கென்னியா

போர்னியோ தீவில் வாழும் பழங்குடி மக்கள்.

கென்னியா அல்லது கென்னியா மக்கள் (மலாய்: Kaum Kenyah; ஆங்கிலம்: Kenyah People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில்; ஆஸ்திரோனீசிய மொழிகள் பேசும் பழங்குடிகள் மக்களாகும்.

கென்னியா
Kenyah
1944-க்கு முந்தைய வடக்கு கலிமந்தான் பகுதியில் ஓர் இளம் கென்னியா குடும்பம்.
மொத்த மக்கள்தொகை
69,256 (2000)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
 இந்தோனேசியா
(கிழக்கு கலிமந்தான்)
44,000 (2000)[2]
 மலேசியா
(சரவாக்)
25,000 (2000)[2]
மொழி(கள்)
கென்னியா மொழி, இந்தோனேசிய மொழி, மலேசிய மொழி சரவாக் மலாய் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம் (பெரும்பான்மை-94,27%), புங்கான் (நாட்டுப்புற மதம்),[3] இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பாகாய் மக்கள், காயான், பெனான்
கென்னியா நடனம்.

சரவாக் மாநிலத்தின் மிரி மாவட்டம்; காப்பிட் மாவட்டம்; பிந்துலு மாவட்டம்; பெலாகா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழும் பெரிய பழங்குடி இன மக்களாக அறியப் படுகிறார்கள். தவிர இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மற்றும் கிழக்கு கலிமந்தான் பகுதிகளிலும் அதிகமாகக் காணப் படுகிறார்கள்.

பொது தொகு

கென்னியா மக்கள் பல்வேறு பழங்குடி துணைக் குழுக்களாக (குலங்கள்) பிரிக்கப்பட்டு உள்ளனர். இந்தத் துணைக் குழுக்களை லெப்போ அல்லது லெபோ (Lepo Tribes; Lebo Clans) என்று அழைக்கிறார்கள்.

  • லெப்போ அனான் (Lepo Anan)
  • லெப்போ தாவு (Lepo Tau)
  • லெப்போ சாலான் (Lepu Jalan)
  • லெப்போ தெப்பு (Lepo Tepu)
  • லெப்போ அகாக் (Lepo Agak)
  • உமா கிலிப் (Uma Kelep)
  • உமா உசோக் (Uma Ujok)
  • உமா பாவா (Uma Pawa)
  • உமா கூலிட் (Uma Kulit)
  • உமா அலிம் (Uma Alim)
  • உமா லாசான் (Uma Lasan)
  • லெப்போ மாவுட் (Lepo Ma-ut)
  • லெப்போ கே (Lepo Ke)
  • லெப்போ நிகா (Lepo Ngao)
  • லோங் ஊலாய் (Long Ulai)
  • லோங் திக்கான் (Long Tikan)
  • லோங் சபத்து (Long Sabatu)
  • லெப்போ கா (Lepo Ga)
  • லெப்போ திகான் (Lepo Dikan)
  • லெப்போ பெம் (Lepo Bem)
  • லெப்போ இம்போ (Lepo Embo)
  • லெப்போ புவா (Lepo Pua)

வாழ்வியல் தொகு

 
கென்யா கட்டிடக்கலை; c.1898-1900.

கென்னியா மக்கள், பாரம்பரியமாக வேளாண்வாதிகள்; பெரும்பாலும் நீளவீடுகளில் (Uma Dado) வாழ்கின்றனர். ஒவ்வொரு நீளவீட்டிலும் வாழ்பவர்கள், தங்கள் சொந்தத் தலைவரைத் தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள்.[4]

அறுவடைத் திருவிழா போன்ற ஒரு நிகழ்வு அல்லது கொண்டாட்டம் வந்தால், அவர்கள் பொதுவாக நீளவீட்டின் தாழ்வாரத்தில் (Longhouse Verandah) ஒன்றுகூடுவார்கள். தங்களின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கான உரைகளை நிகழ்த்துவார்கள்.[5]

ஆக்கப்பூர்வமான மக்கள் தொகு

கென்னியா மக்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான மக்கள். அவர்கள் சொந்தமாகவே தங்களின் பிரபலமான பாடல்களை இயற்றியவர்கள். "லான் இ துயாங்" (Lan e Tuyang), "கெண்டாவ் பிம்பின்" (Kendau bimbin) மற்றும் "லெலெங் ஓயாவ் அலோங் லெலெங்" (Leleng Oyau Along Leleng) போன்ற மெல்லிசைப் பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[6]

இவர்களின் பிரபலமான பாரம்பரிய கென்னியா இசைக் கருவிக்கு சத்துங் உத்தாங் (Jatung Utang) என்று பெயர். மற்றோர் இசைக்கருவியின் பெயர் சாப்பே (Sapeh).[7]

மேற்கோள்கள் தொகு

  1. William W. Bevis (1995). Borneo Log: The Struggle For Sarawak's Forests. University of Washington Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780295974163. https://archive.org/details/borneologstruggl00bevi. 
  2. 2.0 2.1 Wil de Jong, Denyse Snelder & Noboru Ishikawa (2012). Transborder Governance of Forests, Rivers and Seas. Routledge. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-11-365-3809-4. 
  3. Paul C. Y. Chen, தொகுப்பாசிரியர் (1990). Penans: The Nomads of Sarawak. Pelanduk Publications. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:96-797-8310-3. 
  4. Bagoes Wiryomartono (2014). Perspectives on Traditional Settlements and Communities: Home, Form and Culture in Indonesia. Springer Science & Business Media. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-98-145-8505-7. 
  5. Reimar Schefold, P. Nas & Gaudenz Domenig (2004). Indonesian Houses: Tradition and transformation in vernacular architecture. Singapore University Press. பக். 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99-716-9292-9. 
  6. Terry Miller & Sean Williams, தொகுப்பாசிரியர் (2011). The Garland Handbook of Southeast Asian Music. Routledge. பக். 412. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-11-359-0155-4. 
  7. Margaret J. Kartomi (1985). Musical Instruments of Indonesia. Indonesian Arts Society. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:09-589-2250-0. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்னியா&oldid=3646137" இலிருந்து மீள்விக்கப்பட்டது