கெப்லர்-452
கெப்லர்-452 (Kepler-452) என்பது புவியில் இருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் சிக்னசு விண்மீன் குழாமில் அமைந்துள்ள ஒரு ஜி-வகை விண்மீன் ஆகும்.[1] இது நமது சூரியனை ஒத்த வெப்பநிலையைக் கொண்டிருந்தாலும், 20 விழுக்காடு அதிக பிரகாசமும், 3.7 விழுக்காடு நிறை, 11 விழுக்காடு அதிக விட்டமும் கொண்டதாகும்.[2][3] இதன் ஈர்ப்பு விசை 4.32±0.09 செகிசெ.[4] இது சூரியனை விட 1.5 பில்லியன் வயதில் கூடியதும், 6 பில்லியன் ஆண்டுகள் வயதும் கொண்டது.
இயல்புகள் | |
---|---|
விண்மீன் வகை | G2V |
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
பேரடை | சிக்னசு |
வல எழுச்சிக் கோணம் | 19h 44m 0.9s |
நடுவரை விலக்கம் | +44° 16′ 39.2″ |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | 1400 ஒஆ (430 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.037+0.054 −0.047 M☉ |
ஆரம் | 1.11+0.15 −0.09 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.32±0.09 |
ஒளிர்வு | 1.2 L☉ |
வெப்பநிலை | 5757±85 கெ |
அகவை | 6±2 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
KOI-07016, KIC-8311864, 2MASS 19440088+4416392 | |
தரவுதள உசாத்துணைகள் | |
NStED | 452-பி data |
இது குறைந்தது ஒரு கோளைக் கொண்டுள்ளது. கெப்லர்-452பி புறக்கோள் 2015 சூலையில் கெப்லர் விண்கலத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதை நாசா நிறுவனம் 2015 சூலை 23 இல் உறுதிப்படுத்தயது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Witze, Alexandra (சூலை 23, 2015). "NASA spies Earth-sized exoplanet orbiting Sun-like star". நேச்சர். http://www.nature.com/news/nasa-spies-earth-sized-exoplanet-orbiting-sun-like-star-1.18048. பார்த்த நாள்: 23 சூலை 2015.
- ↑ 2.0 2.1 (23 சூலை 2015). "NASA’s Kepler Mission Discovers Bigger, Older Cousin to Earth". செய்திக் குறிப்பு.
- ↑ Rincon, Paul (சூலை 23, 2015). "'Earth 2.0' found in Nasa Kepler telescope haul". பிபிசி. http://www.bbc.com/news/science-environment-33641648. பார்த்த நாள்: 23 சூலை 2015.
- ↑ "NASA Exoplanet Archive - Confirmed Planet Overview - Kepler-452b". NASA Exoplanet Archive. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.