கெட்டி முதலிகள் மரபு

கெட்டி முதலி என்ற மரபினர் 17ஆம் நூற்றாண்டில் தாரமங்கலம் மற்றும் அமரக்குந்தி ஊர்களை தலைநகராக கொண்டு சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்ட பகுதிகளின் வைஸ்ராயாக இருந்தவர்கள்..

வரலாறு தொகு

கெட்டி முதலிகளின் தோற்றம் பற்றி இதுவரையில் தெளிவான சான்றுஎதுவும் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் கெட்டியர் என்ற வார்த்தை சில உள்ளது. இந்த சங்க இலக்கியத்தில் வரும் கெட்டியர் தான் இந்த கெட்டி முதலிகள் சிற்றரசர்கள் என்று சில ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் இதற்கும் தெளிவான சான்றுகள் ஏதும் இல்லை.[1]

பல நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள். இதை கெட்டி முதலியார்களில் ஆறு மன்னர்கள் பற்றி பெயர்கள் அதிகம் காணப்படுகிறது.

  • வேம்பன்கெட்டி முதலி
  • இனமன்கெட்டி முதலி
  • இம்முடிகெட்டி முதலி
  • மும்முடிகெட்டி முதலி
  • சீயாளிகெட்டி முதலி
  • வணங்காமுடிகெட்டி முதலி ஆகியோர் ஆவர்.[2]

இந்த சிற்றரசர்களால், தற்பொழுதுள்ள சேலம் மாவட்ட மக்களின் வாழ்க்கைச் சீர்மை மேலோங்கியது. மைசூர் அரசப்படையினரால், இச்சிற்றரசர்களின் நிலை மாறியது.

16ஆம் நூற்றாண்டு இறுதியில் ஓமலூர் குன்னி என்பவர் முதுகில் ஏற்பட்ட இராஜபிளவினை முதன் முதலில் நாவிதனாகவும், மருத்துவனாகவும் வந்த கெட்டி முதலி சிகிச்சை அளித்து சரி செய்ததால் பாளையம் குன்னிவேட்டுவரால் பரிசளிக்கப்பட்டு ஓமலூர் பாளையப்பட்டுக்காரர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன் பிறகு இவர்கள் ஆட்சி கிழக்கே தலைவாசல் வரையிலும், மேற்கில் தாராபுரம் வரையிலும், தெற்கில் கரூர் வரையிலும் பரவி மூவேந்தர்களின் சின்னங்களான புலி, வில், கயல் ஆகியவற்றுடன் சிங்கம், வண்ணத்தடுக்கு, வாடாமாலை ஆகிய சின்னங்களைத் தங்கள் கொடியில் பொறித்துக் கொண்டனர். இவர்களின் முக்கியத்தலைநகரம் தாரமங்கலமாகும், அதற்கடுத்தபடியில் அமரக்குந்தியாகவும் அமைந்தது.[3]

மெக்கன்சியின் சாம்பள்ளி ஆவணத்தில் சீயலாகட்டி தன் தெய்வ பக்தியினால்

இராசிபுரத்தில் தேகத்தை விட்டுத் தா ரமங்கலத்தில் சகுநாதசுவாமி சந்நிதியில்

போய் சகலமான சனங்களும் பார்த்துக்

கொண்டிருக்கின்ற போது உதிச்ச சாமத்துள்ளே

காலசந்தி பூஜை வேளையில் ஐக்கியமானார் என்று குறிப்பிட்டுள்ளார். [4]


மருத்துவம் கற்றல் தொகு

அவர்கள் தூங்கும் போது, பாம்பொன்று படமெடுத்து அருகில் நின்றது. அப்பொழுது அப்பக்கம் வந்த நாவிதன், அவர்களை பாம்பு தீண்டியதால் மயக்கம் வந்து விழுந்து விட்டனர் என்று கருதி அவர்களுக்கு மாற்றுமருந்து கொடுத்தான். பின்பு நிலையறிந்து அவர்களைத் தன்னுடன் இருக்குமாறு செய்து, அவர்களுக்கும் மருத்துவம் கற்றுத் தருகிறான். அவர்களும் சிறப்பாக அம்மருத்துவத் தொழிலைச் செய்தனர்.அக்காலத்தில் நாவிதர், மருத்துவம் கற்றனர். அதனால் அவர்களை மருத்துவர் என்றும், பண்டிதர் என்றும் அழைப்பர்.

மருத்துவத்தால் மாற்றம் தொகு

வேடர் பாளையப்பட்டின் மரபில் வந்தவனும், அமராவதிப் பட்டிணத்தில் ஆட்சி செய்தவனுமான, குன்னவேடர் என்பவனுக்கு, இராகபிளவை என்னும் நோயினால், அல்லல் பட்டான். அப்பொழுது இக்கெட்டி முதலி, அங்குச் சென்று மன்னனின் பிளவைக்கு மருத்துவம் பார்த்து, உடனே குணப்படுத்தினான். அதனால் மன்னனுக்கு கெட்டி மீது வாஞ்சை ஏற்பட்டு, அரசைக் கொடுக்க முன் வந்தான். எனக்கு வாரிசு உண்டுயென்றாலும் நீயே இப்பாளையபட்டை கட்டி ஆள வேண்டும். நான் வடக்கே செல்கிறேன். நீ இன்று போலவே, கெட்டியென்ற பெயருடனே அமராவதிப் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டான்.

