கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின்[1] நிருவாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய அணுமின் நிலையமாகும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவு | 8°10′08″N 77°42′45″E / 8.16889°N 77.71250°E |
அமைப்பு துவங்கிய தேதி | 1997 |
உரிமையாளர் | இந்திய அணுமின் கழகம் |
உலை விவரம் | |
கட்டப்பட்டு வரும் உலைகள் | 6 x 1200 MW 2 x 1000 MW |
இணையதளம் Nuclear Power Corporation of India | |
நிலவரம்:ஆகத்து 11, 2007 |
வரலாறு
தொகுஇத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் 1988 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர். ஆனால் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து போனதனாலும், இந்தியா அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்[2] ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்திற்காக அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இத்திட்டம் பத்தாண்டுகளுக்கு கிடப்பில் கிடந்தது. பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டில் கையெழுத்தானது, இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் 3.5 பில்லியன் (₹13615 கோடி) அமெரிக்க டாலராகும்.[3]
இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இங்கு ஒரு கடற்படை தளத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.[4] இதன் அடிப்படையில் ஜனவரி 14, 2004 அன்று இங்கு ஒரு சிறிய துறைமுகத்தை நிறுவினார்கள். கடல் வழியாக வரும் அணுமின் நிலையத்திற்கான பாகங்களை இந்த துறைமுகம் வழியாக கொண்டு வந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த அணுமின் நிலையத்திற்கு கொண்டு வந்தார்கள்.[5] அதற்கு முன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாலை வழியாக பாகங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தது, இந்த வழி கரடு முரடாக இருந்ததால், சில பாகங்கள் பழுதடைந்ததுடன், போக்குவரத்துச் சிக்கல்களால் கால தாமதமும் ஏற்பட்டது.
முதலில் கூடங்குளத்தில் WER1200 வகை 1000 மெகா வாட் அணுமின் திறன் கொண்ட இரு அணு உலைகள் விரைவில் செயல்படும்.[6] இரண்டு உலைகளும் செயல்படும் பொழுது, இந்தியாவில் மிக அதிகமான செயல் திறன் கொண்ட அணு நிலையமாக கூடங்குளம் அணுமின் நிலையம் திகழும்.[7]
2008 ஆம் ஆண்டில் கூடுதலாக மேலும் ஆறு அணுமின் உலைகளை இங்கு உருவாக்க இந்திய அணுமின் கழகம் ரஷ்ய நாட்டுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.[8] இதன் அடிப்படையில், ரஷ்யா 1170 மெகா வாட் அணுமின் திறன் கொண்ட நான்கு[9] நான்காம் தலைமுறை WER1200 வகை அணுமின் உலைகளை வழங்கும்.[10] இந்தியா இப்பொழுது அணுக்கரு வழங்குவோரின் குழுமத்தின் ஒப்புதலும் பெற்றுள்ளதால், இந்தியாவில் மேலும் அணுமின் நிலையங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்குவதில் தடைகள் இருக்காது.
அணு உலைக்கு மக்களின் எதிர்ப்பு
தொகுதுவக்கத்தில் இருந்தே அணு உலைக்கான எதிர்ப்பு ஓரளவு இருந்து வந்தாலும், அண்மையில் சப்பான் நாட்டில் புக்குஷிமா டா இச்சி அணு ஆலையில் நடந்த அணு உலை விபத்து காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் சப்பான், செருமனி போன்ற நாடுகள் தங்கள் அணு உலைகளை மூட முடிவெடுக்கும் பின்னணியில் கூடங்குளம் ஊர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில், 23 மார்ச் 2012 அன்று பாளையங்கோட்டையிலிருந்து இடிந்தகரைக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட 500 பேரைக் கைது செய்தது காவல்துறை [11] செப்டம்பர் 11, 2011 அன்றுமுதல் இடிந்தகரை என்ற கிராமத்தில் 10,000 மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.[12]
செயல்பாட்டிற்கான ஆயத்தம்
தொகுகூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையை செயல்படுத்துவதற்காக அணுக் கலனில் யுரேனியம் எரிபொருள் நிரப்புதற்கு முன்பு, முறையாக 10-12 நாட்கள் நடத்தப்படும் ஆய்வுப் பணிகள் சூன் 30, 2012 ஆம் நாள் முதலிருந்து நடைபெற்று வருகிறது என அணுசக்தி கழக செயல் இயக்குனர் நாகாய்க் கூறியுள்ளார்.[13] அணு விஞ்ஞானிகளின் பார்வையில் முற்றிலும் தானியங்கு இயந்திரங்களால் நடத்தப்படும் இந்த ஆய்வானது ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்பதும், அவ்வாய்வின் போது பிற்கால பயன்பாட்டிற்காக விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதும் குறிப்படத்தக்கது.[14]
முதல் அணுஉலை உற்பத்தி
தொகு- அக்டோபர் 22 2013 அன்று முதல் அணு உலையில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது.[15]
- ஜூன் 7 2014 அன்று முதல் அணு உலையில் முழு உற்பத்தித் திறன் ஆன 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.[16]
- ஏப்ரல் 2014 3வது, 4வது அணு உலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.[17]
மூன்றாம் மற்றும் நான்காம் அணு உலைகளின் கட்டுமானம்
தொகுகூடங்குளம் அணுமின் நிலையம்|கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. சுமார் ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணுஉலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx
- ↑ ^ Nuclear Exports to India from Russia
- ↑ http://www.eca-watch.org/problems/asia_pacific/india/documents/SFried_indiaprojectssurvey_jan2004.pdf பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் At What Cost? ECAs in India: Bankrolling Nuclear Power Plants, Mega-Dams, and Scandal-Ridden Projects; January 2004
- ↑ ^ New Naval base at Kudankulam
- ↑ ^ Kudankulam Port operational
- ↑ "KUDANKULAM ATOMIC POWER PROJECT 1 & 2"
- ↑ ^History of the Kudankulam Project
- ↑ Dmitry Sergeev (2008-02-12). "Russia, India edge closer to major nuclear deal". Reuters. http://in.reuters.com/article/topNews/idINIndia-31900120080212. Retrieved 2008-02-12
- ↑ Four more reactors
- ↑ ^Details on the Next Generation Reactors
- ↑ கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்
- ↑ கூடங்குளம்: 5-வது நாளாக உண்ணாவிரதம் பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் தினமணி, பார்க்கப்பட்ட நாள்:செப்15,2011
- ↑ http://tamil.oneindia.in/news/2012/07/01/business-kudankulam-nuclear-power-project-reactor-commissioning-156796.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
- ↑ "முழு உற்பத்தித் திறனை எட்டியது கூடங்குளம் அணுஉலை". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2014.
- ↑ "Kudankulam reactor attains full capacity". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2014.
- ↑ கூடங்குளம்: மேலும் 2 அணு உலை - ரஷ்ய துணை பிரதமருடன் சுஷ்மா பேச்சு
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிமேப்பியாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடம்
- அணு மின் நிலையம் வரைபடம்
- கூடங்குளம் வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி