video storage with new Photos app". The Verge. Vox Media. Archived from the original on June 1, 2015. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ Lowensohn, Josh (May 28, 2015). "Hands-on with Google's new Photos service". The Verge. Vox Media. Archived from the original on February 1, 2017. பார்க்கப்பட்ட நாள் February 4, 2017.
- ↑ Gallagher, James (December 10, 2015). "Shared memories made easy with Google Photos". The Keyword Google Blog. Archived from the original on February 6, 2017. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ Boehret, Katherine (December 10, 2015). "Google Photos' new shared albums aren't designed for a social world". The Verge. Vox Media. Archived from the original on March 12, 2017. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ Olanoff, Drew (December 10, 2015). "Google Photos Gets Easy-To-Use Shared Albums". TechCrunch. AOL. Archived from the original on February 6, 2017. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ 8.0 8.1 8.2 Mossberg, Walt (June 2, 2015). "The New Google Photos: Free at Last, and Very Smart". Recode. Vox Media. Archived from the original on February 5, 2017. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ 9.0 9.1 Kastrenakes, Jacob (மே 14, 2005). "Google announces unlimited picture and video storage with new Photos app". The Verge. Vox Media. Archived from the original on சூன் 1, 2015. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 6, 2017.
- ↑ Li, Abner (2021-04-11). "Google Lens comes to desktop web w/ Google Photos OCR". 9to5Google (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on May 16, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
- ↑ "Google Issue Tracker". Archived from the original on March 2, 2022. பார்க்கப்பட்ட நாள் May 22, 2022.
- ↑ "Google Issue Tracker". Archived from the original on May 4, 2022. பார்க்கப்பட்ட நாள் May 22, 2022.
- ↑ "Google Issue Tracker". Archived from the original on March 2, 2022. பார்க்கப்பட்ட நாள் May 22, 2022.
- ↑ "Google Issue Tracker". Archived from the original on May 31, 2022. பார்க்கப்பட்ட நாள் May 22, 2022.
- ↑ Perry, Chris (October 20, 2015). "11 things to know about Google Photos". The Keyword Google Blog. Google. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ Thorp-Lancaster, Dan (October 20, 2015). "Google Photos reaches 100 million monthly active users". Android Central. Archived from the original on மார்ச் 10, 2017. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Bergen, Mark (October 20, 2015). "With 100 Million Monthly Users, Google Is Ready to Talk About Numbers With Google Photos". Recode. Vox Media. பார்க்கப்பட்ட நாள் February 6, 2017.
- ↑ Yeung, Ken (May 17, 2017). "Google Photos passes 500 million users". VentureBeat. பார்க்கப்பட்ட நாள் May 17, 2017.
- ↑ Matney, Lucas (May 17, 2017). "Google has 2 billion users on Android, 500M on Google Photos". AOL. பார்க்கப்பட்ட நாள் May 17, 2017.
குறிப்புகள்
தொகு- ↑ For the "Storage saver" setting; "Express quality" (photos up to 3 megapixels and videos up to 480p resolution) is available in select regions