திருமலைநாயக்கரின் ஆணை தொகு

திருமலை நாயக்கர்க்கும் கெட்டி முதலிக்கும் சமாதானம் உண்டானாப்பின்பு கெட்டி முதலி மதுரை சென்றான். மன்னர் திருமலை நாயக்கர் கெட்டி முதலியை பணியவைக்க வேண்டுமென்பதற்காக யானை மீது வரச் செய்தான். கோட்டை - அரண்மனை வாசலில் யானை மீது குனியாது வரச் செய்ய வேண்டுமென்பதே மன்னரின் குறிக்கோள். ஆனால் கெட்டி முதலி யானை மீது வரும் போது குனியாது முன்னுக்கு மல்லாந்து அரண்மனைக்குள் புகுந்தான், இதனால் மன்னர் திருமலை நாயக்கர் மகிழ்ந்தார். இது போன்ற செய்திகளெல்லாம் மெக்கன்சி தொகுப்பில் உள்ளன.[5][6]

கட்டிடக்கலை தொகு

கோவில்கள் தொகு

வீரத்திலும், பக்தியிலும் முதலிடம் வகித்த இவர்கள் ஆட்சி செய்த பகுதியில் அநேகக் கோயில்களை எழுப் பியும், கோயில்களில் திருப்பணியும் செய்துள்ளதைச் சரித்திர ஆதாரங்கள் எடுத்தியம்புகின்றன. கெட்டி முதலிகள் தாரமங்கலத்தில் அருள்மிகு கைலாசநாதர் அருள்மிகு இளமீஸ்வரர் கோயிலுக்கு நற்பணி செய்துள்ளனர்.இக்கோயில்களுக்கு நிலநிவந்தமாக இளவம்பட்டி என்ற ஊரினை அளித்துள்ளனர்.[7]

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் பவானி சங்கமேசுவரர் கோயில் ஆகிய கோவில்கள் கெட்டி முதலி குடும்பத்தால் திருப்பணி செய்யப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடிகெட்டி முதலிக்கு சிலை உள்ளது.[8]


கி.பி. 17ஆம் நுற்றாண்டுகளில் திருச்செங்கோடு மலைத்தம்பிரான்(அர்த்தநாரீஸ்வரர்), நிவத்தம்பிரான(கைலாசநாதர்) கோயில்களில் திருப்பணி ஆற்றியிருப்பதை சரித்திர ஆததாரங்கள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைப்பாதையில் உள்ள கோபுர வாசல் மண்டபம் சியாலகெட்டி முதலியாரால் கட்டபட்டது.[9]

வணங்காமுடி கெட்டி முதலி சிதம்பரத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றினையும் மண்டபம் ஒன்றினையும் எடுப்பித்துள்ளார். நிலத்தம்பிரான் கோயில் கருவறைச் சுவற்றில் கெட்டிமுதலியின் திருப்பணி கல்வெட்டில் பொடிவிக்கப்பட்டுள்ளது. [10]

கோட்டைகள் தொகு

அந்தியூர், ஆத்தூர், ஓமலூர், காவேரிபுரம், சோம்பள்ளி, பவானி, மேச்சேரி உட்பட 16 இடங்களில் கெட்டி முதலி வம்சத்தை சேர்ந்தவர்கள் கோட்டையை கட்டினர்.[11]

முக்கிய போர்கள் தொகு

17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் பலம் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் கெட்டி முதலி இனத்தை சேர்ந்த வணங்காமுடிகெட்டி முதலியார் மதுரை நாயக்கர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் கெட்டி முதலி பெயரில் பல கோவில்களை திருப்பணி செய்து கல்வெட்டுக்கள் பொறித்தனர்

இதன காரணமாக மதுரை மன்னன் திருமலை நாயக்கர் தளவாய் இராமப்பய்யனை ஈரோட்டுக்கு படையெடுத்து அனுப்பி வணங்காமுடிகெட்டி முதலியோரை சிறைப்படிக்க அனுப்பினர்.[12]

மதுரை தளவாய் இராமப்பய்யர் பல நாள் போரிட்டும் வணங்காமுடிகெட்டி முதலியை வெற்றிப்பெறவில்லை. போருக்குப் பின் வணங்காமுடிகெட்டி முதலியின் வீரம் பற்றி மதுரை தளவாய் இராமப்பய்யர் மன்னர் திருமலை நாயக்கர்க்கு கடிதம் எழுதியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகிறது.[13]

