கூட்டுறவு அமைச்சகம், இந்தியா

கூட்டுறவு அமைச்சகம்[2] என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்த அமைச்சகம் வேளாண்மை அமைச்சகத்திலிருந்து பிரித்து[3] சூலை 2021 ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் அமைச்சர் அமித் சா ஆவார். இதன் இணை அமைச்சர் பி. எல். வர்மா ஆவார். இந்த அமைச்சகமானது இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனியான நிர்வாகம், சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்குகிறது.

கூட்டுறவு அமைச்சகம்

அமித் சா
7 சூலை 2021 முதல்
துறை மேலோட்டம்
அமைப்பு6 சூலை 2021 (3 ஆண்டுகள் முன்னர்) (2021-07-06)[1]
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
அமைச்சர்
இணை அமைச்சர்
அமைப்பு தலைமை
வலைத்தளம்https://cooperation.gov.in/

கீழ்மட்ட அளவில் கூட்டுறவுகளை வலுப்படுத்துவதில் அமைச்சகம் செயல்படுத்துவதுடன்,[4][5] கூட்டுறவுகள் இடையே 'பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்கான' செயல்முறைகளை நெறிப்படுத்தவும், பன்மாநில கூட்டுறவுகளின் (MSCS) வளர்ச்சியை மேம்படுத்த செயல்படுகிறது. 1][6]

நோக்கங்கள்

தொகு

அமைச்சகம் பின்வரும் நோக்கங்களுடன் நிறுவப்பட்டது:[7] ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு பார்வையை உணர்த்துதல். கூட்டுறவு நிறுவனங்களுக்கான ‘எளிதாக வணிகம் செய்வதற்கான’ செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பன்மாநில கூட்டுறவுகளின் (MSCS) வளர்ச்சியை செயல்படுத்துதல். நாட்டில் கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்த தனியான நிர்வாக, சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்குதல். அடித்தளம் வரை சென்றடையும் உண்மையான மக்கள் அடிப்படையிலான இயக்கமாக கூட்டுறவு ஆழப்படுத்துதல்.

அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய அளவிலான நிறுவனங்கள்

தொகு
  • தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம்
  • தேசிய கூட்டுறவு ஒன்றியம், இந்தியா
  • மாநில கூட்டுறவு வங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • நில வள கூட்டுறவு வங்கிகளின் தேசியக் கூட்டமைப்பு
  • தொழில் கூட்டுறவு வங்கிகளின் தேசியக் கூட்டமைப்பு
  • நுகர்வோர் கூட்டுறவுகளின் தேசியக் கூட்டமைப்பு
  • தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • தொழிற் கூட்டுறவு சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம்/இப்கோ
  • பாரதி கூட்டுறவு நிறுவனம்
  • அனைத்திந்திய கூட்டுறவு நூற்பாலைகள் கூட்டமைப்பு
  • அனைத்திந்திய கைத்தறி துணிகள் விற்பனை கூட்டுறவு சங்கம்
  • மீனவர் கூட்டுறவு சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • புகையிலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
  • மலைவாழ் பூர்வகுடியினர் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு
  • கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசியக் கூட்டமைப்பு
  • வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Modi Government creates a new Ministry of Co-operation". Press Information Bureau. 6 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு