கெப்லர்-62 என்பது லீரா பேரடையில் நமது சூரியனை விட சற்றே சிறிய அளவினதும், சற்றே வெப்பம் குறைந்ததுமான ஒரு சூரியன் ஆகும். இது பூமியிலிருந்து 1,200 ஒளியாண்டுகள் தொலையில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[3]

கெப்லர்-62
Kepler-62

கெப்லர்-62எஃப் (முன்னிலையில்) மற்றும் கெப்லர்-62இ (வலதுபுறத்தில்) ஆகிய உயிர்வாழ்தகு புறக்கோள்கள் இரண்டும் கெப்லர்-62 என்னும் சூரியனை (நடுவில்) சுற்றிவரலைக் காட்டும் படம்.
நன்றி: நாசா Ames/JPL-கால்டெக்
நோக்கல் தரவுகள்
ஊழி ஜே2000      Equinox ஜே2000
பேரடை லீரா
வல எழுச்சிக் கோணம் 18h 52m 51.06019s[1]
நடுவரை விலக்கம் +45° 20′ 59.507″[1]
இயல்புகள்
விண்மீன் வகைK2V[2]
விவரங்கள்
திணிவு0.69 (± 0.02)[2] M
ஆரம்0.64 (± 0.02)[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.68 (± 0.04)[2]
வெப்பநிலை4925 (± 70)[2] கெ
அகவை7 (± 4)[2] பில்.ஆ
வேறு பெயர்கள்

விண்வெளியில் உலவும் கோள்கள் தமது சூரியனைச் சுற்றிக் கடந்துசெல்வதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு நாசா நிறுவனம் விண்வெளியில் செலுத்தியுள்ள கெப்லர் (விண்கலம்), தனது பார்வைவீச்சில் கண்டுபிடித்த சூரியன்களுள் ஒன்றுக்கு கெப்லர்-62 என்று பெயரிடப்பட்டுள்ளது.

தகவல்கள்

தொகு

2013, ஏப்பிரல் 18ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கீழ்வரும் தகவல்கள் தெரிகின்றன:

  • கெப்லர்-62 என்னும் சூரியனுக்கு 5 கோள்கள் உள்ளன.
  • அக்கோள்களுள் இரண்டு மட்டும் திடத்தன்மை கொண்டவையாகவும், அச்சூரியனிலிருந்து பொருத்தமான தூரத்தில் அமைந்து, உயிர்வாழதகு நிலை கொண்டனவாகவும் உள்ளன. அந்த இரு கோள்களுக்கும் முறையே கெப்லர்-62இ, கெப்லர்-62எஃப் என்றும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன.[2][4][5]

அளவைகள்

தொகு

கெப்லர்-62 என்னும் சூரியன் நமது சூரியனின் பருமனில் 69% என்றும், ஆரையில் 62% என்றும் உள்ளது. அதன் மேல்மட்ட வெப்பம் 4925 ± 70 K ஆக உள்ளது. அது 7 ± 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.[6][7]

பூமியிலிருந்து நோக்கும்போது கெப்லர்-62 மிக மங்கலாக உள்ளதால் சாதாரண கண்பார்வைக்குத் தெரியாது. அதன் பிரகாச அளவு 13.8 என்று கணிக்கப்பட்டுள்ளது.

 
இடமிருந்து வலமாக, கெப்லர்-69சி, கெப்லர்-62இ, கெப்லர் 62-எஃப் ஆகிய கோள்கள் பூமியோடு ஒப்பிடப்படுவதைக் காட்டும் படம். பூமி தவிர மற்றவை கலைஞன் படைப்பு

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Kepler Input Catalog search result". Space Telescope Science Institute. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 William J. Borucki; et al. (18 April 2013). "Kepler-62: A Five-Planet System with Planets of 1.4 and 1.6 Earth Radii in the Habitable Zone". Science Express. doi:10.1126/science.1234702. http://www.sciencemag.org/content/early/2013/04/17/science.1234702. பார்த்த நாள்: 18 April 2013. 
  3. "பெரும்பூமி" - பிபிசி கட்டுரை]
  4. Johnson, Michele; Harrington, J.D. (18 April 2013). "NASA's Kepler Discovers Its Smallest 'Habitable Zone' Planets to Date". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம். பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
  5. Overbye, Dennis (18 April 2013). "2 Good Places to Live, 1,200 Light-Years Away". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/04/19/science/space/2-new-planets-are-most-earth-like-yet-scientists-say.html. பார்த்த நாள்: 18 April 2013. 
  6. Fraser Cain (16 September 2008). "How Old is the Sun?". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
  7. Fraser Cain (15 September 2008). "Temperature of the Sun". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.

மேல் ஆய்வுக்கு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கெப்லர்-62
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-62&oldid=1417133" இலிருந்து மீள்விக்கப்பட்டது