கெப்லர்-452

(கெப்லர் 452 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெப்லர்-452 (Kepler-452) என்பது புவியில் இருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் சிக்னசு விண்மீன் குழாமில் அமைந்துள்ள ஒரு ஜி-வகை விண்மீன் ஆகும்.[1] இது நமது சூரியனை ஒத்த வெப்பநிலையைக் கொண்டிருந்தாலும், 20 விழுக்காடு அதிக பிரகாசமும், 3.7 விழுக்காடு நிறை, 11 விழுக்காடு அதிக விட்டமும் கொண்டதாகும்.[2][3] இதன் ஈர்ப்பு விசை 4.32±0.09 செகிசெ.[4] இது சூரியனை விட 1.5 பில்லியன் வயதில் கூடியதும், 6 பில்லியன் ஆண்டுகள் வயதும் கொண்டது.

கெப்லர்-452
Kepler-452
இயல்புகள்
விண்மீன் வகைG2V
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை சிக்னசு
வல எழுச்சிக் கோணம் 19h 44m 0.9s
நடுவரை விலக்கம் +44° 16′ 39.2″
வான்பொருளியக்க அளவியல்
தூரம்1400 ஒஆ
(430 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.037+0.054
−0.047
M
ஆரம்1.11+0.15
−0.09
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.32±0.09
ஒளிர்வு1.2 L
வெப்பநிலை5757±85 கெ
அகவை6±2 பில்.ஆ
வேறு பெயர்கள்
KOI-07016, KIC-8311864, 2MASS 19440088+4416392
தரவுதள உசாத்துணைகள்
NStED452-பி data

இது குறைந்தது ஒரு கோளைக் கொண்டுள்ளது. கெப்லர்-452பி புறக்கோள் 2015 சூலையில் கெப்லர் விண்கலத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதை நாசா நிறுவனம் 2015 சூலை 23 இல் உறுதிப்படுத்தயது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Witze, Alexandra (சூலை 23, 2015). "NASA spies Earth-sized exoplanet orbiting Sun-like star". நேச்சர். http://www.nature.com/news/nasa-spies-earth-sized-exoplanet-orbiting-sun-like-star-1.18048. பார்த்த நாள்: 23 சூலை 2015. 
  2. 2.0 2.1 (23 சூலை 2015). "NASA’s Kepler Mission Discovers Bigger, Older Cousin to Earth". செய்திக் குறிப்பு.
  3. Rincon, Paul (சூலை 23, 2015). "'Earth 2.0' found in Nasa Kepler telescope haul". பிபிசி. http://www.bbc.com/news/science-environment-33641648. பார்த்த நாள்: 23 சூலை 2015. 
  4. "NASA Exoplanet Archive - Confirmed Planet Overview - Kepler-452b". NASA Exoplanet Archive. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-452&oldid=1885231" இலிருந்து மீள்விக்கப்பட்டது