கூவம் (ஊர்)
கூவம் (Koovam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்தக் கிராமத்துக்கு அருகில்தான் கூவம் ஆறு தோன்றி, கிழக்குப் பக்கமாக ஓடிச் சென்னை நகரத்தின் மத்தியில் பாய்ந்து கடலில் கலக்கிறது.
கூவம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 631402 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், கடம்பத்தூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
வரலாறு
தொகுகூவம் கிராமத்துக்கு திருவிற்கோலம் என்ற பெயரும் உண்டு. இவ்வூரின் திரிபுராந்தகர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. இந்த சிவன் கோவில் யானைக் கோவில் (கஜபிருஷ்டவிமான) அமைப்பை உடையது.
கூவத்தில் சிவபெருமான் முப்புரங்களை அழித்தாா் என்று இவ்வூர் புராணம் கூறுகிறது. இக்கிராமத்துக்கு அருகிலே ஒரு கல் தூரத்தில் நரசிங்கமங்கலம் என்னும் கிராமமும் அதற்கு அருகில் ஒரு கல் தூரத்தில் சிவபுரம் என்ற கிராமமும் உள்ளது. நரசிங்கமங்கலம், கூவம், கூவத்தில் சிவபெருமான் முப்புரங்களை எரித்தது ஆகிய இவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்துச் சிந்தித்துப் பாா்த்த போது, இந்தக் கிராமம் பண்டைக் காலத்தில் பெளத்த கிராமமாக இருந்து இங்குப் பெளத்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்று மயிலை சீனி. வேங்கடசாமி ஐயுறுகிறார்.[1]
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 446, மொத்த மக்கள் தொகை 1772, இதில் 881 ஆண்களும், 891 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 69.2 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை
- ↑ "Koovam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.