மைசூர் சாம்ராஜ்யத்தை எதிக்க மதுரை நாயக்கர்க்கு கெட்டி முதலிகளின் ஆதரவு தேவைப்பட்டதால் வணங்காமுடிகெட்டி முதலியிடம் திருமலை நாயக்கர் சமாதானம் செய்துக்கொண்டார். பின்பு கெட்டி முதலிக்கு பல மரியாதை செய்து தொடர்ந்து ஆளுனராக நியமித்தார்.[14]

1641ஆம் ஆண்டில் டணாகன் கோட்டையை மீட்டதற்கு மைசூர் வுடையாரிடம் கெட்டி முதலிகள் போர் செய்தனர் பின்பு சாம்பள்ளியில் நடைப்பற்ற போரில் கெட்டி முதலி படை பின்வாங்கியது.[15]

1641ஆம் ஆண்டு தெலுங்கு முதலிவம்சத்தை சேர்ந்த பெத்தடய்யன் முதலி மைசூரின் மீது போர் தொடுத்தார். இந்த போரில் சாம்பள்ளி ஆகிய இடங்களில் நிர்மூலமாக்கி ஈரோடு மாவட்டப் பகுதியை மைசூர் படை கைப்பற்றி னான். மைசூர்ப்படை மற்றும் முஸ்லீம் படை ஈரோடு கோட்டையில் நிலையாகத் தங்கியது. கெட்டி முதலிகளின் படையும் தொடர்ந்து பின்வாங்கியது.[16]

இவர்கள் அறுவரில் ஒரு ஒரு கெட்டி முதலியை சங்க்கிரியில் உருண்ட பாறைமேல் ஏற்றி எந்தப் பக்கமும் தப்பவோ, நகரவோ விடாமல் பலத்த காவலில் வைத்து பல நாட்கள் அவரைச் சித்ரவதை செய்து உயிர்ப்பிரிய வைத்துள்ளனர். பின்பு மைசூராருடன் நடைபெற்ற தொடர் போரில் கெட்டி முதலிகள் ராசிபுரத்தில் மறைந்து வாழ்ந்த காலத்தில் அவர் உயிர் பிரிய தாரமங்கலத்தில் ரகுநாத சுவாமி சன்னிதியில் இறைவனுடன் பலர் பார்த்துக் கொண்டிருக்கக் கலந்தார்.[17]

ஆதாரங்கள் தொகு

  1. Cēlam Māvaṭṭa Ōviyar, El̲uttāḷar Man̲r̲am (1996). தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள். the University of Michigan. https://books.google.co.in/books?id=7pBuAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&focus=searchwithinvolume&q=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF. 
  2. கலைமகள்
  3. Cēlam Māvaṭṭa Ōviyar, El̲uttāḷar Man̲r̲am (1996). தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள். the University of Michigan. https://books.google.co.in/books?id=7pBuAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF. 
  4. Cēlam Māvaṭṭa Ōviyar, El̲uttāḷar Man̲r̲am (1996). தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள். the University of Michigan. https://books.google.co.in/books?id=7pBuAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&focus=searchwithinvolume&q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF. 
  5. http://princelystatesofindia.com/Polegars/omalur.html
  6. தமிழ்நாட்டு சமுதாயமும் நாட்டுப்புற பண்புகாலும்
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
  8. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடி கெட்டி முதலி ஆண்டு விழா
  9. திருச்செங்கோடுத் திருத்தல வரலாறு, பக்கம். 51
  10. Cēlam Māvaṭṭa Ōviyar, El̲uttāḷar Man̲r̲am (1996). தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள். the University of Michigan. பக். 130. https://books.google.co.in/books?id=7pBuAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  11. Cēlam Māvaṭṭa Ōviyar, El̲uttāḷar Man̲r̲am (1996). தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள். the University of Michigan. பக். 117. https://books.google.co.in/books?id=7pBuAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&focus=searchwithinvolume&q=%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88. 
  12. புலவர் செ. இராசு (2007). ஈரோடு மாவட்ட வரலாறு. Tamil Digital Library. பக். 77. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdjZIy&tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/79. 
  13. புலவர் செ. இராசு (2007). ஈரோடு மாவட்ட வரலாறு. Tamil Digital Library. பக். 77. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdjZIy&tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/79. 
  14. புலவர் செ. இராசு (2007). ஈரோடு மாவட்ட வரலாறு. Tamil Digital Library. பக். 77. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdjZIy&tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/79. 
  15. புலவர் செ. இராசு (2007). ஈரோடு மாவட்ட வரலாறு. Tamil Digital Library. பக். 79. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdjZIy&tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/81. 
  16. புலவர் செ. இராசு (2007). ஈரோடு மாவட்ட வரலாறு. Tamil Digital Library. பக். 82. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMdjZIy&tag=%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/83. 
  17. Cēlam Māvaṭṭa Ōviyar, El̲uttāḷar Man̲r̲am (1996). தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள். the University of Michigan. https://books.google.co.in/books?id=7pBuAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF&focus=searchwithinvolume&q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டி_முதலிகள்_மரபு&oldid=3877163" இலிருந்து மீள்விக்கப்பட்டது