கெடா மாநில ஆட்சிக்குழு
கெடா மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Kedah State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Kedah (MMKN) என்பது மலேசியா கெடா மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். கெடா சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட கெடா மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் கெடா மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
கெடா மாநில ஆட்சிக்குழு Kedah State Executive Council Majlis Mesyuarat Kerajaan Negeri Kedah | |
---|---|
2023–தற்போது | |
உருவான நாள் | 14 ஆகஸ்டு 2023 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | சனுசி முகமது நோர் பெரிக்காத்தான் (PN) பாஸ் (PAS) |
நாட்டுத் தலைவர் | கெடா சுல்தான் சலாவுதீன் |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 11 |
உறுப்புமை கட்சி | பெரிக்காத்தான் (PN) அரசாங்கம்
|
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 33 / 36 |
எதிர்க்கட்சித் தலைவர் | பாவ் ஓங் பாவ் எக் பாக்காத்தான் அரப்பான் (PH) – மக்கள் நீதிக் கட்சி (PKR) |
வரலாறு | |
Legislature term(s) | 15-ஆவது ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தொடர் |
கெடா ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பல துறைகளும் மாறுபடுகின்றன.
கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கெடா மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். கெடா ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.
அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்
தொகுஅரசாங்கப் பதவி | பெயர் |
---|---|
மாநிலச் செயலாளர் | பாக்கார் டின் (Bakar Din) |
மாநிலச் சட்ட ஆலோசகர் | நோர் அசுரா சோடி (Nor 'Azura Mohamed Zohdi) |
மாநில நிதி அதிகாரி | அமார் செயிக் மகமூட் நாயிம் (Ammar Shaikh Mahmood Naim) |
ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்
தொகு14 ஆகஸ்டு 2023 முதல் கெடா ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்:[1][2]
பெயர் | துறை | கட்சி | சட்டமன்றத் தொகுதி | பதவி தொடக்கம் | பதவி முடிவு |
---|---|---|---|---|---|
சனுசி முகமது நோர் மந்திரி பெசார் (Muhammad Sanusi Nor) |
|
பெரிக்காத்தான் (பாஸ்) |
ஜெனெரி சட்டமன்றத் தொகுதி (Jeneri) |
14 ஆகஸ்டு 2023 | தற்போது |
சித்தி ஆயிசா கசாலி (Siti Aishah Ghazali) |
|
மெர்பாவ் புலாஸ் சட்டமன்றத் தொகுதி (Merbau Pulas) |
21 ஆகஸ்டு 2023 | ||
முகமது ஆசாம் அப்துல் சமத் (Mohd Azam Abd Samat) |
|
சுங்கை லீமாவ் சட்டமன்றத் தொகுதி (Sungai Limau) | |||
ஆயிம் இல்மன் அப்துல்லா (Haim Hilman Abdullah) |
|
ஜித்ரா சட்டமன்றத் தொகுதி (Jitra) | |||
முனீர் முகமது யூசப் சக்காரியா (Munir Mohamad Yusoff Zakaria) |
|
கோலா நெராங் சட்டமன்றத் தொகுதி (Kuala Nerang) | |||
மன்சூர் சக்காரியா (Mansor Zakaria) |
|
கோலா கெட்டில் சட்டமன்றத் தொகுதி (Kuala Ketil) | |||
முகம்மத் ராதி மாட் டின் (Muhamad Radhi Mat Din) |
|
அலோர் மெங்குடு சட்டமன்றத் தொகுதி (Alor Mengkudu) | |||
அலிமாத்தோன் சாடியா சாட் (Halimaton Shaadiah Saad) |
|
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
புக்கிட் காயூ ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி (Bukit Kayu Hitam) | ||
சொவாகிர் கனி (Dzowahir Ab Ghani) |
|
சுக்கா மெனாந்தி சட்டமன்றத் தொகுதி (Suka Menanti) | |||
மொகமட் சாலே சாயிடின் (Mohd Salleh Saidin) |
|
குபாங் ரோத்தான் சட்டமன்றத் தொகுதி (Kubang Rotan) | |||
ஓங் சியா சென் (Wong Chia Zhen ) |
|
பெரிக்காத்தான் (கெராக்கான்) | கூலிம் சட்டமன்றத் தொகுதி (Kulim) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sanusi sworn in as Kedah MB". The Star. 14 August 2023. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
- ↑ "Bersatu gets 3 exco posts in Kedah, down by 2 from previous term". Malaysiakini. 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.