கெர்மான்ஷா மாகாணம்

கெர்மான்ஷா மாகாணம் (Kermanshah Province (பாரசீகம்: استان كرمانشاه, Ostān-e Kermanšah) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். 1969 முதல் 1986 வரை கெர்மான்ஷாவானது 1986 முதல் 1995 வரை பாக்தரன் என்று அறியப்பட்டது.[4] 2014 இல் இந்த மாகாணமானது உள்துறை அமைச்சகத்தால் ஈரானின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதிகாக ஆக்கப்பட்டது.[5] இந்த மாகாணத்தின் நிர்வாக மையமாக கெர்மன்சா நகரம் உள்ளது. மாகாணத்தின் பெரும்பான்மை மக்களாக சியா இசுலாமியர்களும், சிறுபான்மை மக்களாக சுன்னி இசுலாமியர் மற்றும் யர்சானிசத்தவர்களும் உள்ளனர்.[6][7][8]

கெர்மான்ஷா
Kermanshah

استان کرمانشاه
மாகாணம்
கெர்மான்ஷா மாகாண மாவட்டங்கள்
கெர்மான்ஷா மாகாண மாவட்டங்கள்
ஈரானில் கெர்மான்ஷா மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் கெர்மான்ஷா மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°19′03″N 47°05′13″E / 34.3176°N 47.0869°E / 34.3176; 47.0869ஆள்கூறுகள்: 34°19′03″N 47°05′13″E / 34.3176°N 47.0869°E / 34.3176; 47.0869
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 4
தலைநகரம்கெர்மன்சா
மாவட்டங்கள்14
அரசு
 • ஆளுநர்அசதொல்லா ரஸானி
பரப்பளவு
 • மொத்தம்24,998
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்19,52,434
 • அடர்த்தி78
இனங்கள்[2]
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
முதன்மை மொழிகள்குர்தி உள்ளூர்
பாரசீகம் அதிகாரப்பூர்வமாக
அசர்பைஜான்[3]Just in Sonqor County

மாவட்டங்கள்தொகு

கெர்மான்ஷா மாகாணமானது 14 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவை கிலான்-இ-கர்ர்ப் கவுண்டி; ஹர்சின் கவுண்டி; இஸ்லாமாபாத்-இ கர்ர்ப் கவுண்டி; ஜாவான்ரூட் கவுண்டி; கங்காவர் கவுண்டி; கெர்மன்ஷா கவுண்டி; பவேஷ் கவுண்டி; கியாசர்-இ ஷிரின் கவுண்டி; ராவணர் கவுண்டி; சஹ்னாஹ் கவுண்டி; சர்போல்-இ ஜஹாப் கவுண்டி; சலாஸ்-இ பாபாஜானி கவுண்டி; சோனகர் கவுண்டி ஆகியவை ஆகும். கெர்மான்ஷா மாகாணத்தில் கெர்மன்சா; இஸ்லாமாபாத்-இ கர்ர்ப்; பவேஷ்; ஹர்சின்; கங்கவர்; சன்கியூர்; சவன்ரூத்; ரவன்சர்; கிலான்-இ-கர்ர்ப்; சகா; கஸ்ர்-இ ஷிரின் & சர்போல்-இ ஜஹாப் போன்ற உள்ள மாநகரங்களும் நகரங்களும் உள்ளன.

நலைநகரம்தொகு

மாகாணத்தின் தலைநகரான கெர்மன்சா (34°18′N 47°4′E / 34.300°N 47.067°E / 34.300; 47.067) ஈரானின் மேற்குப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. நகரின் மக்கள் தொகையானது 822,921 ஆகும்.

இந்த நகரமானது செஃபிடு கோச் மலைச் சரிவுகளில் அமைந்துள்ளது. இது கடந்த இரு தசாப்தங்களாக தெற்காக வளர்ந்து வருகிறது. கட்டப்பட்டுவரும் பகுதிகளானது சரப் ஆறு மற்றும் சரப் பள்ளத்தாக்கிற்கு அருகே உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1350 மீட்டர் உயரத்தில் நகரம் உள்ளது.

கர்மாண்ஷா மற்றும் தெகுரானுக்கு இடையே உள்ள தூரம் 525 கிமீ ஆகும். பிராந்தியத்தில் உற்பத்தியாகும் தானியங்கள், அரிசி, காய்கறி, பழங்கள், எண்ணெய் வித்துக்களை போன்ற வேளாண் பொருட்களின் மையமாக இது திகழ்கிறது. இங்கு பல தொழில்துறை மையங்களான, எண்ணெய் மற்றும் சர்க்கரை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சிமெண்ட், ஜவுளி மற்றும் மாவு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நகரின் வானூர்தி நிலையமானது (ஷாஹித் அஷ்ரஃபி எஸ்பாஹானி விமான நிலையம்) நகரின் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது தெஹ்ரானில் இருந்து வான் வழியாக 413 கிமீ தொலைவில் உள்ளது.

வரலாறுதொகு

இந்த மாகாணமானது பழமையான பாரம்பரிய இடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இங்கு பழைய கற்கால மக்கள் வாழ்ந்த பல குகைகள் கணக்கிடப்பட்டுள்ளன அல்லது அகழாய்வு செய்யப்பட்டுள்ன. இந்த குகை தளங்கள் சில கெர்மான்சாவின் வடக்கிலும், பிஸெட்டிலும் அமைந்துள்ளன. ஈரானில் உள்ள பிசுத்தியூன் குகையில் நியாண்டர்தால் மனிதன் உடற்கூறின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. டூ-அஷ்காஃப்ட், கோபே, வார்வாசி, மற்றும் மார் தரிக் போன்றவை இப்பகுதியில் உள்ள நடு பழைய கற்கால தலங்களாகும். கெர்மன்சாவில் பல புதிய கற்கால தளங்களும் உள்ளன, அவற்றில் கஞ்ச் தரே, சரப், ஆசியா ஆகியவை மிகவும் பிரபலமானவையாக உள்ளன. கஞ்ச் டேரேயில் ஆதிகாலத்தில் ஆடு வளர்க்கப்பட்டதற்கான ஆதாரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2009 மே மாதம் ஹமேடன் மற்றும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையாக கொண்டு, ஈரானின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைப்பின் தொல்லியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கி.மு 9800 ஆண்டுளுக்கு முந்தையதும், மத்திய கிழக்கின் பழைய வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கிராமமானது கெர்மன்சாவின் மேற்கில் அமைந்த சஹனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிவித்தார்.[9][10]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்மான்ஷா_மாகாணம்&oldid=2604690" இருந்து மீள்விக்கப்பட்டது