கெட்விக் ரெகோ

கெட்விக் வில்லியம் ரெகோ (Hedwig Rego)(பிறப்பு 16 அக்டோபர் 1937) என்பவர் ஆசிரியர், சமூக ஆர்வலர் மற்றும் பதினொராவது மக்களவையின் (1997) ஆங்கிலோ-இந்திய உறுப்பினர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கெட்விக் 1937ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்தில் வில்லியம் ஆண்டனி மைக்கேலுக்கு மகளாகப் பிறந்தார். கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று முதுகலை மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டங்களைப் பெற்றார்.[1]

தொழில்

தொகு

1977 முதல் 1997 வரை, ரெகோ பெங்களூரில் உள்ள பிராங்க் அந்தோணி பொதுப் பள்ளியில் மூத்த ஆசிரியராக இருந்தார். 1997ஆம் ஆண்டில், ஆங்கிலோ-இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களில் ஒன்றுக்கு, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு இவரை அரசு பரிந்துரைத்தது.[1] மக்களவை உறுப்பினராக இருந்த இவர் ஆங்கிலோ-இந்திய சமூகம் தொடர்பான பல பிரச்சனைகளை எழுப்பினார்.[2]

ரெகோ கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் பணியாற்றியுள்ளார். பெங்களூர் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் கில்ட் போன்ற ஆங்கிலோ-இந்திய நிறுவனங்களுடனும் இவர் ஈடுபட்டுள்ளார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ரெகோ சூன் 3, 1963-ல் டென்சில் ரெகோவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் பெங்களூரில் வசிக்கின்றனர்.[1] ரெகோ மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்றவர். இவர் வாழும் நகரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch: Hedwig Rego". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  2. "Shrimati Hedwig Michael Rego (Nominated Anglo-Indian)". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  3. "Mark of a true fighter". Bangalore Mirror. 30 April 2011. http://bangaloremirror.indiatimes.com/opinion/sunday-read//articleshow/21614398.cms. பார்த்த நாள்: 6 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்விக்_ரெகோ&oldid=3743841" இலிருந்து மீள்விக்கப்பட்டது